வியாழன், 22 மார்ச், 2018

சமஸ்கிருத மொழியில் தமிழ்ச்சொற்கள்

பல தமிழ்ச்சொற்கள் உருமாறி சமஸ்கிருதத்தில் வழங்குகின்றன.

தமிழ்ச்சொற்கள் பல சமஸ்கிருதத்தில் கலந்துள்ளன.

காரணம் 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஆரியர்கள் வருவதற்கு முன்பு இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் தமிழே இருந்தது.

ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்தபிறகு வட இந்தியாவில் ஆரிய மூலமொழியும் தமிழும் கலந்து பிராகிருதம் உருவானது.
அப் பிராகிருதம் வட இந்தியாவின் பேச்சு வழக்காக இருந்தது.

அப்பிராகிருதத்தின் செம்மைப் படுத்தப்பட்ட வடிவமே சமஸ்கிருதம்.
சமஸ்கிருதம் எக்காலத்திலும் பேச்சுவழக்கில் இருக்கவில்லை.
இலக்கிய மொழியாகவும் கோயில் பூசை மொழியாகவுமே அது இருந்து வந்துள்ளது.

சில சொற்கள் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் ஒன்றாகவே இருப்பதைக்கண்டு அவற்றை சமஸ்கிருதச்சொற்கள் என்று எண்ணுவது தவறு.

தமிழிலிருந்து சமஸ்கிருதத்திற்கு சென்ற சொற்கள் பல.
தமிழிலிருந்து சமஸ்கிருதத்திற்கு சென்று உருமாறி மீண்டும் தமிழுக்கு திரும்பி வந்தவை பல.

சமஸ்கிருதம் தோன்றுவதற்கு முன்பே தமிழ் வளர்ச்சியடைந்திருந்த மொழி என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக