ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

எது கொங்குநாடு?

எது கொங்குநாடு?

கொங்கு மண்டலம் பற்றிய தனிப்பாடல் கொங்கு மண்டல வடக்கெல்லையாகச் சொல்லும் தலைமலை என்பது ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்களத்திற்கு வடக்கே உள்ள தலைமலை.
கொங்கு மண்டல சதகம் வடக்கெல்லையாகச்  சொல்லும் பெரும்பாலை என்பது ஈரோடு மாவட்டத்திற்கு வடக்கே மேட்டூருக்குத் தெற்கே உள்ள பாலமலை.

அதாவது காவிரிக்கு தென்மேற்கிலும், தெற்கிலும் உள்ள ஈரோடு, திருப்பூர், கோயமுத்தூர் மற்றும் கரூர் மாவட்ட மேற்குப் பகுதி ஆகியவை மட்டுமே கொங்கு மண்டலம் என்பது தெளிவு.

சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் கொங்கு மண்டலத்தில் அடங்காது. காவிரிக்கு வடக்கே உள்ள இப்பகுதிகள் தகடூர் நாடு எனவும், தலைநீர் நாடு எனவும், மழநாடு எனவும் அழைக்கப்பட்டது. தகடூர் நாட்டை சங்க காலத்திலிருந்து 13 ஆம் நூற்றாண்டுவரை ஆண்டவர்கள் அதியமான் மரபினர். இப்பகுதி மழவர்கள் வாழ்ந்த பகுதி என்பதால் மழநாடு என்று பெயர். மழவர்கள் மழவராயர் பட்டத்துடன் இப்போது வன்னியரில் உட்பிரிவினராக உள்ளனர். மழநாட்டைச் சேர்ந்த இப்பகுதி மக்கள் காவிரிக்குத் தெற்கே வாழும் கொங்கு வெள்ளாள மக்களிடமிருந்து சாதியாலும், பழக்கவழக்கங்களாலும், பண்பாட்டாலும், குலத்தெய்வ வழிபாட்டு முறைகளாலும் முற்றிலும் வேறுபட்டவர்கள்.

கோவைக் கிழார், புலவர் குழந்தை, வேங்கடசாமி நாட்டார் உள்ளிட்டவர்கள் சாதி உணர்வோடு கொங்குநாட்டின் பரப்பளவைப் பெரிதாகக் காட்ட வேண்டும் என்பதற்காக வலிந்து தகடூர் நாட்டைக் கொங்கு நாடு என்கின்றனர்.
காவிரிக்கு வடக்கே உள்ள சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் வன்னியர்களே பெரும்பான்மையாக உள்ளனர்.
கொங்கு மண்டலம் பற்றிய தனிப்பாடல் கொங்கு நாட்டின் எல்லையாக பழனி தெற்கு, தலைமலை வடக்கு என்றுதான் சொல்கிறது. கொங்கு மண்டல சதகம் கொங்கு நாட்டின் வடக்கெல்லை எனச் சொல்லும் பெரும்பாலை என்பது ஈரோடு மாவட்டம் சத்தியமங்களத்தை அடுத்த பகுதியிலுள்ள மனிதர்கள் வாழாத வறண்ட காட்டுபகுதி அல்லது ஈரோடு மாவட்டத்திற்கு வடக்கே மேட்டூருக்குத் தெற்கே உள்ள பாலமலை ஆகும்.
தலைமலை என்பது ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலத்திற்கு வடக்கே உள்ள தலமலை ஆகும்.

கொங்கு வெள்ளாள சாதி மக்கள் பெரும்பான்மையாகப் பாரம்பரியமாக செறிந்து வாழும் மாவட்டங்கள் காவிரிக்குத் தெற்கே ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களே ஆகும். இம்மாவட்டங்களுக்கு வெளியே மற்ற மாவட்டங்களில் சிறுபான்மையினராக வாழும் கொங்கு வெள்ளாளர்கள் தங்கள் குலத்தெய்வக் கோயில்களைத் தேடி காவிரிக்குத் தெற்கே ஈரோடு, காங்கேயம், பெருந்துறை ஆகிய பகுதிகளில் உள்ள குலத்தெய்வக் கோயில்களுக்கே செல்கின்றனர். இம்மூன்று மாவட்டங்களைத் தவிர்த்து வெளிமாவட்டங்களில் கொங்கு வெள்ளாளர்களுக்குக் குலத்தெய்வக் கோயில்கள் கிடையாது. சேலம், தருமபுரி, நாமக்கல் உள்ளிட்ட காவிரிக்கு வடக்கே உள்ள மாவட்டங்களில் மிகச் சிறுபான்மையினராக வாழும் கொங்கு வெள்ளாளர்கள் காவிரிக்குத் தெற்கு, தென்மேற்குப் பகுதிகளிலிருந்து அண்மைப் காலத்தில்தான் குடிபெயர்ந்துள்ளனர் என்பது உறுதியாகிறது.

கொங்கு மண்டலம் பற்றிய தனிப்பாடல்களும், கொங்கு மண்டல சதகமும் சொல்லும் கொங்கு மண்டல எல்லைக்குள் ஈரோடு, திருப்பூர், கோயமுத்தூர் ஆகிய மாவட்டங்களும், கரூர் மாவட்ட மேற்குப் பகுதியும் மட்டுமே அடங்கும்.