புதன், 22 ஆகஸ்ட், 2018

1920 முதல் தமிழ்நாட்டின் முதல்வர்களாக இருந்தவர்களில் யார் தமிழர்?

*1920 முதல் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர்களில் யாரெல்லாம் தமிழர்?* யாரெல்லாம் தெலுங்கர்? யாரெல்லாம் மலையாளி? யாரெல்லாம் கன்னடர்? யாரெல்லாம் ஆரியர்?

1. சுப்பராயலு ரெட்டியார்- தெலுங்கர்

2. பனகல் ராஜா தெலுங்கர்

3. *பி. சுப்பராயன் - தமிழர்*

4. முனுசாமி நாயுடு- தெலுங்கர்

5. பொப்பிலி ராஜா- தெலுங்கர்

6. *பி.டி.ராஜன் -தமிழர்.*

7. கே.வி.ரெட்டி நாயுடு - தெலுங்கர்.

8. இராஜாஜி - தெலுங்க பிராமணர் - ஆரியர்

9. டி.பிரகாசம் - தெலுங்கர்.

10. ஓ.பி.ராமசாமி ரெட்டியார் - தெலுங்கர்.

11. பி.எஸ்.குமாரசாமிராஜா -தெலுங்கர்

11. *காமராஜர் - தமிழர்*

12. *எம்.பக்தவச்சலம் - தமிழர்*

13. அண்ணாதுரை - தெலுங்கர்

14. கருணாநிதி - தெலுங்கர்

15. எம்ஜிஆர் - மலையாளி

16. ஜானகி - மலையாளி

17. ஜெயலலிதா - கன்னட பிராமணர் - ஆரியர்

18. *ஓ.பன்னீர்செல்வம் - தமிழர்*

19. *எடப்பாடி பழனிசாமி -தமிழர்*

*தமிழ்நாடு தமிழர் நாடு. தமிழ்நாட்டைத் தமிழர்தான் ஆள வேண்டும்.*

அண்ணாதுரை தெலுங்கரா???
அவர் காஞ்சிபுரத்தில் முதலியார் அல்லவா? என்கின்றனர் விவரம் தெரியாதவர்கள்.
அண்ணாதுரையின் தாய் பங்காரு அம்மாள் சின்னமேளம் என்ற தெலுங்கு சாதி.
அண்ணாதுரையின் தந்தை நடேசன் தெலுங்கு முதலியார்.

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

ஆங்கில மொழியின் வரலாறு:

*தமிழில் பேசினாலோ எழுதினாலோ கேவலமாகப் பார்க்கும் பக்கிகளே!*
நாலு இங்கிலிஸ் வார்த்தைகளைத் தெரிந்துகொண்டு மேதாவி போல பந்தா காட்டும் உங்களுக்கு *ஆங்கில மொழியின் வரலாறு* தெரியுமா? நிச்சயமாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தெரிந்துகொள்ளுங்கள்.
👇👇👇
*ஆங்கிலம் என்பது என்ன?*

*ஆங்கில மொழியின் வரலாறு*

மூன்று ஜெர்மானிய இனக்குழுவினர் பிரிட்டனின் மேல் கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் படையெடுத்து வந்ததில் இருந்து ஆங்கிலத்தின் வரலாறு ஆரம்பிக்கிறது. ஆங்லர்கள், சாக்சன்கள், யூட்டுகள் என்ற இந்த இனக்குழுக்கள் வட கடலைத் தாண்டி இன்றைய டென்மார்க் மற்றும் வட ஜெர்மனி பகுதிகளில் இருந்து வந்தனர். அப்போது பிரிட்டனில் வாழ்ந்து வந்தவர்கள் ஒரு செல்ட்டிக் மொழியைப் பேசி வந்தனர். ஆனால் பெரும்பாலான செல்டிக் மொழியினர், ஆக்கிரமிப்பாளர்களால் மேற்கும் வடக்குமாக நெருக்கித் தள்ளப்பட்டனர் – முக்கியமாக இன்று வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து என அழைக்கப்படும் பகுதிகளுக்கு. ஆங்கில்கள் ”எங்கலாந்த்” (மேற்கோள்படி)தில் இருந்து வந்தவர்கள். அவர்கள் மொழி “எங்கலிஸ்”. இந்தச் சொற்களில் இருந்து முறையே “இங்க்லாண்ட்” மற்றும் “இங்லிஷ்” என்ற சொற்கள் உருவாகின.
கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் ஜெர்மானிய ஆக்கிரமப்பாளர்கள் பிரிட்டனின் கிழக்கு மற்றும் தெற்குக் கடலோரம் நுழைந்தனர்.

*பழைய ஆங்கிலம் (450-1100 AD)*

படையெடுத்து வந்த ஜெர்மானிய இனக்குழுக்கள் பேசிய மொழிகள் ஒன்றுபோல் இருந்தன. அது பிரிட்டனில் நாம் இன்று அழைக்கும் பழைய ஆங்கிலமாக வளர்ந்தது. பழைய ஆங்கிலம் இன்றைய ஆங்கிலம் போல் இருக்கவும் இல்லை; ஒலிக்கவும் இல்லை. ஆங்கிலேயரால் இன்று பழைய ஆங்கிலத்தைபுரிந்து கொள்ளுவது மிகவும் சிரமம். இருந்த போதிலும் நவீன ஆங்கிலத்தில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பாதிச் சொற்களின் வேர்கள் பழைய ஆங்கிலமே. எடுத்துக்காட்டாக be, strong மற்றும் water ஆகிய சொற்கள் பழைய ஆங்கிலச் சொற்களே. ஏறத்தாழ கி.பி.1100 வரை பழைய ஆங்கிலம் பேசப்பட்டது.

*இடைக்கால ஆங்கிலம் (1100-1500)*

1066-ல் நார்மண்டி (நவீன பிரான்சின் ஒரு பகுதி) பிரபு வெற்றிவீரன் வில்லியம் இங்கிலாந்தின் மீது படையெடுத்து அதைப் பிடித்தான். இந்தப் புதிய ஆக்கிரமிப்பாளர்கள் (நார்மன்கள் என்று அழைக்கப்பட்டனர்) தங்களோடு ஒரு புதுவிதமான பிரஞ்சு மொழியைக் கொண்டு வந்தனர். இது அரசவை, அதிகார மற்றும் வணிக வர்க்கத்தின் மொழியானது. ஒரு கால கட்டத்திற்கு மொழி சார்ந்த வர்க்கப் பிரிவினை நிலவியது: உயர் வகுப்பினர் பிரஞ்சு மொழியும் தாழ்ந்த வகுப்பினர் ஆங்கிலத்தையும் பேசினர். 14 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலம் மீண்டும் தனது செல்வாக்கைப் பெற்றது. ஆனால் பல பிரஞ்சு சொற்கள் அதில் கலந்தன. இந்த மொழி இடைக்கால ஆங்கிலம் என அழைக்கப்பட்டது. இதுவே மாபெரும் கவிஞனான சாசரின் மொழி (கி.பி.1340-1400). ஆனால் இதனை இன்றைய ஆங்கிலேயர்களால் புரிந்து கொள்ளுவது மிகவும் கடினமே.

*தற்கால ஆங்கிலம்*

ஆரம்பகால நவீன ஆங்கிலம் (1500-1800)

இடைக்கால ஆங்கிலத்தின் இறுதிக் கட்டத்தில், உச்சரிப்பில் ஒரு குறிப்பிட்ட திடீர் மாற்றம் நிகழ்ந்தது (மாபெரும் உயிரெழுத்து மாற்றம்). உயிர் எழுத்துகள் குறுகலாக ஒலிக்கப்பட்டன. 16-ஆம் நூற்றாண்டில் இருந்து பிரிட்டானியர்கள் உலகின் பல மக்களோடும் தொடர்பு கொண்டனர்.
இதனாலும், செம்மொழிக் கல்வியின் மறுமலர்ச்சியாலும், பல புதிய சொற்களூம் சொற்றொடர்களும் மொழியில் புகுந்தன. அச்சு கண்டுபிடிக்கப்பட்டதால் ஒரே பொதுமொழி அச்சில் ஏறியது. புத்தகங்கள் மலிவானது. பலர் படிக்கக் கற்றனர். அச்சு, ஆங்கிலத்தைத் தரப்படுத்தியது. இலக்கணம் நிலையானது. பல பதிப்பகங்களைக் கொண்ட இலண்டனில் பேசப்பட்ட மொழி தரமானதாக மாறியது. 1604-ல் முதல் ஆங்கில அகராதி வெளியிடப்பட்டது.

பிற்கால நவீன ஆங்கிலம் (1800-இன்று வரை)

ஆரம்பகால நவீன ஆங்கிலத்திற்கும், பிற்கால நவீன ஆங்கிலத்திற்கும் இடையில் இருக்கும் முக்கிய வேறுபாடு சொற்தொகுதியே. பிற்கால நவீன ஆங்கிலத்தில் மிகவும் அதிகமான சொற்கள் உள்ளன. இவை இரண்டு முக்கிய காரணிகளில் இருந்து வந்தவை. முதலில், தொழிற் புரட்சியும் தொழிற்நுட்பமும் புதிய சொற்களுக்கான தேவையை உருவாக்கின. இரண்டாவதாக, ஆக்கிரமிப்பின் உச்சகட்டத்தில் பிரித்தானியப் பேரரசு உலகின் நான்கில் ஒரு பகுதியை ஆக்கிரமித்தது. ஆங்கில மொழி பல நாடுகளில் இருந்து சொற்களைத் தழுவிக்கொண்டது.

*ஆங்கிலத்தின் வகைகள்*

கி.பி. 1600 – களில் இருந்து வட அமெரிக்காவை இங்கிலாந்து குடியேற்ற நாடாக மாற்றியதால் தனித்துவமான அமெரிக்க வகை ஆங்கிலம் உருவானது. அமெரிக்க வகை ஆங்கிலம் நவீன பிரிட்டிஷ் ஆங்கிலத்தை விட ஷேக்ஸ்பியரின் ஆங்கிலத்தைப் போல் இருந்தது. பிரிட்டிஷ்காரர்கள் அமெரிக்க ஆங்கிலம் என்று சொல்வது உண்மையில் குடியேற்ற நாடுகளில் பாதுகாக்கப்பட்ட சொற்றொடர்களே. ஆனால் அவை பிரிட்டனில் மறைந்து போய்விட்டிருந்தன. இன்று அமெரிக்க ஆங்கிலம் மட்டுமல்லாமல், ஆஸ்திரேலிய ஆங்கிலம், நியூசிலாந்து ஆங்கிலம், கனடா ஆங்கிலம், தென் ஆப்பிரிக்க ஆங்கிலம், இந்திய ஆங்கிலம், காரிபியன் ஆங்கிலம் என பலவகை ஆங்கிலம் உள்ளன.
ஆங்கிலம் ஜெர்மானிய குடும்ப மொழிகளைச் சார்ந்தது. ஜெர்மானியமொழிகள் இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் கிளைமொழி.

அமெரிக்க ஆங்கிலம் (History of American English):

