சனி, 10 மார்ச், 2018

தமிழகத்தில் தெலுங்கர் ஆட்சி வரலாறு

தமிழகத்தில் தெலுங்கர் ஆட்சி வரலாறு.
=================

பிற்கால சோழராட்சிக் காலத்தில் கி.பி 1070 ல் அநபாயன் என்ற தெலுங்கன், அதிராசேந்திர சோழனைச் சதிசெய்து கொன்றுவிட்டு குலோத்துங்க சோழன் என்ற பெயரில் சோழராட்சியைக் கைப்பற்றினான்.
அவன் வழிவந்த தெலுங்கசோழர் பரம்பரையை பிற்கால பாண்டியர்கள் ஆட்சியிலிருந்து அகற்றினர்.

1370 ம் ஆண்டு ஆந்திராவையும் கர்நாடகாவையும் ஆண்ட விஜயநகரப் பேரரசின் இளவரசன் குமாரகம்பணன் என்ற தெலுங்கர் மதுரையைக் கைப்பற்றினார்.
அப்போது முதல் தமிழகம் தெலுங்கர் ஆட்சிக்கு உள்ளானது.
1529 ஆம் ஆண்டு காலகட்டத்தில் விஜயநகர பேரரசின்  ஆளுநர்களாக இருந்த தெலுங்க நாயக்கர்களின் பரம்பரை இராணுவ ஆட்சியில் தமிழகம் முற்றாக தெலுங்கர்களிடம் அடிமை ஆனது. சிறிது காலத்தில் தெலுங்க நாயக்கர்கள் விஜயநகரப் பேரரசிடமிருந்து தங்களை விடுவித்துக்கொண்டு சர்வாதிகாரம் பொருந்திய மன்னர்களாக தமிழகத்தை ஆளத்தொடங்கினர். அந்த காலகட்டத்தில்
ஏராளமான தெலுங்கர்கள் ஆந்திரத்திலிருந்து தமிழகத்திற்குக் குடியேறினர்.
தெலுங்க பிராமணர்களையும் அவர்களே தமிழகத்தில் குடியேற்றினர்.

தமிழர்களின் வளமான நிலங்களை எல்லாம் அரசுக்கே சொந்தமென சொல்லி தெலுங்கர்கள் கைப்பற்றிக் கொண்டனர்.
பள்ளர்கள் உட்பட தமிழ் விவசாயப்பெருங்குடி மக்கள் வளமான நிலத்தை இழந்து அடிமைச் சாதிகளாக மாறிப்போயினர். தமிழர்கள் விவசாய கூலிகளாக மாற்றப்பட்டனர்.

தமிழகத்தின் ஒவ்வொரு கிராமங்களையும் பாளையங்களாகப் பிரித்து தெலுங்க ராணுவத்தை நிறுத்திவைத்து தமிழரை எல்லாம் அடிமைப்படுத்தினர்.

நாயக்க மன்னர்கள் சார்பில் ஒவ்வொரு பாளையத்திலும் நிலைகொண்டிருந்த இராணுவ அதிகாரி பாளையக்காரன் என்று அழைக்கப்பட்டான்.
இராணுவ வல்லாதிக்க பாளையக்காரர்கள் தமிழர்களிடம் நிலத்தைப் பறித்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல் வரிக்கொடுமை செய்தனர்.

ஆங்கிலேயர்கள் வந்தபின் நாயக்க மன்னர்கள் மட்டுமே அதிகாரம் இழந்தனர். பாளையக்காரர்கள் எல்லாம் ஜமீன்தார்கள் என்று பெயரை மட்டுமே மாற்றிக் கொண்டனர்.
அதே ராணுவ ஆட்சியைத்தான் செய்தனர் தெலுங்க ஜமீன்தார்கள்.

ஆங்கிலேயர் இருக்கும் போதே பார்ப்பனப் பூச்சாண்டி காட்டி 1916 ல் நீதிக்கட்சியைத் தொடங்கி, 1920 முதல் பலமுறை அந்த தெலுங்கர்களே முதலமைச்சர்களாக இருந்தனர்.

1944 ல் திராவிடர் என்று பெயர்மாற்றிக் கொண்டு அந்த தெலுங்கர்களே பிறகு தமிழகத்தை நீண்டகாலம் ஆட்சி செய்துள்ளனர்.

1370 ஆம் ஆண்டுமுதல் இப்போதுவரை தமிழகத்தை ஆளுவது தெலுங்கர்கள்தான்.
அதுவே தொடர்கிறது.

திராவிட என்ற பெயருடைய கட்சி சார்பில் தமிழர்களான எடப்பாடியும் பன்னீரும் முதலமைச்சர் ஆகி இருப்பதுமட்டும் விதிவிலக்கு.

தமிழர்களிடம் ஆதிக்க சாதி என்றும் தலித் சாதி என்றும் சொல்லி சாதிச்சண்டைகளை மூட்டிவிட்டு தமிழரிடம் ஒற்றுமையைக் குலைப்பவர்கள் அந்த திராவிட தெலுங்கர்கள்தான்.
தமிழர்கள் சாதிச்சண்டை செய்துகொண்டு ஒற்றுமை அடையாமல் இருக்கும்வரை திராவிட தெலுங்கர்களுக்குக் கொண்டாட்டம்தான்.

" தமிழர்கள் ஒன்றுபட்டால் தமிழர்க்கு உண்டு வாழ்வு.
தமிழர்க்குள் ஒற்றுமை நீங்கினால் தமிழர்க்கே தாழ்வு".

" வாழும் உரிமை அனைவருக்கும்
ஆளும் உரிமை தமிழருக்கே".

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக