செவ்வாய், 19 நவம்பர், 2019

வெள்ளாளர்கள் கொங்கு நிலத்திற்கு வந்தேறிய காலம் :

வெள்ளாளர்கள் கொங்கு நிலத்திற்கு வந்தேறிய காலம் :

முல்லை நிலமாதலால், காடும், காடும் சார்ந்த நிலங்களாக கொங்கு காட்சியளித்தது. இங்கு வாழ்ந்த இனக் குழுக்கள், வேடர், ஆயர் மற்றும் எயினர் ஆகும். வேடர்கள் வேட்டைத் தொழிலையும் ஆயர்கள் கால் நடைவளர்த்தல், தினை, வரகு, அவரை, துவரை முதலிய பயிர்களை பயிரிடல் (விண்ணோக்கிய வேளாண்முறை) என்ற முறையில் பொருளாதார வாழ்க்கை இருந்தது. இவர்களுக்குள் கூட்டப்பிரிவுகள் இருந்தன. தாம் வாழும் முறை மற்றும் இடங்களுக்கேற்ப கூட்டப்பெயர்கள் நிலைத்து இருந்தன. திருமணத்திற்கான ஒழுக்க முறை கூட்டங்களிடையே வரையறை செய்யப்பட்டிருந்தது. 

                                                       சோழ, பாண்டிய அரசுகளின் பொருளாதார தேவை கூடியது. நெல் அதிக உபரியை வழங்கும் தானியம் என்பதால், நெல்விளையும் நிலங்களிலும் முல்லை மற்றும் குறிஞ்சி நிலங்களிலும் பயிரிட முயற்சி எடுத்தனர். எனவே, பிரமதேயம் மற்றும் கோயில்கட்டி அதற்கான நிலங்களை உருவாக்க முனைந்தது. கொங்கு நாடு அதற்கு வசதியாக இருந்தது. இந்நிலத்தில் அமராவதி, நொய்யல், பவானி போன்ற ஆறுகளும், சண்முகநதி, பாலாறு, பெருந்தலாறு போன்ற சிறிய நதிகளும் ஓடிக்கொண்டிருந்தது.

பல்வேறு கூட்டப்பெயர்களுடன் வேட்டுவர்களும், ஆயர்களும் இனக்குழுவாக வாழ்ந்து வந்தனர். வேட்டுவர்கள் வேட்டைத் தொழிலும், ஆயர்கள் கால்நடை வளர்ப்பும், தானியம் பயிரிடல் என்ற அளவில் பொருளாதார வாழ்வு இருந்தது. “ஆ கெழு கொங்கர்’’ “கொங்கர் ஆ பரந்தன்ன’’ என சங்க இலக்கியம் இவர்களைப் பதிவு செய்துள்ளது.       

                                                                                  கொங்கு தவிர்த்த இதரப்பகுதிகளில் வேளாண் தொழில் செய்வோரை, பாண்டிய வேளாளர், சோழிய வேளாளர் என அழைக்கப்பட்டு வந்தனர். இங்கு வேளாளர் என யாரும் இல்லை. எனவே, தஞ்சை தொண்டைமண்டலம் (புதுக்கோட்டை) ஆகிய பகுதிகளில் இருந்து வேளாளர்கள் கொங்கில் குடியேறினர் (நிக்கல்சன் 1887:86) இதையே, ”சோழன் பூர்வபட்டயம்’’, “அண்ணமார்கதை’’, “கொங்கு வேளாளர் புராணம்’’, ஆகியன உறுதிப்படுத்துகிறது. 

குடியேறிய வேளாளர்கள் அங்குள்ள வேடர்களிடம் ரத்தக்கலப்பை கொண்டு , அவர்களின் கூட்டு பெயர்களை இவர்களும் வைத்துகொண்டனர் .

 இதன் பிறகே , அதாவது சுமார் 10-ஆம் நூற்றாண்டுக்கு பிறகே கல்வெட்டுகளில் வேளாளர் என்று பொறிக்கப்பட்டுள்ளது என அறிகிறோம். 

வேளாளர் என்ற சொல்லுக்கு வெள்ளத்தை ஆள்பவர் என்ற பொருள் உண்டு. 

சோழ நாட்டில் உள்ள விவசாய குடிகளான வெள்ளாளர்களில் இருந்து கொங்கு நிலத்திற்கு குடிபெயர்ந்து அங்குள்ள வேடவர் ஆயர்களுடன் ரத்தக்கலப்பை ஏற்படுத்திக் கொண்ட இனம் கொங்கு வெள்ளாளர் இனம் ..

அதற்க்கு முன்பு சோழ நாட்டில் விவசாய குடியாக சோழிய வெள்ளாளர் மற்றும் பள்ளர்களே இருந்தனர் எனலாம் ..

இவர்களில் இருந்து சென்ற இனம் கொங்கு வெள்ளாளர் ..

கொங்கு பகுதிக்கு சென்றதால், இவர்கள் "கொங்கு வெள்ளாளர் " என்று அழைக்க பட்டனர் ..

அதாவது  பிற்கால சோழர் ஆட்சி தொடங்கி சாளுக்கிய சோழர்கள் ஆட்சி செய்யும் காலம் உருவாகும் போதுதான், "கொங்கு வெள்ளாளர் " என்ற தனி இனமும் கொங்கு நிலத்தில் உதையமாகிறது  ..

சோழன் பூர்வ பட்டயம் குறிப்பிடுவது :

சோழன் நாட்டில் இருந்து சேரநாட்டிற்கு (கொங்கு பகுதி ) வந்தேறிய வெள்ளாளர்கள் , அப்பகுதியின் பெயரை அடையாளமாக கொண்டு கொங்குநாட்டு வெள்ளாளர் (அ ) கொங்கு வெள்ளாளர் என்று அழைக்கலாயினர் ..

கொங்கு நாட்டில் உள்ள வெள்ளாளர்கள் பெரும்பான்மையினோர் சோழநாட்டின் செந்தழையில் இருந்து வந்தமையால் , இன்றும் அவர்கள் செந்தாழை வெள்ளாளர் என்று அழைக்கபடுவதும் உண்டு .

இவ்விதமாக கொங்கு வெள்ளாளர் குடியேற்றம் பற்றி சோழன் பூர்வ பட்டயம் குறிப்பிடுகிறது  

கி.பி.பத்து-பதினாறாம் நூற்றாண்டுகளில், வேளாளர்கள் மிகச் சிறந்த முறையில் வேளாண்மையை முன்னேற்றி, உணவுப் பொருள்களை
உற்பத்தி செய்து,பொருளாதாரத் துறையில் பெரிதும் முன்னேறினர். கொங்கு நாட்டின் பூர்வ குடிகளான வேட்டுவரின் பொருளாதார நிலை
சிறிது தாழ்ந்தது.

சில இடங்களில் வேட்டுவர்க்கும், வேளாளர்க்கும் போட்டியும் பூசல்களும் ஏற்பட்டன. கி.பி.12-13 ஆம் நூற்றாண்டுகளில் இருவர்க்குமிடையே சமரசமும், சமாதானமும் ஏற்பட்டன. 

வேட்டுவரின் நில உரிமைகளும்,கோயில் வழிபாட்டு, முப்பாட்டு உரிமைகளும் வேளாளர் கைக்கு மாறின.

வேட்டுவர்-வேளாளரிடையே நிகழ்ந்த காணியாட்சி உரிமை மாற்றம், வேளாளரின் பொருளாதார உயர்ச்சி ஆகியவை பற்றிய செய்திகள் சோழன் பூர்வபட்டயம் எனும் சாசனத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. வேட்டுவர்களைப் போன்று வேளாளர்களும் தமக்குள் கூட்டப் பெயர்களைப்(குலம்) பூண்டனர்.

திங்கள், 18 நவம்பர், 2019

கொங்கு வெள்ளாளர் குடியேற்ற வரலாறு

கொங்கு வெள்ளாளர் குடியேற்ற வரலாறு...

வன்னியர்களான சோழமன்னர்களால் சோழநாட்டிலிருந்தும், தொண்டை நாட்டிலிருந்தும் 900 ஆண்டுகளுக்கு முன்பு கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு ஆகிய கொங்குமண்டல பகுதிக்கு குடியேற்றப்பட்டவர்கள்தான் தற்போதைய கொங்கு வெள்ளாளர்கள்.
இவர்களின் பூர்வீகம் கொங்குமண்டலம் அல்ல.
வன்னியர்களான சோழர் மன்னர்களால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள் இந்த கொங்கு வெள்ளாளர்கள்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டார கொங்கு வெள்ளாளர்கள் பிற்காலத்தில் 400 ஆண்டுகளுக்கு முன்பு காவிரிக்குத் தெற்கிலிருந்து குடியேறியவர்கள்.
இவர்கள் காவிரிக்கு வடக்கே குடியேறிய பிறகு காவிரிக்குத் தெற்கிலுள்ள கொங்கு வெள்ளாளர்களுடன் திருமண உறவு வைத்துக்கொள்ளாமல் நாட்டுக்கவுண்டர் என்ற பெயரில் தனி சாதியினராகப் பிரிந்துவிட்டனர். நாமக்கல் மாவட்ட கொங்கு வெள்ளாளர்கள் அனைவருமே காவிரிக்குத் தெற்கே இருந்து காவிரிக்கு வடக்கே பிற்காலத்தில் குடியேறியவர்கள்தான்.

பிறகு அங்கிருந்து குறைந்த எண்ணிக்கையில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் பகுதிக்கு குடியேறியுள்ளனர்.
இங்கிருந்து பிறகு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்புதான் தருமபுரி பகுதிக்கு பஞ்சம் பிழைக்க மிகக்குறைந்த எண்ணிக்கையில் சென்றுள்ளனர்.

