சனி, 10 மார்ச், 2018

பெரியார் சொன்னது எழுத்துச் சீர்திருத்தமா? எழுத்துச் சீரழிப்பா?

தமிழில் எழுத்துக்கள் அதிகமாக இருப்பதால் குழந்தைகள் தமிழ்கற்க சிரமப்படுவதாகவும், ஆங்கிலத்தில் 26 எழுத்துக்கள் மட்டும் உள்ளதால் ஆங்கிலத்தைக் கற்பது எளிதாக இருக்கிறது எனவும் கூறித் தமிழ் எழுத்துக்களைக் குறைக்கவேண்டும் என பண்டிதர்களிடம் பெரியார் கேட்டுக்கொண்டாராம்.

பெரியார் தமிழ் எழுத்துக்களை எந்தவகையில் குறைக்கச் சொன்னார்?
தமிழ் எழுத்துக்கள் உயிர் 12 + மெய் 18 + ஆயுதம் 1 =  மொத்தம் 31 மட்டுமே.
இவற்றில் உள்ள ஒரு உயிரொலியும் ஒரு மெய்யொலியும் சேர்ந்து ஒலிக்கும் போது பிறக்கும் ஒலி கூட்டொலி ஆகும்.
அந்தவகையில் கூட்டொலிகள் மொத்தம் 12×18=216 உருவாகின்றன.
இந்த 216 கூட்டொலிகளுக்குத்தான் 216 உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்கியுள்ளனர். இந்த 216 உயிர்மெய் எழுத்துக்களுக்கும் தனித்தனி எழுத்துருக்களை உருவாக்காமல் ா, ி, ீ, ெ, ே,  போன்ற சில குறியீடுகளை மட்டும் உருவாக்கி அவற்றை 18 மெய்யெழுத்துக்களோடு சேர்த்து 216 உயிர்மெய் எழுத்துக்களையும் எழுத வழிசெய்தனர். எனவே 216 உயிர்மெய் எழுத்துக்களைக் கற்பது ஒன்றும் பெரிய சுமையல்ல.

ஆங்கிலம் போன்ற மொழிகளில் கூட்டொலிகளுக்கு எழுத்துக்களை உருவாக்காமல் உயிரெழுத்துக்களையும் மெய்யெழுத்துக்களையும் மட்டுமே வைத்துக்கொண்டு எழுதிக்கொள்கின்றனர்.
கூட்டொலிகளுக்கு தனி எழுத்துக்களை உருவாக்கும் அறிவு ஐரோப்பியர்களுக்கு இல்லாமல் போனது.
நாமும் தமிழில் உயிர்மெய் எழுத்துக்கள் இல்லாமல் 31 எழுத்துக்களை மட்டுமே வைத்துக்கொண்டு தமிழை எழுதமுடியும்.
தமிழ் என்பதை த்அம்இழ் என்றும்,
அமுதக்கனி என்பதை அம்உத்அக்க்அன்இ என்றும்,
வில்லவன் கோதை என்பதை வ்இல்ல்அவ்அன் க்ஓத்ஐ என்றும் எழுத முடியும். அவ்வாறு எழுதினால் எழுதுவதற்கான நேரமும் இடமும் அதிகம் தேவைப்படும் என்பதை உணர்ந்தே கூட்டொலிகளுக்கு உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்கினர்.
உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்கிய தமிழர்களின் அறிவாராய்ச்சி வியக்கத்தக்கதாகத் தெரியவில்லையா?
ஆங்கிலேயர்களுக்கு அந்த அறிவு இல்லை. அவர்கள் முட்டாள்கள்தான். குறில், நெடில் வேறுபாட்டைக்கூட எழுதிக்காட்ட ஆங்கிலத்தில் எழுத்துக்கள் இல்லை.

ஆங்கிலத்தில் 26 எழுத்துக்கள் மட்டுமே உள்ளன என்று சொல்வதும் ஏமாற்று வேலைதான்.
உண்மையில் ஆங்கிலத்தில் 104 எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றனர்.
அச்சில் பயன்படுத்துவது பெரிய எழுத்துக்கள் 26 என்றும், சிறிய எழுத்துக்கள் 26 என்றும்,
கையெழுத்தில் பயன்படுத்துவது பெரிய எழுத்துக்கள் 26 என்றும், சிறிய எழுத்துக்கள் 26 என்றும் ஆக மொத்தம் 104 எழுத்துக்கள் ஆங்கிலத்தில் உள்ளன.

ஐகார, ஔகார எழுத்துக்கள் பற்றி,,,,,

அகர உயிரை அடுத்து யகர மெய் வந்தால் அது அஇ என்றவாறே ஒலிக்கிறது.
அகர உயிரை அடுத்து வகர மெய் வந்தால் அது அஉ என்றே ஒலிக்கிறது.
ஐ என்பது அஇ என்றே ஒலிக்கும். அய் என்று ஒலிக்காது.
ஔ என்பது அஉ என்றே ஒலிக்கும். அவ் என்று ஒலிக்காது.

அதனாலேயே அறிவியல் முறைப்படி தமிழர்கள் நுண்ணிய வேறுபாட்டைக் கண்டுபிடித்து ஐ, ஔ ஒலியன்களுக்கு எழுத்துக்களை உருவாக்கினர்.

பன்னாட்டு மொழியியல் அறிஞர்களும் தொல்காப்பியரின் ஒலியியல் மற்றும் ஒலியனியல் ஆராய்ச்சியைப் பாராட்டுகின்றனர்.

தொல்காப்பியரைவிட பெரியார் ஒன்றும் பெரிய மொழி அறிஞர் அல்ல.
எழுத்துக்களைப் பற்றிய ஆய்வில் பெரியார் பகுத்தறிவில்லாத ஒரு முட்டாள்.

தமிழைப் பொருத்தவரை பெரியாரைப் பின்பற்றினால் தமிழ் சிதைந்துதான் போகும்.

தமிழர்கள் பன்னெடுங்காலத்திற்கு முன்பே பேச்சொலிகளை நுட்பமாக ஆராய்ந்து அவ்வொலிகளுக்கு எழுத்துக்களை உருவாக்கி தமிழுக்கான வரிவடிவத்தை வரிசைப்படுத்திக் கட்டமைத்திருப்பது வியக்கத்தக்க அறிவியலாகும்.

பெரியாரைப் பின்பற்றி அய், அவ், கய், ழய், ணய் என்று எழுதுவது மிகப்பெரிய முட்டாள்தனம்.

அய்யா, அவ்வை, அய்ப்பசி, மழய், தய், கய், வய், வெண்ணய், எண்ணய், பொட்டய், நெட்டய், குட்டய், தரய், குறய் என்று எழுதுபவர்கள் தமிழை அழிப்பவர்களே ஆவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக