*பழங்காலம் முதல் இக்காலம் வரை தமிழ்நாட்டை யாரெல்லாம் ஆண்டிருக்கிறார்கள்?*
👉 நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து கிபி 2ஆம் நூற்றாண்டு வரை *சேரர், சோழர், பாண்டியர்* ஆகிய மூவேந்தர்கள் மற்றும் *தொண்டைமான்கள், பாரி, ஓரி, காரி முதலான குறுநில மன்னர்கள்* (இவர்கள் *தமிழர்*).
இக்காலத்தில் சோழர் தலைநகரம் பூம்புகார், உறையூர், பழையாறை. பாண்டியர் தலைநகரம் மதுரை. சேரர் தலைநகரம் பெரியாறு அரபிக் கடலில் கலக்கும் இடமான வஞ்சி என்ற கொடுங்களூர். தொண்டைமான்களின் தலைநகரம் காஞ்சிபுரம்.
👉 கிபி 2ஆம் நூற்றாண்டு முதல் கிபி 4ஆம் நூற்றாண்டு தொடக்கம்வரை *களப்பிரர்*. ( இவர்கள் தமிழரா? யார்? எங்கிருந்து வந்தார்கள்? என்று தெரியவில்லை).
👉 கிபி 4ஆம் நூற்றாண்டு தொடக்கம்முதல் கிபி 9ஆம் நூற்றாண்டு வரை *பல்லவர்கள்*. (இவர்கள் *தமிழர்*). பல்லவர் தலைநகரம் காஞ்சிபுரம். இவர்களின் கடற்கரை தலைநகரம் மாமல்லபுரம்.
👉 கிபி 9ஆம் நூற்றாண்டு முதல் கிபி 13ஆம் நூற்றாண்டு வரை *சோழர்கள்.* (இவர்கள் கிபி 850 முதல் கிபி 1070 வரை *தமிழர்*.
கிபி 1070 முதல் கிபி 1279 வரை தாய்வழியில் தமிழர் தந்தைவழியில் தெலுங்கர்). சோழர் தலைநகரம் தஞ்சாவூர் பிறகு கங்கைகொண்டசோழபுரம்.
👉 கிபி 13ஆம் நூற்றாண்டு முதல் கிபி 14ஆம் நூற்றாண்டு வரை *பாண்டியர்*. (இவர்கள் *தமிழர்*). பாண்டியர் தலைநகரம் மதுரை.
👉 கிபி 14ஆம் நூற்றாண்டு முதல் கிபி 17ஆம் நூற்றாண்டு வரை *விஜயநகரப் பேரரசர்கள் மற்றும் நாயக்க மன்னர்கள்*. (இவர்கள் *தெலுங்கர்*). விஜயநகரப் பேரரசர்கள் கர்நாடகாவில் ஹம்பி என்ற ஊரில் இருந்து ஆண்டார்கள். அவர்களின் ஆளுநர்களாகத் தமிழகத்திற்கு வந்த நாயக்க மன்னர்கள் மதுரை, தஞ்சை, செஞ்சி ஆகிய ஊர்களைத் தலைநகராகக் கொண்டு ஆண்டார்கள்.
👉 கிபி 17ஆம் நூற்றாண்டு முதல் 20ஆம் நூற்றாண்டின் இடைக்காலம் 1947 வரை *ஆங்கிலேயர்*. இவர்களின் தலைநகரம் சென்னை, கல்கத்தா, டில்லி.
👉 *1920 முதல் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர்களில் யாரெல்லாம் தமிழர்?* யாரெல்லாம் தெலுங்கர்? யாரெல்லாம் மலையாளி? யாரெல்லாம் கன்னடர்? யாரெல்லாம் ஆரியர்?
1. சுப்பராயலு ரெட்டியார்- தெலுங்கர்
2. பனகல் ராஜா தெலுங்கர்
3. *பி. சுப்பராயன் - தமிழர்*
4. முனுசாமி நாயுடு- தெலுங்கர்
5. பொப்பிலி ராஜா- தெலுங்கர்
6. *பி.டி.ராஜன் -தமிழர்.*
7. கே.வி.ரெட்டி நாயுடு - தெலுங்கர்.
8. இராஜாஜி - தெலுங்க பிராமணர் - ஆரியர்
9. டி.பிரகாசம் - தெலுங்கர்.
10. ஓ.பி.ராமசாமி ரெட்டியார் - தெலுங்கர்.
11. பி.எஸ்.குமாரசாமிராஜா -தெலுங்கர்
11. *காமராஜர் - தமிழர்*
12. *எம்.பக்தவச்சலம் - தமிழர்*
13. அண்ணாதுரை - தெலுங்கர்
14. கருணாநிதி - தெலுங்கர்
15. எம்ஜிஆர் - மலையாளி
16. ஜானகி - மலையாளி
17. ஜெயலலிதா - கன்னட பிராமணர் - ஆரியர்
18. *ஓ.பன்னீர்செல்வம் - தமிழர்*
19. *எடப்பாடி பழனிசாமி -தமிழர்*
தமிழ்நாடு தமிழர் நாடு. தமிழ்நாட்டைத் தமிழர்தான் ஆள வேண்டும்.
"வாழும் உரிமை அனைவருக்கும்.
ஆளும் உரிமை தமிழருக்கே".
குறிப்பு:
சாளுக்கிய நாட்டு இளவரசனாக இருந்த அனபாயன் என்பவனின் தந்தை இராஜராஜ நரேந்திர சாளுக்கியன். அவன் தெலுங்கன். தாய் சோழனின் மகள். அவள் தமிழச்சி. அதாவது அனபாயன் என்பவன் ராஜராஜ சோழனின் மகள் வழிக் கொள்ளுப்பேரன். இரண்டாம் ராஜேந்திர சோழனின் மகள் வழிப் பேரன்.
1070 ல் அதிராசேந்திர சோழன் சோழப்பேரரசின் மன்னனாக முடிசூட்டிக்கொள்கிறான். அவன் சில மாதங்களிலேயே இறந்துவிடுகிறான். அதிராசேந்திர சோழனுக்கு வாரிசு இல்லை. அதனால் சாளுக்கிய இளவரசனான அனபாயன் என்பவன் அதிராசேந்திர சோழனின் இறப்புக்குப் பிறகு குலோத்துங்க சோழன் என்ற பெயரில் சோழப்பேரரசின் மன்னனாக 1070 ல் முடிசூட்டிக் கொண்டான். அவன் வழியினர் 1279 வரை சோழப்பேரரசை ஆண்டனர்.