புதன், 21 மார்ச், 2018

வர்ணாஸ்ரமம் தமிழர்களுக்கு அல்ல.

வர்ணாஸ்ரம வித்துவான்கள் கொஞ்சம் இங்க வாங்கப்பா!

////////// மனுஸ்மிருதி :

‘சூத்ரோ ப்ராமணதாமேதி ப்ராமணஸ்சைதி சூத்ரதாம்
க்ஷத்ரியாஜ்ஜாதவேதம் து வித்யாத்வைச்யாத்ததைவ ச’

அதாவது – ‘சூத்திரன் பிராமணனாகி விடலாம்; பிராமணனும் சூத்திரனாகலாம்; அதே போல், க்ஷத்ரிய மற்றும் வைசிய வர்ணங்களைச் சார்ந்தவர்களின் மகன்களும், மகள்களும் வேறு வர்ணத்தை அடையலாம்’. ஆக, சூத்திரர்கள் வேதம் கற்கக் கூடாது என்று சொல்லும் அதே மனு தர்மம்தான் அவர்கள் வேதம் ஓதும் பிராமணர்கள் ஆகலாம் என்று சொல்கிறது. இதை மற்றோர் விதமாய் சொல்ல வேண்டுமானால், வேதம் ஓத விருப்பம் தெரிவிப்பவன் பிராமணனாக மாறியே அவ்வாறு செய்ய இயலுமேயன்றி சூத்திரனாகவே இருந்து செய்ய இயலாது.  இதில் யாரும் எந்த வகையிலும் தடுக்கப்படவோ ஒடுக்கப்படவோ இல்லை.                                          
                               
மனுஸ்மிருதி :                                                    
அஜ்யேஷ்டாஸோ அகனிஷ்டாஸ ஏதே
ஸம் ப்ராதரோ வாவ்ருது: ஸௌபகாய
(ரிக்)

பொருள்:  உங்க‌ளில் உய‌ர்ந்த‌வ‌ர் தாழ்ந்தவ‌ர் என்று யாரும் கிடையாது. நீங்க‌ள் அனைவ‌ரும் ச‌கோத‌ர‌ர்க‌ளே! என‌வே ஒன்றுப‌ட்டு வாழ்வீர்க‌ளாக‌, மேன்மைய‌டைவீர்க‌ளாக‌!       
                                                                                          குறள்:972
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

குறள் விளக்கம்
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே"//////
===============

மனு சாஸ்த்திரமே சொல்லியாச்சு.
அப்புறமென்ன?

பிராமணரல்லாத மற்ற சாதியினருக்கு பூணூல் மாட்டிவிட்டு பிராமணராக்கி வேதம் ஓதச் செய்யுங்கள்.
கருவறையில் பூசை செய்ய வையுங்கள்.

பிராமணரெல்லாம் அவரிடம் காணிக்கை போட்டுவிட்டு விபூதி, குங்குமம், பிரசாதம் வாங்கிக்கொள்ளுங்கள்.
அவர் காலைத்தொட்டு வணங்குங்கள்.

மனுஸ்மிருதி அதைத்தானே சொல்கிறது.

அனைத்து சாதியினரையும் பிராமணராக்கிவிட வேண்டியதுதானே.

அன்பர்களே!
வர்ணாசிரமக் கொள்கை பிராமணர்கள் வகுத்துக்கொண்டது.
அது தமிழருக்குப் பொருந்தாது.

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்."
என்பதே தமிழர்கள் வகுத்துக்கொண்ட கொள்கை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக