வெள்ளி, 8 மார்ச், 2019

சமஸ்கிருதத்தின் தாய் தமிழ்.

எவ்வளவு சொன்னாலும் ஒரு ஆரிய பிராமண சாதிவெறியர் தமிழில் எழுத மறுக்கிறார். தமிழைத் தரம்தாழ்த்தி எழுதுகிறார். சமஸ்கிருதத்தை உயர்த்திப் பேசுகிறார். ஆங்கிலத்திலேயே எழுதுகிறார்.

அவருக்கான பதிவு இது.

கைபர் போலன் கணவாய் வழியாக வந்த நாடோடி கூட்டத்தைச் சேர்ந்த பிராமணரே! சொந்தமாகத் தாய்மொழி இல்லாதவரே!

சமஸ்கிருதம் எப்பொழுது, எப்படி உருவானது?
நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே பேச்சு மொழியாகவும் நாட்டு மொழியாகவும் இருந்தது. நாடோடியான ஆரியர்கள் கைபர் போலன் கணவாய் வழியாக இந்தியாவுக்கு வந்த பிறகு ஆரியர்கள் பேசிய மொழியும் தமிழ் மொழியும் கலந்து வட இந்தியாவில் ஒரு புதிய மொழி உருவாயிற்று. அந்த மொழி பிராகிருதம். பிராகிருதம் வட இந்தியாவில் பேச்சுமொழி ஆகியது. காலப்போக்கில் பிராகிருதத்தைச் செம்மைப்படுத்தி இலக்கியம் படைத்தனர். செம்மைப்படுத்தப்பட்ட பிராகிருதமே செயற்கையான சமஸ்கிருதம் ஆனது. பிராகிருதம் பேச்சு மொழி. சமஸ்கிருதம் ஏட்டு மொழி. சமஸ்கிருதம் ஒரு காலத்திலும் பேச்சு மொழியாக இருந்ததில்லை.
சமஸ்கிருதம் இந்தி உள்ளிட்ட வட இந்திய மொழிகளின் இலக்கண அமைப்பும் தமிழ் இலக்கண அமைப்பும் ஏறத்தாழ ஒரே மாதிரி இருப்பதற்கு காரணம் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே பேசிவந்ததாலேயே ஆகும். தமிழோடு நாடோடிகளின் ஆரிய மொழி கலந்து உருவானவையே சமஸ்கிருதம் இந்தி போன்ற மொழிகள்.
மொழியியல் பேரறிஞர் தேவநேயப்பாவாணர் இதே கருத்தைச் சொல்லியுள்ளார். சமஸ்கிருதத்துக்கே தாய் தமிழ்தான். சமஸ்கிருதத்தில் ஏராளமான தமிழ்ச்சொற்கள் கலந்து உருமாறியுள்ளன.

இந்தி உருவாகி 300 ஆண்டுகள்தான் ஆகிறது. ஆங்கிலம் உருவாகி 600 ஆண்டுகள்தான் ஆகிறது.

சமஸ்கிருத மொழிக்கு என சொந்தமாக எழுத்துகள் கிடையாது. சமஸ்கிருத இலக்கியங்கள் 1500 ஆண்டுகளுக்கு முன்புவரை வாய்மொழிப் பாடல்களாகவே அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டு வந்துள்ளன. ரிக் வேதம் முதலிய வேத நூல்கள் எல்லாம் வாய்மொழியாக கற்பிக்கப்பட்டுவந்து 1500 ஆண்டுகளுக்கு முன்புதான் ஏட்டில் எழுதப் பட்டுள்ளன என்பதை ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.

தமிழ் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய இயற்கை மொழி. மனித இனம் தோன்றி முதன்முதலாகப் பேசிய மொழி. வாழும் மொழி.