வெள்ளி, 23 மார்ச், 2018

தமிழ்தான் திராவிடமா?

தமிழ்தான் திராவிடம், திராவிடம்தான் தமிழ் என்று திராவிடிஸ்டுகள் கதைக்கிறார்கள்.
அரசியல்தளத்தில் தமிழ்தான் திராவிடம், திராவிடம்தான் தமிழ் என்று சொல்லி தமிழரை அடிமைப்படுத்த கதைக்கிறார்கள்.

உடைந்த பானையை ஒட்டவைக்க முடியாது.
தெலுங்கையும் , கன்னடத்தையும் மீண்டும் தமிழாக மாற்ற முடியாது.
அவர்கள் செம்மொழி அங்கீகாரமே வாங்கிவிட்டார்கள்.

மொழிக்குடும்பம் ஒன்றுதான்.
பழந்தமிழ் பல மொழிகளாக பரிணாம வளர்ச்சி அடைந்துவிட்டது.
தமிழ்வேறு, கன்னடம் வேறு, தெலுங்கு வேறு என்றாகிவிட்டது.
உடைந்த பானையை ஒட்டவைக்க முடியாது.

தெலுங்கும் கன்னடமும் சமஸ்கிருதம் கலந்து தூய்மை இழந்துவிட்டன.
சமஸ்கிருதத்தைப் பிரித்தால் தனித்தியங்காத மொழிகளாகிவிட்டன.
அவற்றைத் திராவிட மொழிகள் என்றுசொல்லி தமிழோடு கலந்தால் தமிழும் கெட்டுவிடும்.

தமிழ் சமஸ்கிருதம் கலக்காத தூயமொழியாக உள்ளது.
தமிழில் இரண்டொரு சமஸ்கிருத சொற்கள் கலந்திருப்பினும் அவற்றை அகற்றிவிட முடியும்.
தமிழ் தனித்தியங்கும் செம்மொழி.
தூயமொழி.

இந்தியும் ஆங்கிலமும், பிரெஞ்சும் சமஸ்கிருதமும் ஒரே மொழிக்குடும்பம்தான். ஆரிய மொழிக்குடும்பம்.

இந்தி வேறு, சமஸ்கிருதம்ம் வேறு, ஆங்கிலம் வேறு, பிரெஞ்சு வேறு என்றாகிவிட்டது.

அவற்றை ஒன்றாக்க முடியாது.
உடைந்த பானையை ஒட்ட வைக்க முடியாது.

அதைப்போலவே தெலுங்கரும் கன்னடரும் மலையாளியும் தமிழராகமாட்டார்.
தமிழர் கன்னடராகவும் தெலுங்கராகவும் மலையாளியாகவும ஆகமாட்டார்.

தொன்றுதொட்டுத் தமிழைத் தாய்மொழியாகப் பேசும் மரபில் பிறந்தவர்தான் தமிழர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக