ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

கொங்கு நாடும் மக்களும்...

எது கொங்கு மண்டலம்? கொங்கு மண்டலத்தின் பூர்வகுடி மக்கள் யார்? திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி அருகே உள்ள வைகாவூரைத் தெற்கெல்லையாகவும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள தலைமலையை வடக்கெல்லையாகவும் கொண்ட நிலப்பரப்பே கொங்கு மண்டலம்.. அதாவது ஈரோடு, திருப்பூர், கோயமுத்தூர் மாவட்டங்களும், திண்டுக்கல் மாவட்ட வடக்குப்பகுதி, கரூர் மாவட்ட மேற்குப்பகுதி ஆகியவை மட்டுமே கொங்கு மண்டலம்.. காவிரிக்கு வடக்கேயும் கிழக்கேயும் உள்ள நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் கொங்குநாடு அல்ல. இந்த மாவட்டங்கள் மழநாடு என்றும் தகடூர்நாடு என்றும், தலைநீர்நாடு என்றும் சங்ககாலம் முதல் அழைக்கப்பட்டு வந்துள்ளன.

காவிரிக்கு வடக்கே நாமக்கல், சேலம் பகுதிகளில் உள்ள கொங்கு வெள்ளாளர்கள் காவிரிக்குத் தெற்கிலிருந்து குடியேறியவர்கள்.. காவிரிக்குத் தெற்கில் உள்ள கொங்கு வெள்ளாளர்களும் 800 ஆண்டுகளுக்கு முன்பு பிற்கால சோழராட்சிக்காலத்தில் சோழ மன்னர்களால் சோழ நாட்டிலிருந்தும் தொண்டை நாட்டிலிருந்தும் விவசாயம் செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டவர்கள்...

800 ஆண்டுகளுக்கு முன்பு கொங்கு மண்டலத்தில் கொங்கு வெள்ளாளர்கள் கிடையாது... 400 ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் மாவட்டத்திலும், 150 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மாவட்டத்திலும், 60 ஆண்டுகளுக்கு முன்பு தருமபுரி, கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் கொங்கு வெள்ளாளர்கள் கிடையாது... சேலத்திலிருந்து கள்ளக்குறிச்சி செல்லும் சென்னை நெடுஞ்சாலையில் இருபக்கமும் உள்ள நிலங்களை கடந்த 50 ஆண்டுகளுக்கு உள்ளாக வன்னியர்களிடமிருந்தும் பிற சாதியினரிடமிருந்தும் கொங்கு வெள்ளாளர்கள் வாங்கி குடியேறியுள்ளனர்... சேலம் தரும்புரி மாவட்டங்களில் கொங்கு வெள்ளாளர்களுக்கு குலதெய்வக் கோயில்கள் கிடையாது .. அனைவரும் குலதெய்வக் கோயில்களைத்தேடி தெற்கேதான் செல்கின்றனர்..

சேலம், தருமபுரி மாவட்டங்களில் கிராமங்களில் வன்னியர்கள் 80% உள்ளனர்... நகரங்களில் வன்னியர், முதலியார், கன்னட தேவாங்க செட்டியார் போன்றோர் உள்ளனர்... கொங்கு வெள்ளாளர்கள் மிகச் சிறுபான்மை மக்களாக ஆங்காங்கு, 10, 20 குடும்பங்களாக மட்டுமே உள்ளனர்...

ஈரோடு, திருப்பூர், கோயமுத்தூர் மாவட்டங்கள் கரூர் மாவட்ட மேற்கு ஆகிய பகுதிகளில் மட்டுமே கொங்கு வெள்ளாளர் பெரும்பான்மையாக உள்ளனர்... நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு வட்டத்தில் மட்டுமே கொங்குவெள்ளாளர்கள் பெரும்பான்மையாக உள்ளனர்... நாமக்கல் மாவட்டத்தின் கிழக்கு, வடக்குப் பகுதிகளில் வன்னியர்களே பெரும்பான்மை....

1975 க்கு முன்பு வரை வெள்ளாளர் என்றும், வெள்ளாளக் கவுண்டர் என்றும்தான் அழைக்கப்பட்டார்கள்.. அதன்பிறகு கொங்கு வேளாளர் என்று அரசு கெசட்டில் மாற்றிக்கொண்டார்கள்....

ஒட்டுமொத்த கொங்கு வெள்ளாளர்களும் பிற்கால சோழராட்சிக் காலத்தில் சோழ நாட்டிலிருந்தும், தொண்டை நாட்டிலிருந்தும் கொங்கு மண்டலத்தின் காங்கேயம் , பெருந்துறை பகுதிகளுக்கு குடியேறி அங்கிருந்து பிறகு பரவியுள்ளனர்... கொங்கு மண்டலத்தின் பூர்வகுடி மக்கள் கொங்கு வெள்ளாளர் அல்ல..

ஆதாரம்: சோழன் பூர்வ பட்டயம்....

காவிரிக்குக் தெற்கே ஈரோடு, திருப்பூர், கோயமுத்தூர் மாவட்டங்களின் பூர்வகுடி மக்கள் வேட்டுவர்கள்.. காவிரிக்கு வடக்கே உள்ள நாமக்கல், சேலம், தருமபுரி மாவட்டங்களின் பூர்வகுடி மக்கள் வன்னியர்கள்... வன்னியர்களுக்கு இப்பகுதிகளில் எல்லா இடங்களிலும் குலதெய்வக் கோயில்கள் உள்ளன....

கொங்கு 24 நாடுகள் என்ற கதையெல்லாம் கொங்கு வெள்ளாளர் குடியேற்றத்திற்குப் பிறகு தோன்றிய வரலாற்றுக் கதைகள்....

நாடு என்றால் பரந்த நிலப்பரப்பு, அதனை ஆளும் மன்னர், படைவீரர் ஆகிய கட்டமைப்புகளைக் கொண்டிருக்க வேண்டும்...

கொங்கு வெள்ளாளர்கள் சொல்லும் 24 நாடுகள் என்பவை நாடுகள் அல்ல.. அவை கொங்கு வெள்ளாளர்கள் குடியேறிய கிராமங்கள். கொங்கு வெள்ளாளர் குடியேறி வாழ்ந்த ஒவ்வொரு கிராமத்தையும் நாடு என்றும் கிராமத் தலைவரை( ஊர்த் தலைவர்) நாட்டார் என்றும் சொல்லியுள்ளனர்...

  • சோழன் பூர்வ பட்டயம்*

கொங்கு நாட்டில் உழவு தொழில் செய்வதற்காக சோழ நாட்டின் செந்தலை நகர் ,படைதலை நகர் ,பாலசேரி நகர் ,தென்திசையூர் நகர் போன்ற பகுதிகளில் இருந்து வெள்ளாளர்களை அடிமைகளாக அழைத்து வந்தவர்கள் வேட்டுவ மன்னர்கள் . சோழ நாட்டின் செந்தலை நகர் ,படைதலை நகர் ,பாலசேரி நகர் ,தென்திசையூர் நகர் போன்ற பகுதிகளில் இருந்து வந்த வெள்ளாளர்களை படைதலை வெள்ளாளர் ,செந்தலை வெள்ளாளர்,பால வெள்ளாளர்,தென்திசை வெள்ளாளர் என்று அழைக்கபடுகிறது .பதினெண் குடிமக்களில் உழவு தொழில் செய்பவர்கள் வெள்ளாளர்கள் என்று சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது . கொங்கு நாட்டில் 36 ஊர்களில் உழவு தொழில் செய்வதற்காக சோழ நாட்டு வெள்ளாளர்களை அழைத்து வந்தவர்கள் சேர ,சோழ ,பாண்டிய அரசர்கள் என்று சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது . சேர ,சோழ ,பாண்டிய அரசர்கள் கொங்கு நாட்டில் 36 ஊருக்கும் தாசிகளை வைத்தார்கள் என்று சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது . சேர ,சோழ ,பாண்டிய அரசர்கள் கொங்கு நாட்டில் 36 ஊர்களில் 32 ஊர்களுக்கு கோட்டை ,நகர் ,ஊர் அதிகாரத்துக்கு வேட்டுவர்களை வைத்தார்கள் என்று சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது . வேட்டுவ மண்ணாடிகளுக்கு ,வெள்ளாளர்கள் வரி கொடுத்ததை பற்றி சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது . (மண்ணாடி-நில தலைவன் ).

  • கூட்டப் பெயர்கள்*

வேட்டுவர் இனத்துக்கும் , வெள்ளாளர் இனத்துக்கும்(கொங்கு வெள்ளாளர் ) கூட்ட பெயர்கள் ஒன்றாக இருப்தை பயன்படுத்தி வெள்ளாள சாதினர் ,வேட்டுவ இன வரலாறுகளை திருடி கொள்கிறார்கள் .

உதாரணம் : '...இப்படிக்கு பூந்துறையில் வெள்ளாளன் மேலைசாகாடைகளில் அப்பியன் எழுத்து..இப்படிக்கு எழுமாத்தூரில் வெள்ளாளன் பனகாடர்களில் பெரியன்ன காகுதார் எழுத்து..இப்படிக்கு குலவிளக்கில் பண்டி வேட்டுவரில் புலிகுத்தி தேவன் எழுத்து...இப்படிக்கு அறைச்சலூரில் கரைய வேட்டுவரில் குன்றிடர் எழுத்து..இப்படிக்கு குழாநிலையில் வெள்ளை வேட்டுவரில் நல்லண்ணன் எழுத்து .., (1967-68:231,கிபி 16,வீர நஞ்சராயர் ,பெருந்துறை கல்வெட்டு ) '..சோழியன் கரை ஒன்றுக்கும் அந்துவ வேட்டுவரில் சிறுவன் கரை ஒன்றுக்கும் மேற்படி நச்சுளி வேட்டுவரில் சிறுவன் கரை ஒன்றுக்கும் குறுங்காடை வேட்டுவரில் சின்னன் கரை ஒன்றுக்கும் வெள்ளாளன் தனிஞ்சிகளில் தயாண்டர் கரை ஒன்றுக்கும் ..' (ARE No-226 of 1968, ஈரோடு கல்வெட்டு ,கிபி 1538,திருமலை நாயக்கர் ) இக்கல்வெட்டு அந்துவ வேட்டுவர் -அந்துவ வேட்டுவ கூட்டம் நச்சுளி வேட்டுவர் - நச்சுளி வேட்டுவ கூட்டம் குறுங் காடை வேட்டுவர் -குறுங் காடை வேட்டுவ கூட்டம் (குறும்பூழ் -காடை) தனிஞ்சி வெள்ளாளர் - தனிஞ்சி வெள்ளாள கூட்டம் போன்ற கூட்ட பெயர்களை கூறுகிறது . '...வெள்ளாளன் அந்துவரில் செய கரிவான்டரும் ..' (காங்கேயம் கல்வெட்டு ,கிபி 1537,விஜய நகர் ஆட்சி ) இன்று காடை வேட்டுவவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .காடை வேட்டுவர்களின் குல தெய்வம் கொங்கலம்மன் (பெரிய புலியூர் ,ஈரோடு ) இன்று காடை குல வேட்டுவர்கள் தன்னோட சாதி வேட்டுவ சாதி என்று தான் கூறுகிறார்கள் . இன்று காடை குல வெள்ளாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .இவர்கள் தன்னோட சாதி வெள்ளாள சாதி என்று தான் கூறி வருகிறார்கள் . இங்கு காடை வேட்டுவ குலமும் ,காடை வெள்ளாள குலமும் ஒரே சாதி கிடையாது . இன்று அந்துவ வேட்டுவவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .அந்துவ வேட்டுவர்களின் குல தெய்வம் பத்ரகாளியம்மன் (அந்தியூர் ,ஈரோடு ) இன்று அந்துவ குல வேட்டுவர்கள் தன்னோட சாதி வேட்டுவ சாதி என்று தான் கூறுகிறார்கள் . இன்று அந்துவ குல வெள்ளாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள் .இவர்கள் தன்னோட சாதி வெள்ளாள சாதி என்று தான் கூறி வருகிறார்கள் . இங்கு அந்துவ வேட்டுவ குலமும் ,அந்துவ வெள்ளாள குலமும் ஒரே சாதி கிடையாது . இது தான் உண்மை . இது போலத்தான் மற்ற குலங்கள். வெள்ளாளர்கள் கொங்கு நாட்டில் குடி ஏறுகிற போது கூட்டம் அல்லது குலம் கிடையாது . கி பி 10ஆம் நூற்றாண்டுகளில் வெள்ளாளர்கள் கொங்கு நாட்டில் குடி ஏறுகிற போது வெள்ளாளர் களை பல கூட்டங்களாக பிரிக்கப்பட்டு சாட்சி கையெழுத்து போட்டவர்களில் ஒருவர் வேட்டுவர் என்று கொங்கு காணியான பட்டயம் கூறுகிறது . இன்று வேட்டுவ குலத்துக்கும் ,வெள்ளாள குலத்துக்கும் 20 கூட்ட பெயர்கள் ஒன்றாக இருக்கிறது .இதற்கு காரணம் வெள்ளாளர்கள் ,பெருமைமிக்க வேட்டுவ கூட்ட பெயர்களை பார்த்து அதே கூட்ட பெயர்களை வைத்து கொண்டார்கள்.