மொழி வல்லுனர்களின் கூற்றுப் படி ஆரம்பத்தில் இங்கிலாந்திலும் அமெரிக்க குடியேற்றப் பகுதிகளிலும் பேசப்பட்டது ஒரே மாதிரியான ஆங்கிலம் தான்.
பிரித்தானியாவின் ஆதிக்கத்தில் இருந்த அமெரிக்காவில் வரி செலுத்தல் தொடர்பில் 1775 இல் யுத்தம் மூண்டது. இந்த யுத்தத்தில் பிரித்தானியா படு தோழ்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1776 யூலை 4 இல் சுதந்திர பிரகடனம் செய்துக்கொண்டது. அமெரிக்காவின் சுதந்திரத்தைத் தொடர்ந்து அமெரிக்க ஆங்கில பேச்சிலும் ஒலிப்பிலும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.
பிரித்தானிய ஆட்சியிலிருந்து தன்னாட்சி பெற்றதைப் போன்று அவர்களது மொழியிலும் தனித்துவம் இருக்க வேண்டும் என பல அமெரிக்கர்கள் விரும்பினர்.
சில அமெரிக்க தலைவர்கள் தமது மொழியில் மாற்றங்கள் செய்ய தீர்மானித்தனர். அறிவியலாளர் பெஞ்சமின் பிறான்கிளின். (Benjamin Franklin [1706-1790]) அமெரிக்க ஆங்கில எழுத்திலக்கணத்திலும் ஒரு சீர்திருத்த முறைமை அவசியம் என்பதை வலியுறுத்தினார்.
இருப்பினும் இவரது எண்ணம் நிராகரிக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் அவரது எண்ணக்கருவை மற்றவர்கள் செயல்படுத்த விளைந்தனர்.
அவர்களில் ஒருவரே நோவா வெப்ஸரர்.
(Noah Webster [1758-1843]) நோவா வெப்ஸரர் பாடசாலைகளுக்கான புத்தகங்களை எழுதினார். அவை பிரித்தானிய ஆங்கில முறைமையில் இருந்து மாறுபட்டதாக, அதேவேளை அமெரிக்க இலக்கண முறைமைகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டன. அத்துடன் அமெரிக்கர்கள் கட்டாயம் அமெரிக்கப் புத்தகங்களையே கற்க வேண்டும் என்பது அவரது எண்ணம். அதுவே காலப்போக்கில் நிலைத்தும் விட்டது.
இவரே 1783ல் முதல் அமெரிக்க ஆங்கில சொல்லிலக்கணப் புத்தகத்தையும் வெளியிட்டவராவர்.
அவரது மொழி சீர்த்திருத்தமை
ப்பில் அமைந்த ஆங்கில ஒலிப்பு முறைகளும் சொல்லிலக்கணமுமே இன்றைய அமெரிக்க ஆங்கிலமாக திகழ்கின்றது.
1828 இல் முதல் அமெரிக்க ஆங்கில அகராதி வெளியிடப்பட்டது. அதனை வெளியிட்டவர் நோவா வெப்ஸ்டர்.(First American Dictionary) பிரிட்டிஸ் ஆங்கில சொல்லிலக்கண விதி முறைகள் மிகவும் சிக்கலானவை என நோவா வெப்ஸ்ர் கருத்து தெரிவித்தார். அதனால் அவர் அமெரிக்க சொல்லிலக்கணப்பட
ியே அமெரிக்க ஆங்கில பதிப்புக்கள் அமையவேண்டும் என எண்ணியதுடன் அதனை நடைமுறையில் செயல்படுத்தினார்.
அதன்படியே அமெரிக்க ஆங்கில எழுத்திணக்கத்தில் மாற்றங்கள் ஏற்படலாயின.
பிரிட்டிஸ் ஆங்கிலத்தில் “ c-e-n-t-r-e” என எழுதப்படுவதில் கடைசி எழுத்துக்களான “t-r-e” (டர்) உச்சரிப்பிற்கு அமைவாக இல்லை என்பது நோவா வெப்ஸ்ரரின் முடிவு. எனவே அமெரிக்க ஆங்கிலத்தில் “center” “c-e-n-t-e-r” என மாற்றப்பட்டது.
பிரிட்டிஸ் ஆங்கிலம்: centre, theatre
அமெரிக்க ஆங்கிலம்: center, theater
பிரிட்டிஸ் ஆங்கிலத்தின் “h-o-n-o-u-r” – எனும் சொல்லின் “u” ஒலிப்பில் இல்லாத அவசியமற்ற எழுத்தென கருதி, அமெரிக்க ஆங்கிலத்தில் இந்த “u” அகற்றப்பட்டு “h-o-n-o-r” என எழுதப்படுகின்றது.
பிரிட்டிஸ் ஆங்கிலம்: colour, honour, favourite