400 ஆண்டுகளுக்கு முன் நாமக்கல் மாவட்டத்தில் கொங்கு வெள்ளாளர்கள் கிடையாது.
100 ஆண்டுகளுக்கு முன் சேலம் மாவட்டத்தில் கொங்கு வெள்ளாளர்கள் கிடையாது.
40 ஆண்டுகளுக்கு முன் தருமபுரி மாவட்டத்தில் கொங்கு வெள்ளாளர்கள் கிடையாது.

காவிரிக்கு வடக்கே நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் கொங்குநாடு அல்ல. இப்பகுதி மழநாடு. வன்னியர் மண்டலம்.
இங்குள்ள கொங்குவெள்ளாளர்கள் வந்தேறிகள்.

ஈரோடு, திருப்பூர், கோயமுத்தூர் மாவட்டங்கள், கரூர் மாவட்ட மேற்குப்பகுதி ஆகிய பகுதிகள் மட்டுமே கொங்குநாடு. இந்த கொங்கு பகுதியின் பூர்வ குடிமக்கள் வேட்டுவர்கள்..

கொங்கு வெள்ளாளர்கள் கொங்கு மண்டலத்தில் குடியேறிகள்......

ஆதாரம்: சோழன் பூர்வ பட்டயம்....

கொங்கு நாட்டில் உழவு தொழில் செய்வதற்காக சோழ நாட்டின் செந்தலை நகர் ,படைதலை நகர் ,பாலசேரி நகர் ,தென்திசையூர் நகர் போன்ற பகுதிகளில் இருந்து வெள்ளாளர்களை அடிமைகளாக அழைத்து வந்தவர்கள் வேட்டுவ மன்னர்கள் .

சோழ நாட்டின் செந்தலை நகர் ,படைதலை நகர் ,பாலசேரி நகர் ,தென்திசையூர் நகர் போன்ற பகுதிகளில் இருந்து வந்த வெள்ளாளர்களை படைதலை வெள்ளாளர் ,செந்தலை வெள்ளாளர்,பால வெள்ளாளர்,தென்திசை வெள்ளாளர் என்று அழைக்கபடுகிறது .பதினெண் குடிமக்களில் உழவு தொழில் செய்பவர்கள் வெள்ளாளர்கள் என்று சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது .

கொங்கு நாட்டில் 36 ஊர்களில் உழவு தொழில் செய்வதற்காக சோழ நாட்டு வெள்ளாளர்களை அழைத்து வந்தவர்கள் சேர ,சோழ ,பாண்டிய அரசர்கள் என்று சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது .

சேர ,சோழ ,பாண்டிய அரசர்கள் கொங்கு நாட்டில் 36 ஊருக்கும் தாசிகளை  வைத்தார்கள் என்று சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது .
சேர ,சோழ ,பாண்டிய அரசர்கள் கொங்கு நாட்டில் 36 ஊர்களில் 32 ஊர்களுக்கு கோட்டை ,நகர் ,ஊர் அதிகாரத்துக்கு வேட்டுவர்களை வைத்தார்கள் என்று சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது .

வேட்டுவ மண்ணாடிகளுக்கு ,வெள்ளாளர்கள் வரி கொடுத்ததை பற்றி சோழன் பூர்வ பட்டயம் கூறுகிறது .
(மண்ணாடி-நில தலைவன் ).

வெள்ளாள சாதியினர் ,வேட்டுவ இனத்தை அண்டிப் பிழைத்தவர்கள்.
இன்று கொங்கு நாட்டில் வெள்ளாள சாதியினர் வழிபாடும்  அனைத்து காளி கோயில்களும் வேட்டுவ இனத்தை ஏமாற்றி  வெள்ளாள சாதியினர் உரிமையாக்கிக் கொண்டவையாகும் . 

கிபி 1975 களில் "வெள்ளாள சாதி" என்ற பெயரை "கொங்கு வெள்ளாளர்" என்று சாதிகள் பட்டியலில் கொண்டுவந்தனர். அதற்கு முன்பு கொங்கு வெள்ளாளர் என்ற பெயர் கிடையாது. வெள்ளாளக் கவுண்டர், நாட்டுக்கவுண்டர் என்றுதான் சொல்வார்கள்.

இந்த கொங்கு மண்டத்தில் குடியேறிகளான கொங்கு வெள்ளாள சாதிக்குத் தனியாக "கொங்குநாடு" என்ற பெயரில் தனிமாநிலம் வேண்டுமாம். 
ஒவ்வொரு சாதிக்கும் தனிமாநிலம் பிய்த்துக்கொடுப்பதற்குத் தமிழ்நாடு ஒன்றும் பஞ்சுமிட்டாய் அல்ல.