ஞாயிறு, 11 மார்ச், 2018

தமிழையும் தமிழ் இலக்கியங்களையும் பழித்த பெரியார்:

தமிழையும் தமிழ் இலக்கியங்களையும் பழித்த பெரியார்:
==============
"தமிழ் படித்து உனக்க ஆவதென்ன,
தமிழ் காட்டுமிராண்டி மொழி" என்று தமிழை இழிவாகப் பேசினார் பெரியார்.
திருக்குறளில் மலவாடை வீசுகிறது என்று திருக்குறளை இழிவுபடுத்தினார் பெரியார்.

சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய தமிழ் இலக்கியங்களைக் குப்பைகள் என்று சொன்னார்.

திருக்குறளை மலம் என்று சொன்ன அதே பெரியார்தான் திருக்குறள் மாநாடு நடத்தினார் என்று சிலர் பெரியாரைப் புகழ்கின்றனர்.

திருக்குறளின் அருமை பெருமைகள் என்னவென்றே தெரியாமல் வாய்க்கு வந்தபடி உளறிய பெரியாரை வைத்தே திருக்குறள் மாநாட்டை நடத்தியவர்கள் தமிழறிஞர்கள்தான்.
தமிழறிஞர்களின் விழிப்புணர்வு இல்லாமல் போயிருந்தால் கம்பராமாயண எரிப்புப் போராட்டம் செய்தது போல பெரியாரியவாதிகள் திருக்குறள் எரிப்புப் போராட்டம் நடத்திக்கொண்டிருந்திருப்பார்கள்.

விவேகானந்தன், இனியன் சம்பத், கல்பனா தாசன் ஆகிய மூன்று பேர் இணைந்து எழுதிய நூலான “ஈ.வெ.கி.சம்பத்தும் திராவிட இயக்கமும்” நூலில் பின்வருமாறு தெரிலிக்கப்பட்டுள்ளது.
“1949 பொங்கல் திருநாளையொட்டி சென்னையில் திருக்குறள் மாநாட்டைப் பெரியார் நடத்தினார். இதற்கு முன்பெல்லாம் அவர் மொத்தத்தில் புலவர்களே மோசம், தமிழ் இலக்கியமே குப்பை, தமிழே காட்டுமிராண்டி மொழி என்றெல்லாம் கருத்துக் கூறியதால் தமிழ்ப்புலவர்கள் மத்தியில் கடும் கோபமும் எதிர்ப்பும் ஏற்பட்டன.
அண்ணா, சம்பத், நெடுஞ்செழியன் போன்றவர்கள் பெரியாரிடம் “புராணங்களை எதிர்க்கிற வேகத்தில் திருக்குறள், சிலப்பதிகாரம் போன்றவற்றையும் சேர்த்துத் தாக்கிடுவது முறையல்ல. தமிழுக்கும் தமிழ் இலக்கியங்களுக்கும் நாமே பாதுகாப்பு. குறள் உலகப் பொதுமறை என்பதை நாம் உணர்த்த வேண்டும்” என்றெல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்பே ஒதிய பிறகு தாமதித்தேனும் பலன் ஏற்பட்டது. இப்போதூ பெரியார் தமிழ் இலக்கியங்களையும், புலவர்களையும் தாக்குவதை நிறுத்திக் கொண்டார்.”
(பக். 169)
மேற்கண்ட செய்தியின் படி திருக்குறள் மாநாடு அண்ணா, ஈ.வெ.கி.சம்பத், நெடுஞ்செழியன் ஆகியோரின் நிர்பந்தத்தின்படி நடத்தப்பட்டுள்ளது. திருக்குறளுக்கு எதிரான பெரியாரிடமே சில ஆண்டுகளாக அதுபற்றி நல்லவிதமாக  ஓதி வந்தபடியால் வேறு வழியின்றி திருக்குறள் மாநாடு நடத்த பெரியாரும் ஒப்புக் கொண்டார் என்பதும் விளங்கும்.
1950இல் மீண்டும் பெரியார் என்ற வேதாளம் முருங்கை மரம் ஏறியது. அவர் கூறுகிறார்: “வள்ளுவர் குறளையும் அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும் போது பலர் என்னிடம் எல்லாம் போய் விட்டால் நமக்கு எது தான் நூல் என்று கேட்டார்கள். நான் இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடு என்று கூறினால் அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது என்று பதில் கூறினேன். (விடுதலை 1.6.1950)
பெரியாருக்கு சாவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு வரையிலும் திருக்குறளின் மேல் நல்லெண்ணம் பிறக்க வில்லை.

27.12.1972இல் ‘கலைமகள்’ இதழுக்கு அளித்த பேட்டியில் பெரியார் கூறுகிறார்:
“குறளை எடுத்துக்குங்க. நான் மட்டும் தான் குறளை கண்டிக்கிறேன்…. நான் குறள் மாநாடு நடத்தியதாலே சிலபேர் என்னைக் கண்டிச்சாங்க. கலைஞர் கூட அதை ஒண்ணையாவது விட்டுவிடக் கூடாதான்னு கேட்டாரு. குன்றக்குடி அடிகளாரும் கேட்டுக்கிட்டாரு. இரண்டாயிரம் வருடத்துக்கு முந்தியது குறள். அதை அப்படியே இப்பவும் நாம் ஏத்துக்கணும்னா?”
என்று கடைசிவரை திருக்குறளை ஏற்க மறுத்தார்.

பெரியார் வாயில் இருந்து உதிர்ந்த விஷ வார்த்தைகள்...
"சிலப்பதிகாரம் ஒரு தேவடியாள் கதை. தேவடியாள் எப்படி வெளியே அழகாக, உள்ளே வஞ்சகத்துடன் இருப்பாளோ அதுபோலவே சிலப்பதிகாரமும்"
"வள்ளுவன் மூடநம்பிக்கையும் ஆரிய மத கருத்தையும் சொன்னான். திருக்குறள் ஒரு மலம். அதை வீசி எறி"
"தமிழனுக்கு இலக்கியம், வரலாறு, குடும்பம், பண்பாடே கிடையாது. இங்கு பிராமணன் வந்து எழுதியதும், பிராமண அடிமை எழுதியதும்தான் இலக்கியம்"
"தமிழில் இலக்கியம், வரலாறு என்ன இருக்கிறது? தமிழை விட்டால் என்ன கேடு? தமிழ்த்தாய் சத்தில்லாமல், அதன் பிள்ளைகள் நடைப்பிணமாகவே இருக்கிறார்கள்."
"இந்தி எதிர்ப்பு அரங்குக்கு போனேன். இந்திக்கு பதில் இங்கிலீஷ் போதனாமொழி என ராஜகோபாலாச்சாரி சொன்னார். நான் இங்கிலிஷ் போதனாமொழி மட்டுமல்ல. பேச்சுமொழியாகவும் இருக்க வேண்டும். தமிழ் எழுத்துகளை நீக்கி, இங்கிலீஷ் எழுத்துகளை வைக்கவேண்டும் என்றேன்."
- பெரியார்
1968ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா ஆட்சியில் சனவரி முதல் நாளில் இரண்டாவது உலகத்தமிழ்மாநாட
ு நடத்தப்பட்டது. அப்போது திருவள்ளுவர், கம்பர் உள்ளிட்ட பத்து தமிழ்ச்சான்றோர்களின் சிலை திறக்கப்பட்டது.
அப்போது தந்தை பெரியார் "உலகத்தமிழ் மாநாடாம்! வெங்காய மாநாடாம்! இது எதற்கு? கும்பகோணம் மாமாங்கத்துக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கப்போகிறது
?" (விடுதலை 15.12.1967) என்று அறிக்கை விட்டார். தனது எதிர்ப்பை மேலும் காட்டுவதற்காக பெரியாரால் ஒரு நூல் வெளியிடப்பட்டது. அந் நூலின் பெயர் "தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி?".
பிறகு அந்த நூலின் தலைப்பு "தமிழும் தமிழரும்" என்று மாற்றப்பட்டது. தற்போது வரை ஐந்து பதிப்புகள் திராவிடர்கழகம் சார்பில் வெளி வந்துள்ளது. "தமிழ் நீசபாஷை" என்று கூறும் ஆரிய நூல்களுக்கும், "பெரியார் தமிழ் காட்டுமிராண்டி மொழி" என்று எழுதிய இந்த நூலுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.
ஈ.வே.ராமசாமி பற்றியும் திராவிடம் பற்றியும் தலைவர்கள் கருத்து:
பொதுவுடைமை போராளி சீவானந்தம்:
1957ஆம் ஆண்டில்
பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பின் இரட்டைத்தன்மை குறித்தும், அவரின் சாதி ஒழிப்புக்கொள்கை குறித்தும் ஒரு பொதுக்கூட்டத்தில் தோலுரித்துப் பேசினார் பா.சீவானந்தம். அது வருமாறு: "விரும்பினால் இராம மூர்த்தியை ஆதரிப்பார், இராஜ கோபால ஆச்சாரியை ஆதரிப்பார், மாவூர் சர்மாவை ஆதரிப்பார், இது ஒர் சித்தம்! வேறொரு பித்தம் கிளம்பினால், அக்கரகாரத்தை ஒரு கை பார்ப்பேன் என்று ஆவேசம் காட்டுவார். நேற்று நடந்த பொதுத் தேர்தலில் காஞ்சிபுரம் டாக்டர் சீனிவாசனையும், ஸ்ரீரங்கம் வாசுதேவனையும், மதுரை சங்கரனையும் ஆதரித்தார். அதற்கு ஒரு காரணம் சொன்னார். இன்று ஜாதிஒழிப்பு சாக்கில் பிராமணர் மீது பாய்கிறார். இதற்கு ஒரு காரணம் சொல்லுகிறார். கடந்த 30 ஆண்டுகளாக அவர் ஜாதியை எப்படி ஒழித்து வந்திருக்கிறார். அதில் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதை நாடறியும். அவர் காட்டிய வழியில் தமிழ்நாட்டில் ஜாதிய வெறியும், ஜாதிப்பூசலும் ஒழியவில்லை என்பது மட்டுமல்ல, மாறாக பெருகி வந்திருக்கிறது என்பதே என்னுடைய கருத்து" என்றார்.
முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்:
பெரியார் 'தமிழ்நாடு தமிழருக்கே' முழக்கத்தை திடீரென்று 'திராவிட நாடு திராவிடருக்கே' என்று மாற்றினார். இதன் மூலம் எழுந்து வந்த தமிழ்த் தேசிய எழுச்சிப் போராட்டம் திசை திருப்பப்பட்டது. இதனை கி.ஆ.பெ.வி.யின் மனம் ஒப்புக் கொள்ள வில்லை. பெரியார் மீது 25 குற்றச்சாட்டுகள
ை கூறி நீதிக்கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து பதவி விலகினார். பிறகு 1994இல் நீதிக்கட்சி 'திராவிடர் கழகம்' என்று பெயர் மாற்றம் செய்த போது அக்கட்சியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். இது குறித்து தான் நடத்திய 'தமிழர் நாடு' (1950) இதழில் எழுதினார்: "நான் திராவிடர் கழகத்தில் இருக்கவுமில்லை. விலகவுமில்லை. அவர்கள் தான் 'தமிழ் வாழ்க' என்பதிலிருந்து 'தமிழ்நாடு தமிழருக்கே' என்பதிலிருந்து 'தமிழ்க்கொடி' தூக்குவதிலிருந்து விலகிப்போனவர்கள்."
நாவலர் சோமசுந்தர பாரதியார்:
"தமிழன் தன்னைத் தமிழெனன்று கூறிக் கொள்ள வெட்கப்பட்டுத் திராவிடன், திராவிடன் என்று தோள் குலுக்குவதா? திராவிடன் என்ற பெயர் சங்க நூலிலே ஏது? சுயமரியாதை, சுயமரியாதை என்று ஆரியமொழி பேசினார்கள். நான் சொல்லிச் சொல்லி இப்போதுதான் தன்மானம் என்று தமிழாகப் பேசுகிறார்கள்" என்று இடித்துரைத்தார்.
1953 தங்கோவின் தமிழக எல்லை தற்காப்பு மாநாடில்,
"நாம் தமிழர்! நமது இனம் தமிழினம்! நமது நாடு தமிழ்நாடு! தமிழ்நாடு தான் நமது குறிக்கோள்! மொழிவழியாகப் பிரிந்து விட்ட போது திராவிடம் என்பதில் பொருள் இல்லை, திராவிடம் என்பது தமிழ்ச் சொல்லே அன்று" என்றார்.
அண்ணல் தங்கோ:
'திராவிடம்' என்ற சொல்லைக் கேட்டாலே காதில் நாராசம் பாய்ச்சியது போல இருக்கிறது " என்று 1950 முத்தமிழ் மாநாட்டில் பேசினார்.
உணர்ச்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்:
"அண்ணல்! பெரியாரும், அண்ணாத்துரையும் இல்லாத ஊருக்கு (திராவிட நாடு) வழிகாட்டி விட்டார்கள்!. தமிழினத்தை திசை திருப்பி விட்டார்கள். ஆனால் இறுதியில் உன்றனின் தனித்தமிழ்நாடு என்ற குறிக்கோளே வெற்றி பெறும்! அன்று தமிழகம் உன்னை நினைக்கும்" என்று தங்கோவிடம் கூறியுள்ளார்.
"நமக்கு திகவும் வேண்டாம் திமுகவும் வேண்டாம்" என்றார்.
குடும்ப விளக்கு நூலின் 2ஆம் பதிப்பு 1960லும் 3ஆம் பதிப்பு 1963லும் வந்தது. இவ்விரு பதிப்பிலும் மேற்படி பாடலில் வரும் திராவிடன் என்பது தமிழன் என்றும் திராவிட மக்கள் என்பது தமிழ்மக்கள் என்றும் மாற்றப்பட்டது.
"....தமிழன் என்று நீ செப்படா தம்பி"
என்றே இயம்பி அமிழ்து வந்தாள்
வாழிய தமிழ் மக்கள்!
வாழிய நற்றமிழ் வையகம் இனிதே!"
தமிழிலக்கியங்களெல்லாம் வெறும் குப்பைகள் என்று பெரியார் கூறினார். அப்போது,
பாவேந்தர் பாரதிதாசன்,
"நூலைப்படி-சங்கத்தமிழ் நூலைப்படி! -முறைப்படி நூலைப் படி! -சங்கத்தமிழ் நூலைப்படி!
காலையில் படி, கடும்பகலில் படி,
மாலை இரவு, பொருள்படும்படி!" என்று பெரியாருக்கு உறைக்கும்படி கூறினார்.
வடகெல்லை மீட்பு போராளி மா.போ.சிவஞானம்:
பெரியார்: தாய்ப்பாலை -தமிழை- எதற்காகப் படிக்க வேண்டும்? படித்த பிறகு அது எதற்குப் பயன்படுகிறது?
ம.பொ.சி: தமிழ்மொழியோடு ஆங்கிலத்தையும் பயில வேண்டும், அதுவே பயிற்சி மொழியாக இருக்க வேண்டும் என்பதல்ல பெரியார் கட்சி. "தமிழைப் படிக்க வேண்டாம்; ஆங்கிலம் படித்தாலே போதும். அதுவே வீட்டு மொழியாக- நாட்டு மொழியாக இருக்கலாம்" என்பது தான். இது "பரங்கி மொழிப் பைத்தியம்" அல்லாமல் வேறு எதுவோ? ஆனால் பெரியார் இன்றளவும் வீட்டில் கன்னடமும் நாட்டில் தமிழும் பேசித்தான் நடமாடுகிறார். ஆங்கிலத்தில் பேசுவதில்லையே!
இப்படி தமிழர் தலைவர்களை புரக்கணித்து, எதிர்த்து தமிழியத்தை விழுங்கி திராவிட கருத்தியலை திணித்தார்.
தமிழர் இன அடையாள ஒழிப்பு
தமிழ் ஆட்சி மொழியாவதற்கு எதிர்ப்பு
தமிழ் எல்லை மீட்புக்கு மறுப்பு
என தமிழினத்திற்கு சொல்லொனா துரோகம் செய்தவர் தான் ஈ.வே.ராமசாமி.
இன்றைய தமிழரின் இழிநிலைக்கும், மரபு வளங்கள் இழந்த நிலைக்கும், தமிழ் அழிந்து வரும் நிலைக்கும், தமிழர் உரிமை இழப்பிற்கும், அயலார் ஆட்சிக்கும் காரணமானவர் தான் ஈ.வே.ராமசாமி.
அயலார்கள் தமிழர் மேல் எளிதாக அதிகாரத்தை செலுத்தவும், தமிழர்கள் மேல் விமர்சனங்கள் வைக்கவும், தமிழர் நாட்டில் அழிவு திட்டங்களை திணிக்கவும், மண்ணின் மைந்தர்கள் தாய் மண்ணை ஆள்வதை இனவாதம் என்று கருத்தாக்கம் செய்யவும், வழிவகுத்தவர் தான் இந்த ஈ.வே.ராமசாமி.
இவரின் முகத்திரையை பயன்படுத்தி தமிழர் விரோத அரசியல் நடத்தவே இவர் உதவுகிறார் என்பதை தாண்டி தமிழர்களுக்கு ஈள்ளளவும் பயனில்லை என்பதை தமிழர் இனம் உணர தொடங்கிய காலம் இது.
தமிழியத்தால் வஞ்சனைகளையும் பகைகளையும் வென்றெடுப்போம். நாளை பறக்கும் தமிழ் கொடி மீது உறுதி. அமைய போகும் தமிழர் நாட்டின் மீது உறுதி. திழைக்கப் போகும் தமிழர் நல்லாட்சி மீது உறுதி.

நன்றி

https://m.facebook.com/745804385461175/photos/a.755752121133068.1073741829.745804385461175/1212978348743774/?type=3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக