வியாழன், 26 ஜூலை, 2018

திராவிடச் சதியால் தமிழகம் இழந்த மண்:

*சென்னையை விட்டுக்கொடுத்தால் திருப்பதியை விட்டுவிடுகிறோம் எனத் தெலுங்கர்கள் சொன்னது பச்சை அயோக்கியத்தனப் பித்தலாட்டம்.*

400 ஆண்டுகளுக்கு முன்பு நாயக்கர் ஆட்சிக் காலத்திலும் பிறகு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் ஆந்திராவிலிருந்து சித்தூர், திருவள்ளூர், சென்னை போன்ற மாவட்டப் பகுதிகளுக்கு 10% தெலுங்கு பேசும் மக்கள் குடியேறியுள்ளனர் என்பது உண்மை. அம் மாவட்டங்கள் இப்போதும் பெரும்பான்மையாக 90  சதவீதம் தமிழர் வாழும் மாவட்டங்கள்தான். தற்போது ஆந்திராவிலுள்ள நெல்லூரை இரண்டாகப் பிரிக்கும் வடபெண்ணை ஆறுவரை தமிழர் பகுதி.

தென்பெண்ணை ஆற்றுக்கும் வடபெண்ணை ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியை தொண்டைநாடு என்பர். சங்க காலத்தில் தென்பெண்ணை ஆற்றிலிருந்து திருப்பதி மலை வரை இருந்த பகுதியை அருவா நாடு என்றும், அதற்கு வடக்கே வடபெண்ணை ஆறுவரை இருந்த பகுதியை அருவா வடதலை நாடு என்றும் பெயர். திருப்பதியை உள்ளடக்கிய சித்தூர் மாவட்டம் அருவா நாட்டுக்குள் வருகிறது. நெல்லூர் மாவட்டம் அருவா வடதலை நாடு.
அருவா நாடு, அருவா வடதலை நாடு இரண்டையும் சேர்த்து தொண்டைநாடு என்பர்.
இப்போதும் தெலுங்கர்கள் தமிழர்களை அரவர் என்றும், தமிழை அரவ பாஷை என்றும் சொல்கின்றனர்.

திராவிடக் கட்சிகளின் தெலுங்கு அரசியல் தலைவர்களால் தமிழ் பேசும் சித்தூர் மாவட்டத்தையும், நெல்லூர் மாவட்டத்தில் பெரும் பகுதியையும் ஆந்திராவிடம் பறிகொடுத்து விட்டோம்.

மொழிவாரி மாநிலப் பிரிவினையின் போது தெலுங்கன் அண்ணா, தெலுங்கன் கருணாநிதி, கன்னடன் பெரியார் போன்றவர்கள் தெலுங்க இனப்பாசத்தால் ஆந்திராவுக்கு விட்டுக்கொடுத்துவிட்டனர். கேரளத்தாரிடம் நெய்யாற்றங்கரை, தேவிகுளம், பீர்மேடு, மூணாறு, சித்தூர், பாலக்காடு பறிபோனது.
கர்நாடகத்திடம் காவிரி உருவாகும் குடகும், கோலாரும் பறிபோனது.

"கன்னடரும், தெலுங்கரும் தனிமாநிலம் கேட்டு பிரித்துச் செல்கிறார்கள். அது பற்றி உங்கள் கருத்து என்ன?" என்று பெரியாரிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, நாலு ஊர்களையாவது நாம் ஆள்வதற்கு விட்டுவிட்டுத்தான் செல்வார்கள் என்று இளக்காரமாகப் பதில் சொன்னவர் கன்னடன் பெரியார்.

ம.பொ.சிவஞானம் இல்லாதிருந்திருந்தால் திருத்தணியைக்கூட மீட்டிருக்க முடியாது.
நேசமணி இல்லாதிருந்திருந்தால் கன்னியாகுமரியைக்கூட மீட்டிருக்க முடியாது.