ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

கொங்குநாடு கற்பனையே

*கொங்குநாடு கற்பனையே*

கொங்கு நாடு என்பது வரலாற்றில் எக்காலத்திலும் இருந்ததில்லை. அது கொங்கு வேளாளக் கவுண்டர்களால் உருவாக்கப்பட்ட கற்பனையே.

தமிழ்நாட்டில் சோழ நாடு, சேரநாடு, பாண்டிய நாடு, தொண்டைநாடு,  பல்லவநாடு, தகடூர் நாடு ஆகிய நாடுகளே மன்னர் பரம்பரையைக் கொண்டு ஆட்சி செய்த நாடுகளாக இருந்தன.

தற்போது கொங்கு மண்டலம் என்று சொல்லப்படும் பகுதிகள் சங்க காலத்தில் பல சிற்றரசுகளால் ஆளப்பட்ட சிறுசிறு குறுநாடுகளாக இருந்தன. அக்காலத்தில் சேரநாட்டை ஆண்ட சேரர்கள் அச் சிற்றரசர்களை வென்று அப்பகுதிகளைச் சேர நாட்டின் ஒரு பகுதியாக இணைத்துக் கொண்டனர். பின்னர் வந்த பல்லவர், சோழர், பாண்டியர் ஆகிய பேரரசுகள் அப்பகுதியை தங்கள் பேரரசுடன் இணைத்து ஆண்டு வந்துள்ளனர்.
கொங்கு நாடு என்பது எக்காலத்திலும் தனிநாடாகவோ, தனியாக மன்னர் பரம்பரையைக் கொண்ட நாடாகவோ இருந்ததில்லை.

கொங்கு வேளாளக் கவுண்டர்கள் தங்கள் சாதிக்கு என தனியாக ஒரு மாநிலத்தை உருவாக்குவதற்காக இல்லாத கற்பனையான கொங்குநாடு என்ற ஒன்றைச் சொல்லி அதன் பெயரில் சாதிக் கட்சிகளைத் தொடங்கி நடத்துகின்றனர். கொங்கு சாதிக்கட்சிகள் தமிழ்நாட்டின் ஒற்றுமைக்கு ஆபத்தானவை.

கொங்கு வேளாளக் கவுண்டர் கட்சிகள் சொல்லும் கொங்குநாடு என்ற வரம்புக்குள் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் அடங்காது. ஏனெனில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் வன்னியர் சாதி தமிழர்கள் பெரும்பான்மையானோர் பூர்வீகமாகக் வாழ்ந்துகொண்டிருக்கும் பகுதிகள் ஆகும். இம்மாவட்டங்களில் ஏதோ ஒரு சில சிற்றூர்களில் மட்டுமே கொங்கு வேளாளக் கவுண்டர்கள் வாழ்கின்றனர். அந்த கொங்கு வேளாளர்களும் தங்கள் குலதெய்வக் கோயில்களை நாடி நாமக்கல், ஈரோடு மாவட்டங்களிலுள்ள கோயில்களுக்கே செல்கின்றனர். கொங்கு வேளாளக் கவுண்டர்கள் எவருக்கும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் குலத்தெய்வக் கோயில்கள் கிடையாது. எனவே சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலுள்ள ஒருசில  சிற்றூர்களில் மட்டுமே வாழும் கொங்கு வேளாளர்கள் நாமக்கல், ஈரோடு மாவட்டப் பகுதிகளைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். அங்கிருந்து மிக அண்மைக் காலத்தில்தான் சேலம் பகுதிக்கு வாழ்வாதாரம் தேடிக் குடிபெயர்ந்துள்ளனர் என்பது உறுதியாகிறது.
நாமக்கல் வட்டாரத்தில் வாழும் கொங்கு இன மக்கள் காவிரிக்குத் தெற்கில் காங்கேயம் முதலிய பகுதிகளிலிருந்து காவிரிக்கு வடக்கே குடிபெயர்ந்துள்ளனர். இவர்கள் காவிரிக்குத் தெற்கில் வாழும் கொங்கு இன மக்களுடன் திருமண உறவை முறித்துக்கொண்டு நாட்டுக்கவுண்டர் என்ற தனி சாதியினராகப் பிரிந்துவிட்டனர்.

கொங்கு வேளாளக் கவுண்டர்கள் அனைவரின் பூர்வீகம் காவிரிக்குத் தெற்கே உள்ள ஈரோடு, திருப்பூர், கோயமுத்தூர் ஆகிய மாவட்டங்களே ஆகும். கொங்கு மண்டலம் என்பது இம்மூன்று மாவட்டங்களை மட்டுமே குறிக்கும்.