ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

கொங்குநாடு கற்பனையே

*கொங்குநாடு கற்பனையே*

கொங்கு நாடு என்பது வரலாற்றில் எக்காலத்திலும் இருந்ததில்லை. அது கொங்கு வேளாளக் கவுண்டர்களால் உருவாக்கப்பட்ட கற்பனையே.

தமிழ்நாட்டில் சோழ நாடு, சேரநாடு, பாண்டிய நாடு, தொண்டைநாடு,  பல்லவநாடு, தகடூர் நாடு ஆகிய நாடுகளே மன்னர் பரம்பரையைக் கொண்டு ஆட்சி செய்த நாடுகளாக இருந்தன.

தற்போது கொங்கு மண்டலம் என்று சொல்லப்படும் பகுதிகள் சங்க காலத்தில் பல சிற்றரசுகளால் ஆளப்பட்ட சிறுசிறு குறுநாடுகளாக இருந்தன. அக்காலத்தில் சேரநாட்டை ஆண்ட சேரர்கள் அச் சிற்றரசர்களை வென்று அப்பகுதிகளைச் சேர நாட்டின் ஒரு பகுதியாக இணைத்துக் கொண்டனர். பின்னர் வந்த பல்லவர், சோழர், பாண்டியர் ஆகிய பேரரசுகள் அப்பகுதியை தங்கள் பேரரசுடன் இணைத்து ஆண்டு வந்துள்ளனர்.
கொங்கு நாடு என்பது எக்காலத்திலும் தனிநாடாகவோ, தனியாக மன்னர் பரம்பரையைக் கொண்ட நாடாகவோ இருந்ததில்லை.

கொங்கு வேளாளக் கவுண்டர்கள் தங்கள் சாதிக்கு என தனியாக ஒரு மாநிலத்தை உருவாக்குவதற்காக இல்லாத கற்பனையான கொங்குநாடு என்ற ஒன்றைச் சொல்லி அதன் பெயரில் சாதிக் கட்சிகளைத் தொடங்கி நடத்துகின்றனர். கொங்கு சாதிக்கட்சிகள் தமிழ்நாட்டின் ஒற்றுமைக்கு ஆபத்தானவை.

கொங்கு வேளாளக் கவுண்டர் கட்சிகள் சொல்லும் கொங்குநாடு என்ற வரம்புக்குள் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் அடங்காது. ஏனெனில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் வன்னியர் சாதி தமிழர்கள் பெரும்பான்மையானோர் பூர்வீகமாகக் வாழ்ந்துகொண்டிருக்கும் பகுதிகள் ஆகும். இம்மாவட்டங்களில் ஏதோ ஒரு சில சிற்றூர்களில் மட்டுமே கொங்கு வேளாளக் கவுண்டர்கள் வாழ்கின்றனர். அந்த கொங்கு வேளாளர்களும் தங்கள் குலதெய்வக் கோயில்களை நாடி நாமக்கல், ஈரோடு மாவட்டங்களிலுள்ள கோயில்களுக்கே செல்கின்றனர். கொங்கு வேளாளக் கவுண்டர்கள் எவருக்கும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் குலத்தெய்வக் கோயில்கள் கிடையாது. எனவே சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலுள்ள ஒருசில  சிற்றூர்களில் மட்டுமே வாழும் கொங்கு வேளாளர்கள் நாமக்கல், ஈரோடு மாவட்டப் பகுதிகளைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். அங்கிருந்து மிக அண்மைக் காலத்தில்தான் சேலம் பகுதிக்கு வாழ்வாதாரம் தேடிக் குடிபெயர்ந்துள்ளனர் என்பது உறுதியாகிறது.
நாமக்கல் வட்டாரத்தில் வாழும் கொங்கு இன மக்கள் காவிரிக்குத் தெற்கில் காங்கேயம் முதலிய பகுதிகளிலிருந்து காவிரிக்கு வடக்கே குடிபெயர்ந்துள்ளனர். இவர்கள் காவிரிக்குத் தெற்கில் வாழும் கொங்கு இன மக்களுடன் திருமண உறவை முறித்துக்கொண்டு நாட்டுக்கவுண்டர் என்ற தனி சாதியினராகப் பிரிந்துவிட்டனர்.

கொங்கு வேளாளக் கவுண்டர்கள் அனைவரின் பூர்வீகம் காவிரிக்குத் தெற்கே உள்ள ஈரோடு, திருப்பூர், கோயமுத்தூர் ஆகிய மாவட்டங்களே ஆகும். கொங்கு மண்டலம் என்பது இம்மூன்று மாவட்டங்களை மட்டுமே குறிக்கும்.

எது கொங்குநாடு?

எது கொங்குநாடு?

கொங்கு மண்டலம் பற்றிய தனிப்பாடல் கொங்கு மண்டல வடக்கெல்லையாகச் சொல்லும் தலைமலை என்பது ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்களத்திற்கு வடக்கே உள்ள தலைமலை.
கொங்கு மண்டல சதகம் வடக்கெல்லையாகச்  சொல்லும் பெரும்பாலை என்பது ஈரோடு மாவட்டத்திற்கு வடக்கே மேட்டூருக்குத் தெற்கே உள்ள பாலமலை.

அதாவது காவிரிக்கு தென்மேற்கிலும், தெற்கிலும் உள்ள ஈரோடு, திருப்பூர், கோயமுத்தூர் மற்றும் கரூர் மாவட்ட மேற்குப் பகுதி ஆகியவை மட்டுமே கொங்கு மண்டலம் என்பது தெளிவு.

சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் கொங்கு மண்டலத்தில் அடங்காது. காவிரிக்கு வடக்கே உள்ள இப்பகுதிகள் தகடூர் நாடு எனவும், தலைநீர் நாடு எனவும், மழநாடு எனவும் அழைக்கப்பட்டது. தகடூர் நாட்டை சங்க காலத்திலிருந்து 13 ஆம் நூற்றாண்டுவரை ஆண்டவர்கள் அதியமான் மரபினர். இப்பகுதி மழவர்கள் வாழ்ந்த பகுதி என்பதால் மழநாடு என்று பெயர். மழவர்கள் மழவராயர் பட்டத்துடன் இப்போது வன்னியரில் உட்பிரிவினராக உள்ளனர். மழநாட்டைச் சேர்ந்த இப்பகுதி மக்கள் காவிரிக்குத் தெற்கே வாழும் கொங்கு வெள்ளாள மக்களிடமிருந்து சாதியாலும், பழக்கவழக்கங்களாலும், பண்பாட்டாலும், குலத்தெய்வ வழிபாட்டு முறைகளாலும் முற்றிலும் வேறுபட்டவர்கள்.

கோவைக் கிழார், புலவர் குழந்தை, வேங்கடசாமி நாட்டார் உள்ளிட்டவர்கள் சாதி உணர்வோடு கொங்குநாட்டின் பரப்பளவைப் பெரிதாகக் காட்ட வேண்டும் என்பதற்காக வலிந்து தகடூர் நாட்டைக் கொங்கு நாடு என்கின்றனர்.
காவிரிக்கு வடக்கே உள்ள சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் வன்னியர்களே பெரும்பான்மையாக உள்ளனர்.
கொங்கு மண்டலம் பற்றிய தனிப்பாடல் கொங்கு நாட்டின் எல்லையாக பழனி தெற்கு, தலைமலை வடக்கு என்றுதான் சொல்கிறது. கொங்கு மண்டல சதகம் கொங்கு நாட்டின் வடக்கெல்லை எனச் சொல்லும் பெரும்பாலை என்பது ஈரோடு மாவட்டம் சத்தியமங்களத்தை அடுத்த பகுதியிலுள்ள மனிதர்கள் வாழாத வறண்ட காட்டுபகுதி அல்லது ஈரோடு மாவட்டத்திற்கு வடக்கே மேட்டூருக்குத் தெற்கே உள்ள பாலமலை ஆகும்.
தலைமலை என்பது ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலத்திற்கு வடக்கே உள்ள தலமலை ஆகும்.

கொங்கு வெள்ளாள சாதி மக்கள் பெரும்பான்மையாகப் பாரம்பரியமாக செறிந்து வாழும் மாவட்டங்கள் காவிரிக்குத் தெற்கே ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களே ஆகும். இம்மாவட்டங்களுக்கு வெளியே மற்ற மாவட்டங்களில் சிறுபான்மையினராக வாழும் கொங்கு வெள்ளாளர்கள் தங்கள் குலத்தெய்வக் கோயில்களைத் தேடி காவிரிக்குத் தெற்கே ஈரோடு, காங்கேயம், பெருந்துறை ஆகிய பகுதிகளில் உள்ள குலத்தெய்வக் கோயில்களுக்கே செல்கின்றனர். இம்மூன்று மாவட்டங்களைத் தவிர்த்து வெளிமாவட்டங்களில் கொங்கு வெள்ளாளர்களுக்குக் குலத்தெய்வக் கோயில்கள் கிடையாது. சேலம், தருமபுரி, நாமக்கல் உள்ளிட்ட காவிரிக்கு வடக்கே உள்ள மாவட்டங்களில் மிகச் சிறுபான்மையினராக வாழும் கொங்கு வெள்ளாளர்கள் காவிரிக்குத் தெற்கு, தென்மேற்குப் பகுதிகளிலிருந்து அண்மைப் காலத்தில்தான் குடிபெயர்ந்துள்ளனர் என்பது உறுதியாகிறது.

கொங்கு மண்டலம் பற்றிய தனிப்பாடல்களும், கொங்கு மண்டல சதகமும் சொல்லும் கொங்கு மண்டல எல்லைக்குள் ஈரோடு, திருப்பூர், கோயமுத்தூர் ஆகிய மாவட்டங்களும், கரூர் மாவட்ட மேற்குப் பகுதியும் மட்டுமே அடங்கும்.

சனி, 2 பிப்ரவரி, 2019

தகடூர் நாடு, மழநாடு

*மழநாடு*
*தகடூர் நாடு*

திருச்சிராப்பள்ளிக்கு மேல்பால் காவேரியாற்றுக்கு வடபுறத்திலுள்ள பகுதிமுதல் பண்டைய எருமைநாடு வரை (தற்போதய மைசூரு) தற்கால நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, அரியலூர், திருச்சி மற்றும் கரூர் மாவட்டப் பகுதிகளை உள்ளடக்கியது மழநாடு. கிமு முதல் கிபி வரை மழநாட்டின் வரலாறு நீள்கிறது. சங்ககாலப் புலவர் ஔவையாரால் பாடப்பட்ட அதியமான்கள், வல்வில் ஓரி, கொல்லி மழவன், அரியலூர் ஜமீன் சமஸ்தானத்தை 14ம் நூற்றாண்டில் ஆண்ட ஒப்பில்லா மழவராயர் போன்றோர் மழநாட்டைச் சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தனர். தமிழ்த் தாத்தா உவே சாமிநாதையரின் முன்னோர்கள் அரியலூர் மழவராயர்களால் போற்றப்பட்டனர்.
(எ. கா.) மங்கல மென்பதோர் ஊருண்டு போலும் மழநாட்டுள் (தொல். சொல். 273, இளம்பூரணர்)

ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.
சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகள் தகடூரைத்(தருமபுரியைத்) தலைநாகராகக் கொண்ட தகடூர் நாடு எனவும், மழவர்கள் வாழும் நிலப்பரப்பு என்பதால் மழநாடு எனவும் சங்ககாலம் முதல் அழைக்கப்பட்டு வந்துள்ளது.

எக்காலத்திலும் இப்பகுதிகள் கொங்குநாடு என்ற வரம்புக்குள் இருக்கவில்லை. கொங்குநாடு என்பதே கொங்கு வெள்ளாளர்களால் உருவாக்கப்பட்ட தனிமாநிலக் கோரிக்கைக்கான கற்பனை. கொங்குநாடு என்ற பெயரில் எக்காலத்திலும் தனியாக அரசாட்சி செலுத்தியிருக்கவில்லை. அது கற்பனையே.

கோவைக் கிழார், புலவர் குழந்தை உள்ளிட்டவர்கள் சாதி உணர்வோடு வலிந்து தகடூர் நாட்டை கொங்கு நாடு என்கின்றனர்.
காவிரிக்கு வடக்கே உள்ள சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வன்னியர்களே பெரும்பான்மையாக உள்ளனர்.
கொங்கு மண்டலம் பற்றிய தனிப்பாடல் கொங்கு நாட்டின் எல்லையாக பழனி தெற்கு, தலைமலை வடக்கு என்றுதான் சொல்கிறது. கொங்கு மண்டல சதகம் கொங்கு நாட்டின் வடக்கெல்லை எனச் சொல்லும் பெரும்பாலை என்பது ஈரோடு மாவட்டம் சத்தியமங்களம் பகுதியிலுள்ள மனிதர்கள் வாழாத வறண்ட காட்டுபகுதியே ஆகும்.
தலைமலை என்பது ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடி அருகே உள்ள தலமலை கிராமம் ஆகும். கொங்கு இன மக்கள் பெரும்பான்மையாக பாரம்பரியமாக செறிந்து வாழும் மாவட்டங்கள் காவிரிக்குத் தெற்கே ஈரோடு, திருப்பூர், கோவை ஆகியவையே ஆகும்.

"தமிழ்பேசும் நிலம் தமிழர் நிலம். தமிழர் நிலத்தில் தமிழுக்கு முதன்மை தமிழர்க்குத் தலைமை" என்பது தமிழ்த்தேசியக் கொள்கை. இந்த தமிழ்த்தேசியக் கொள்கைக்கு எதிரானது ஆரியமும் திராவிடமும் மட்டுமல்ல. கொங்குத்தேசியப் பிரிவினை வாதமும் தமிழ்த்தேசியத்திற்கு ஆபத்தானது. எதிரானது.

கொங்கு வெள்ளாள சாதிவெறியர்களில் சிலர் தங்கள் சாதிக்கு தனிமாநிலம் அமைக்கவேண்டும் என்னும் சுயநலத்தால் "வரலாற்று ஆய்வாளர்" என்னும் முகமூடி அணிந்துகொண்டு "கொங்குநாட்டு வரலாறு" என்ற பெயரில் தவறான தகவல்களைத் தந்து வரலாற்றைத் திரித்து எழுதிவருகின்றனர். அது தமிழினத்தின் ஒற்றுமைக்கும் தமிழ்நாட்டின் ஒற்றுமைக்கும் ஆபத்தானது.

கொங்குநாடு என்பதே வரலாற்றில் எக்காலத்திலும் இருந்ததில்லை. அது கொங்கு வெள்ளாளர்களால் தங்கள் சாதிக்கு தனிமாநிலம் அமைக்கும் எண்ணத்தில் உருவாக்கப்பட்ட கற்பனை. அதற்குத் தனியாட்சி செய்த அரச மரபினர் கிடையாது. கொங்குநாடு என்ற பெயரில் தனி நாடோ அதற்குத் தலைநகரமோ மன்னர் பரம்பரையோ எக்காலத்திலும் இருக்கவில்லை.

சோழநாடு, சேரநாடு, பாண்டியநாடு, தொண்டைநாடு, தகடூர்நாடு, மழநாடு, பல்லவநாடு என்பவையே சங்ககாலத்திற்கு முன்பிருந்து அரச மரபினர் ஆண்ட நாடுகளாக இருந்தன.

கொங்குநாடு பிரிவினைவாதம் பேசும் சாதிவெறியர்களை முளைக்கும்போதே கிள்ளி எறிய வேண்டியது தமிழ்த்தேசியவாதிகளின் கடமை.

*தகடூர் நாடு*

தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்கள் கொங்கு நாட்டைச் சேர்ந்தவை அல்ல. இம்மாவட்டங்கள் தகடூர் நாட்டைச் சேர்ந்தவை.

தமிழக வரலாற்றுக்குத் தனித்த புகழைத் தேடித் தந்துள்ளது தகடூர். பண்டைய தகடூரே தற்போது தருமபுரி. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்புகூட இதன் பெயர் தகடூர்தான். சுமார் 2000 ஆண்டுகளாக வழங்கி வந்த பெயர். தகடூர் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது “அதியமான் நெடுமான் அஞ்சி”. இவ்வூரைத் தலைநகராக கொண்டு ஆண்டவர். அதியனைப் போற்றிப் புகழ்ந்து பாடிய ஔவையார் அதியனின் சபையை அலங்கரித்தார். தித்திக்கும் கரும்பை முதன்முதலில் பயிர் செய்யக் கண்டுபிடித்தவன் அதியமான்.

தகடூர் நாட்டில் இதுவரை கண்டுபிடித்த கல்வெட்டுகளில் தகடூர் நாடு என்றே உள்ளது (தகடூர் நாட்டுத் தகடூர்), சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் ஒரு கல்வெட்டு கூட “கொங்கு” என்ற பெயருடன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இன்றுள்ள சில மக்கள் அறியாமையால் இதைக் கொங்கு நாடு/கொங்கு மண்டலம் என்றழைக்கின்றனர். தகடூர் நாட்டில் வாழும் சில பாமர மக்களும் தகடூர் என்ற வராலாற்று சிறப்பு மிக்க பெயரை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து வருகின்றனர்.

தகடூர் என்றாலே இந்த நாட்டின் பூர்வகுடி மக்களான “மழவர்கள்” வாழ்ந்த பூமி. கொங்கு நாட்டிற்கும் தகடூர் நாட்டிற்கும் நிறைய கலாச்சார வேறுபாடுகள் உண்டு.

தமிழகத்திலேயே எங்கும் காணப்படாத நடுகல் வழிபாடு என்பது தகடூர் நாட்டில் அதிகம். இவ்வாறு வழிபாடு, மொழி, மக்களின் கலாச்சாரம், இனம் அனைத்திலும் கொங்கு நாட்டிலிருந்து வேறுபட்டவர்கள் இந்த தகடூர் நாட்டு மக்கள்.

இப்படி தனி நாடாக இருந்த  தகடூர் நாட்டை (சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி) அறியாமையால் கொங்கு நாடாகக் கூறுகின்றனர். கிடைத்த பல தகவல்களை வைத்துப்பார்க்கும் போது இது ஒரு தனி நாடாக இருந்துள்ளது.

தகடூர் நாடு. சங்க காலம் முதல் 13 ஆம் நூற்றாண்டுவரை இந்த நாட்டை அதியமான் மரபினர் ஆண்டுவந்துள்ளனர். இப்பகுதி கொங்கு நாடல்ல. இது தகடூர் நாடு. அதியமான் மரபினர் மழவர் இனத்தைச் சேர்ந்தவர்கள். மழவர்கள் மழவராயர் பட்டத்துடன் வன்னியரில் உட்பிரிவினராக இப்போது உள்ளனர். இந்த மன்னர்களில் ஐந்து மன்னர்களின் பெயர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இப்பகுதியில் வாழும் மக்கள் கோவை, திருப்பூர், ஈரோடு பகுதியில் செறிந்து வாழும் கொங்கு இன மக்களிடமிருந்து பேச்சு வழக்கு, பழக்கவழக்கம், பண்பாடு, குலத்தெய்வ வழிபாட்டுமுறை ஆகியவற்றால் முற்றிலும் வேறுபட்டவர்கள். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டப் பகுதி ஆகியவை தகடூர் நாட்டில் அடங்குகிறது. இப்பகுதியில் கிடைத்துள்ள கல்வெட்டுக்கள் எதிலும் கொங்கு என்ற சொல்லே இடம்பெறவில்லை. தகடூர் நாடு என்றே கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளது.

தகடூர் நாடு கொங்கு நாட்டோடு சேர்ந்ததல்ல. இது தனிநாடாக இருந்த ஒன்று.

பல ஆய்வுகளிலிருந்து பார்க்கும்போது தகடூர் நாடு என்பது சங்ககாலம் முதல் தனி நாடே அது எந்த நாட்டுடனும் (கொங்கு நாட்டுடன்) சேர்ந்தது அல்ல என்பது தெள்ளத்தெளிவாகிறது.

செவ்வாய், 18 செப்டம்பர், 2018

தமிழ்நாட்டை ஆண்டவர்கள்

*பழங்காலம் முதல் இக்காலம் வரை தமிழ்நாட்டை யாரெல்லாம் ஆண்டிருக்கிறார்கள்?*


👉 நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து கிபி 2ஆம் நூற்றாண்டு வரை *சேரர், சோழர், பாண்டியர்* ஆகிய மூவேந்தர்கள் மற்றும் *தொண்டைமான்கள், பாரி, ஓரி, காரி, அதியமான் முதலான குறுநில மன்னர்கள்* (இவர்கள் *தமிழர்*).

 சோழர் தலைநகரம் பூம்புகார், உறையூர், பழையாறை. பாண்டியர் தலைநகரம் மதுரை. சேரர் தலைநகரம் பெரியாறு அரபிக் கடலில் கலக்கும் இடமான வஞ்சி என்ற கொடுங்களூர் மற்றும் கரூர்.. தொண்டைமான்களின் தலைநகரம் காஞ்சிபுரம். அதியமான்களின் தலைநகரம் தகடூர் என்னும் தருமபுரி..


👉 கிபி 2ஆம் நூற்றாண்டு முதல் கிபி 4ஆம் நூற்றாண்டு தொடக்கம்வரை *களப்பிரர்*. ( இவர்கள் தமிழரா? யார்? எங்கிருந்து வந்தார்கள்? என்று தெரியவில்லை).


👉 கிபி 4ஆம் நூற்றாண்டு தொடக்கம்முதல் கிபி 9ஆம் நூற்றாண்டு வரை *பல்லவர்கள்*. (இவர்கள் *தமிழர்*). இவர்கள் சங்க காலத் தொண்டைமான்களின் வழித்தோன்றல்கள்.. பல்லவர் தலைநகரம் காஞ்சிபுரம். இவர்களின் கடற்கரை தலைநகரம் மாமல்லபுரம்.


👉 கிபி 9ஆம் நூற்றாண்டு முதல் கிபி 13ஆம் நூற்றாண்டு வரை *சோழர்கள்.* இவர்கள் *தமிழர்*.

சோழர் தலைநகரம் பழையாறை, தஞ்சாவூர் பிறகு கங்கைகொண்டசோழபுரம். 250 ஆண்டுகள் கங்கைகொண்ட சோழபுரம் தலைநகரம்.. பிறகு தீவுக்கோட்டை. அதன் பிறகு சிதம்பரம் அருகே பிச்சாவரம்.. இந்தியா, இலங்கை, மாலத்தீவு, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா, கம்போடியா, மியான்மர் ஆகிய நாடுகளின் பகுதிகள் சோழப்பேரரசில் அடங்கியிருந்த காலம்...

ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆகியோர் வலிமைமிக்க பேரரசர்களாக இருந்தனர்..


👉 கிபி 13ஆம் நூற்றாண்டு முதல் கிபி 14ஆம் நூற்றாண்டு வரை *பாண்டியர்*. (இவர்கள் *தமிழர்*). பாண்டியர் தலைநகரம் மதுரை.


👉 கிபி 14ஆம் நூற்றாண்டு முதல் கிபி 17ஆம் நூற்றாண்டு வரை *விஜயநகரப் பேரரசர்கள் மற்றும் தெலுங்க நாயக்க மன்னர்கள்*. (இவர்கள் *தெலுங்கர்*). விஜயநகரப் பேரரசர்கள் கர்நாடகாவில் ஹம்பி என்ற ஊரில் இருந்து ஆண்டார்கள். அவர்களின் ஆளுநர்களாகத் தமிழகத்திற்கு வந்த தெலுங்க நாயக்க மன்னர்கள் மதுரை, தஞ்சை, செஞ்சி ஆகிய ஊர்களைத் தலைநகராகக் கொண்டு ஆண்டார்கள்.


