வியாழன், 14 பிப்ரவரி, 2019

எது கொங்கு மண்டலம்?

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் வன்னியர் மண்டலம்.

எது கொங்கு மண்டலம்???
கொங்கு மண்டலம் என்பது ஈரோடு, திருப்பூர், கோயமுத்தூர், கரூர் மாவட்ட மேற்குப் பகுதி ஆகியவை மட்டுமே ஆகும்.
அங்கு மட்டுமே கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்கள் கொங்குநாடல்ல. இம்மாவட்டங்கள் மழநாடு, தலைநீர் நாடு, தகடூர் நாடு என சங்க காலம் முதல் அழைக்கப்பட்டு வந்தன. இம்மாவட்டங்கள் வன்னியர்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்கள் ஆகும்.

காவிரிக்குத் தெற்கேதான் கொங்கு மண்டலம்.
கொங்கு மண்டலம் பற்றிய தனிப்பாடல் பழனியைத் தெற்கெல்லையாகவும், ஈரோடு மாவட்டத்திலுள்ள தலமலையை வடக்கெல்லையாகவும் கொண்டதே கொங்கு மண்டலம் என்கிறது........

வன்னியர் பெரும்பான்மை என்பதாலேயே சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் அரசியல் வன்னியர் வசம் உள்ளது.

விதிவிலக்காக எடப்பாடி பழனிச்சாமி வென்றுள்ள எடப்பாடி தொகுதியும் பாமகவின் கோட்டைதான். பலமுறை பாமக வென்ற தொகுதி அது. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பார்த்து மக்கள் ஓட்டுபோட்டதால் எடப்பாடியார் வென்றுள்ளார். எடப்பாடி தொகுதி வன்னியர்கள் பெரும்பான்மையாக வாழும் தொகுதி.

இம்மாவட்டங்களில் கொங்கு கவுண்டர் ஒரு எம்எல்ஏ கூட ஆகமுடியாது. காரணம் கொங்கு கவுண்டர்கள் மிகச் சிறுபான்மையாகவே உள்ளனர். இவர்கள் கடந்த நூறு ஆண்டுகளுக்கு உள்ளாக குடியேறியவர்கள். இவர்கள் யாருக்கும் இம்மாவட்டங்களில் குலதெய்வக்கோயில் கிடையாது. குலதெய்வக் கோயிலைத் தேடி ஈரோடு, காங்கேயம் பகுதிக்கே செல்கின்றனர். ஈரோடு, காங்கேயம் பகுதியே அவர்களின் பூர்வீகம்.

நாமக்கல் பகுதியில் வசிக்கும் நாட்டுக்கவுண்டர்கள் காவிரிக்குத் தெற்கே காங்கேயம் பகுதியிலிருந்து காவிரிக்கு வடக்கே குடியேறியவர்கள். அவர்கள் காவிரிக்கு தெற்கே உள்ள கொங்கு வேளாளர்களுடன் திருமண உறவை முறித்துக் கொண்டு தனி சாதியினராக பிரிந்து காணப்படுகிறார்கள்.
கொங்கு வேளாளர்கள் அனைவரின் பூர்வீகமும் காவிரிக்கு தெற்கில் உள்ள ஈரோடு , காங்கேயம் பகுதிதான் என்பது உறுதியாகிறது.....