சனி, 2 பிப்ரவரி, 2019

தகடூர் நாடு, மழநாடு

*மழநாடு*
*தகடூர் நாடு*

திருச்சிராப்பள்ளிக்கு மேல்பால் காவேரியாற்றுக்கு வடபுறத்திலுள்ள பகுதிமுதல் பண்டைய எருமைநாடு வரை (தற்போதய மைசூரு) தற்கால நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, அரியலூர், திருச்சி மற்றும் கரூர் மாவட்டப் பகுதிகளை உள்ளடக்கியது மழநாடு. கிமு முதல் கிபி வரை மழநாட்டின் வரலாறு நீள்கிறது. சங்ககாலப் புலவர் ஔவையாரால் பாடப்பட்ட அதியமான்கள், வல்வில் ஓரி, கொல்லி மழவன், அரியலூர் ஜமீன் சமஸ்தானத்தை 14ம் நூற்றாண்டில் ஆண்ட ஒப்பில்லா மழவராயர் போன்றோர் மழநாட்டைச் சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தனர். தமிழ்த் தாத்தா உவே சாமிநாதையரின் முன்னோர்கள் அரியலூர் மழவராயர்களால் போற்றப்பட்டனர்.
(எ. கா.) மங்கல மென்பதோர் ஊருண்டு போலும் மழநாட்டுள் (தொல். சொல். 273, இளம்பூரணர்)

ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.
சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகள் தகடூரைத்(தருமபுரியைத்) தலைநாகராகக் கொண்ட தகடூர் நாடு எனவும், மழவர்கள் வாழும் நிலப்பரப்பு என்பதால் மழநாடு எனவும் சங்ககாலம் முதல் அழைக்கப்பட்டு வந்துள்ளது.

எக்காலத்திலும் இப்பகுதிகள் கொங்குநாடு என்ற வரம்புக்குள் இருக்கவில்லை. கொங்குநாடு என்பதே கொங்கு வெள்ளாளர்களால் உருவாக்கப்பட்ட தனிமாநிலக் கோரிக்கைக்கான கற்பனை. கொங்குநாடு என்ற பெயரில் எக்காலத்திலும் தனியாக அரசாட்சி செலுத்தியிருக்கவில்லை. அது கற்பனையே.

கோவைக் கிழார், புலவர் குழந்தை உள்ளிட்டவர்கள் சாதி உணர்வோடு வலிந்து தகடூர் நாட்டை கொங்கு நாடு என்கின்றனர்.
காவிரிக்கு வடக்கே உள்ள சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வன்னியர்களே பெரும்பான்மையாக உள்ளனர்.
கொங்கு மண்டலம் பற்றிய தனிப்பாடல் கொங்கு நாட்டின் எல்லையாக பழனி தெற்கு, தலைமலை வடக்கு என்றுதான் சொல்கிறது. கொங்கு மண்டல சதகம் கொங்கு நாட்டின் வடக்கெல்லை எனச் சொல்லும் பெரும்பாலை என்பது ஈரோடு மாவட்டம் சத்தியமங்களம் பகுதியிலுள்ள மனிதர்கள் வாழாத வறண்ட காட்டுபகுதியே ஆகும்.
தலைமலை என்பது ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடி அருகே உள்ள தலமலை கிராமம் ஆகும். கொங்கு இன மக்கள் பெரும்பான்மையாக பாரம்பரியமாக செறிந்து வாழும் மாவட்டங்கள் காவிரிக்குத் தெற்கே ஈரோடு, திருப்பூர், கோவை ஆகியவையே ஆகும்.

"தமிழ்பேசும் நிலம் தமிழர் நிலம். தமிழர் நிலத்தில் தமிழுக்கு முதன்மை தமிழர்க்குத் தலைமை" என்பது தமிழ்த்தேசியக் கொள்கை. இந்த தமிழ்த்தேசியக் கொள்கைக்கு எதிரானது ஆரியமும் திராவிடமும் மட்டுமல்ல. கொங்குத்தேசியப் பிரிவினை வாதமும் தமிழ்த்தேசியத்திற்கு ஆபத்தானது. எதிரானது.

கொங்கு வெள்ளாள சாதிவெறியர்களில் சிலர் தங்கள் சாதிக்கு தனிமாநிலம் அமைக்கவேண்டும் என்னும் சுயநலத்தால் "வரலாற்று ஆய்வாளர்" என்னும் முகமூடி அணிந்துகொண்டு "கொங்குநாட்டு வரலாறு" என்ற பெயரில் தவறான தகவல்களைத் தந்து வரலாற்றைத் திரித்து எழுதிவருகின்றனர். அது தமிழினத்தின் ஒற்றுமைக்கும் தமிழ்நாட்டின் ஒற்றுமைக்கும் ஆபத்தானது.

கொங்குநாடு என்பதே வரலாற்றில் எக்காலத்திலும் இருந்ததில்லை. அது கொங்கு வெள்ளாளர்களால் தங்கள் சாதிக்கு தனிமாநிலம் அமைக்கும் எண்ணத்தில் உருவாக்கப்பட்ட கற்பனை. அதற்குத் தனியாட்சி செய்த அரச மரபினர் கிடையாது. கொங்குநாடு என்ற பெயரில் தனி நாடோ அதற்குத் தலைநகரமோ மன்னர் பரம்பரையோ எக்காலத்திலும் இருக்கவில்லை.

சோழநாடு, சேரநாடு, பாண்டியநாடு, தொண்டைநாடு, தகடூர்நாடு, மழநாடு, பல்லவநாடு என்பவையே சங்ககாலத்திற்கு முன்பிருந்து அரச மரபினர் ஆண்ட நாடுகளாக இருந்தன.

கொங்குநாடு பிரிவினைவாதம் பேசும் சாதிவெறியர்களை முளைக்கும்போதே கிள்ளி எறிய வேண்டியது தமிழ்த்தேசியவாதிகளின் கடமை.

*தகடூர் நாடு*

தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்கள் கொங்கு நாட்டைச் சேர்ந்தவை அல்ல. இம்மாவட்டங்கள் தகடூர் நாட்டைச் சேர்ந்தவை.

தமிழக வரலாற்றுக்குத் தனித்த புகழைத் தேடித் தந்துள்ளது தகடூர். பண்டைய தகடூரே தற்போது தருமபுரி. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்புகூட இதன் பெயர் தகடூர்தான். சுமார் 2000 ஆண்டுகளாக வழங்கி வந்த பெயர். தகடூர் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது “அதியமான் நெடுமான் அஞ்சி”. இவ்வூரைத் தலைநகராக கொண்டு ஆண்டவர். அதியனைப் போற்றிப் புகழ்ந்து பாடிய ஔவையார் அதியனின் சபையை அலங்கரித்தார். தித்திக்கும் கரும்பை முதன்முதலில் பயிர் செய்யக் கண்டுபிடித்தவன் அதியமான்.

தகடூர் நாட்டில் இதுவரை கண்டுபிடித்த கல்வெட்டுகளில் தகடூர் நாடு என்றே உள்ளது (தகடூர் நாட்டுத் தகடூர்), சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் ஒரு கல்வெட்டு கூட “கொங்கு” என்ற பெயருடன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இன்றுள்ள சில மக்கள் அறியாமையால் இதைக் கொங்கு நாடு/கொங்கு மண்டலம் என்றழைக்கின்றனர். தகடூர் நாட்டில் வாழும் சில பாமர மக்களும் தகடூர் என்ற வராலாற்று சிறப்பு மிக்க பெயரை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து வருகின்றனர்.

தகடூர் என்றாலே இந்த நாட்டின் பூர்வகுடி மக்களான “மழவர்கள்” வாழ்ந்த பூமி. கொங்கு நாட்டிற்கும் தகடூர் நாட்டிற்கும் நிறைய கலாச்சார வேறுபாடுகள் உண்டு.

தமிழகத்திலேயே எங்கும் காணப்படாத நடுகல் வழிபாடு என்பது தகடூர் நாட்டில் அதிகம். இவ்வாறு வழிபாடு, மொழி, மக்களின் கலாச்சாரம், இனம் அனைத்திலும் கொங்கு நாட்டிலிருந்து வேறுபட்டவர்கள் இந்த தகடூர் நாட்டு மக்கள்.

இப்படி தனி நாடாக இருந்த  தகடூர் நாட்டை (சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி) அறியாமையால் கொங்கு நாடாகக் கூறுகின்றனர். கிடைத்த பல தகவல்களை வைத்துப்பார்க்கும் போது இது ஒரு தனி நாடாக இருந்துள்ளது.

தகடூர் நாடு. சங்க காலம் முதல் 13 ஆம் நூற்றாண்டுவரை இந்த நாட்டை அதியமான் மரபினர் ஆண்டுவந்துள்ளனர். இப்பகுதி கொங்கு நாடல்ல. இது தகடூர் நாடு. அதியமான் மரபினர் மழவர் இனத்தைச் சேர்ந்தவர்கள். மழவர்கள் மழவராயர் பட்டத்துடன் வன்னியரில் உட்பிரிவினராக இப்போது உள்ளனர். இந்த மன்னர்களில் ஐந்து மன்னர்களின் பெயர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இப்பகுதியில் வாழும் மக்கள் கோவை, திருப்பூர், ஈரோடு பகுதியில் செறிந்து வாழும் கொங்கு இன மக்களிடமிருந்து பேச்சு வழக்கு, பழக்கவழக்கம், பண்பாடு, குலத்தெய்வ வழிபாட்டுமுறை ஆகியவற்றால் முற்றிலும் வேறுபட்டவர்கள். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டப் பகுதி ஆகியவை தகடூர் நாட்டில் அடங்குகிறது. இப்பகுதியில் கிடைத்துள்ள கல்வெட்டுக்கள் எதிலும் கொங்கு என்ற சொல்லே இடம்பெறவில்லை. தகடூர் நாடு என்றே கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளது.

தகடூர் நாடு கொங்கு நாட்டோடு சேர்ந்ததல்ல. இது தனிநாடாக இருந்த ஒன்று.

பல ஆய்வுகளிலிருந்து பார்க்கும்போது தகடூர் நாடு என்பது சங்ககாலம் முதல் தனி நாடே அது எந்த நாட்டுடனும் (கொங்கு நாட்டுடன்) சேர்ந்தது அல்ல என்பது தெள்ளத்தெளிவாகிறது.