அமெரிக்க ஆங்கிலம்: color, honor, favorite
பிரிட்டிஸ் ஆங்கிலத்தில் “realise” என உச்சரிக்கும் போது இச்சொல்லின் கடைசி எழுத்துக்களான “se” ஒலிப்பு “றியலைZஸ்” என ஒலிப்பதால் இதுப்போன்ற சொற்களின் கடைசி எழுத்துக்கள் "ze" என அமெரிக்க ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகின்றது.
பிரிட்டிஸ் ஆங்கிலம்: realise, theorise, socialise, analyse
அமெரிக்க ஆங்கிலம்: realize, theorize, socialize, analyze
ஒரு சொல்லின் ஒவ்வொரு எழுத்தும் ஒலிப்புடன் பேசப்படவேண்டும் என்பது நோவா வெப்ஸ்ரரின் விதி முறையாகும்.
நோவா வெப்ஸ்ரரின் இவ்விதி முறைக்கமைய ஒரு சொல்லின் ஒவ்வொரு பாகங்களும் ஒலிப்புடன் பேசப்பட வேண்டும் எனும் முறை, பிரித்தானிய ஆங்கிலத்தை விட, அமெரிக்க ஆங்கிலத்தை எவரும் எளிதாக கற்கக் கூடியதாக இருக்கின்றது.
ஐரோப்பிய மற்றும் உலகின் பல்வேறு மொழியினரும் ஐக்கிய அமெரிக்காவில் குடியேறியதன் விளைவால், பற்பல பிற மொழிச் சொற்களும் அமெரிக்க ஆங்கிலத்தில் உள் நுழைந்தன. அடிமைகளாக அழைத்துச் செல்லப்பட்ட ஆப்பிரிக்கர்களின் மொழியில் இருந்தும் பல சொற்கள் அமெரிக்க ஆங்கிலத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டன. இவை அமெரிக்க ஆங்கிலத்தின் சீர்த்திருத்தத்திற்கு பெரிதும் உதவிதாகக் கூறப்படுகின்றது.
ஒப்பீட்டளவில் பிரிட்டிஸ் ஆங்கிலத்தில் இல்லாத நிறையச் சொற்கள் அமெரிக்க ஆங்கிலத்தின் சொல்வளத்தை பெருக்கியுள்ளது. அமெரிக்க பூர்வீகக் குடிகளான செவ்விந்திய மொழிகளில் இருந்தும் பல சொற்களை அமெரிக்க ஆங்கிலம் உள்வாங்கிக்கொண்டது.
இன்று அமெரிக்க, பிரிட்டிஸ் ஆங்கில சொற்களிற்கிடையே பல வேறுப்பாடுகள் உள்ளன. சில சமயம் இவர்கள் பேசும் போது ஒருவருக்கொருவர் விளங்கிக்கொள்ள முடியாத அளவில் பல சொற்கள் இருப்பதனையும் அறியமுடிகின்றது.
உதாரணம் சில சொற்கள்:
பிரிட்டிஸ் ஆங்கிலம்: Flat
அமெரிக்க ஆங்கிலம்: Apartment
பிரிட்டிஸ் ஆங்கிலம்: Lift
அமெரிக்க ஆங்கிலம்: Elavator
பிரிட்டிஸ் ஆங்கிலம்: Chips
அமெரிக்க ஆங்கிலம்: Fries
மேலும் அமெரிக்காவின் Hollywood திரைப்படத்துறையின் வளர்ச்சி, இசை, பாடல்கள், விஞ்ஞான வளர்ச்சி, நவீன கற்பித்தல் முறை, தொழில் வழங்கல், தொழில் நுட்பம், இணையம் என இன்னும் பல்வேறு வழிகளில் பிரித்தானிய ஆங்கிலத்தை விடவும் அமெரிக்க ஆங்கிலம் பலரையும் ஈர்த்து வருகிறது. அமெரிக்க நாகரிகமும் இன்று உலகின் பல்வேறு மக்களில் மோகமாக மாறிவருகின்றது என்பதும் ஒரு காரணியாகும். இவை அமெரிக்க ஆங்கிலத்தை உலக அரங்கில் மென்மேலும் வலுப்படுத்தி வருகிறது.
இன்று ஆங்கிலம் என்பது இன்னொரு மொழியினருடன் பேசும் கருவியாக மட்டுமன்றி, அதிகாரம், அரசியல், சமூக அந்தஸ்து, கலாச்சாரம் என பல்வேறு மட்டங்களில் ஈர்க்கும் இணைக்கும் ஒரு உலகலாவிய ஊடகமாக மாறிவருகிறது.
அமெரிக்க ஆங்கில வரலாற்றிற்கு முற்பட்ட ஆங்கில மொழியின் வரலாறு இங்கே சொடுக்கி பார்க்கலாம்.
பிரிட்டிஸ் ஆங்கிலத்திற்கும் அமெரிக்க ஆங்கிலத்திற்கும் இடையில் சொற்களில் மட்டுமன்றி, இலக்கணத்திலும், ஒலிப்பிலும் கூட வேறுபாடுகள் உள்ளன.