👉 கிபி 17ஆம் நூற்றாண்டு முதல் 20ஆம் நூற்றாண்டின் இடைக்காலம் 1947 வரை *ஆங்கிலேயர்*. இவர்களின் தலைநகரம் சென்னை, கல்கத்தா, டில்லி.


👉 *1920 முதல் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர்களில் யாரெல்லாம் தமிழர்?* யாரெல்லாம் தெலுங்கர்? யாரெல்லாம் மலையாளி? யாரெல்லாம் கன்னடர்? யாரெல்லாம் ஆரியர்?


1. சுப்பராயலு ரெட்டியார்- தெலுங்கர்


2. பனகல் ராஜா தெலுங்கர்


3. *பி. சுப்பராயன் - தமிழர்*


4. முனுசாமி நாயுடு- தெலுங்கர்


5. பொப்பிலி ராஜா- தெலுங்கர்


6. *பி.டி.ராஜன் -தமிழர்.*


7. கே.வி.ரெட்டி நாயுடு - தெலுங்கர்.


8. இராஜாஜி - தெலுங்க பிராமணர் - ஆரியர்


9. டி.பிரகாசம் - தெலுங்கர்.


10. ஓ.பி.ராமசாமி ரெட்டியார் - தெலுங்கர்.


11. பி.எஸ்.குமாரசாமிராஜா -தெலுங்கர்


11. *காமராஜர் - தமிழர்*


12. *எம்.பக்தவச்சலம் - தமிழர்*


13. அண்ணாதுரை - தெலுங்கர்


14. கருணாநிதி - தெலுங்கர்


15. எம்ஜிஆர் - மலையாளி


16. ஜானகி - மலையாளி


17. ஜெயலலிதா - கன்னட பிராமணர் - ஆரியர்


18. *ஓ.பன்னீர்செல்வம் - தமிழர்*


19. *எடப்பாடி பழனிசாமி -தமிழர்*


தமிழ்நாடு தமிழர் நாடு. தமிழ்நாட்டைத் தமிழர்தான் ஆள வேண்டும்.


"வாழும் உரிமை அனைவருக்கும்.

ஆளும் உரிமை தமிழருக்கே".

குறிப்பு:
கீழைச்சாளுக்கிய நாட்டு இளவரசனாக இருந்த அனபாயன் என்பவனின் தந்தை இராஜராஜ நரேந்திர சாளுக்கியன். அவன் தெலுங்கன். தாய் சோழனின் மகள். அவள் தமிழச்சி. அதாவது அனபாயன் என்பவன் ராஜராஜ சோழனின் மகள் வழிக் கொள்ளுப்பேரன். இரண்டாம் ராஜேந்திர சோழனின் மகள் வழிப் பேரன்.
1070 ல் அதிராசேந்திர சோழன் சோழப்பேரரசின் மன்னனாக முடிசூட்டிக்கொள்கிறான். அவன் சில மாதங்களிலேயே இறந்துவிடுகிறான். அதிராசேந்திர சோழனுக்கு வாரிசு இல்லை. அதனால் கீழைச்சாளுக்கிய இளவரசனான அனபாயன் என்பவன் அதிராசேந்திர சோழனின் இறப்புக்குப் பிறகு குலோத்துங்க சோழன் என்ற பெயரில் சோழப்பேரரசின் மன்னனாக 1070 ல் முடிசூட்டிக் கொண்டான். அவன் வழியினர் 4 தலைமுறையினர் 1163 வரை சோழப்பேரரசை ஆண்டனர். அதன் பிறகு மீண்டும் நேரடி சோழர் பரம்பரையினர் ஆட்சிக்கு வந்துவிட்டனர்.

1163 ல் முடிசூடிய இரண்டாம் இராஜாதிராஜ சோழன் நேரடி சோழர் பரம்பரையைச் சேர்ந்தவர்..  இவர் முதலாம் குலோத்துங்க சோழனின் மகனான விக்கிரம சோழனின் மகள்வழிப் பேரன்... இவரது தந்தை சங்கமன் (நெறியுடைய பெருமாள்) ராஜராஜ சோழனின் நேரடி சோழர் பரம்பரையைச் சேர்ந்தவர்.. இந்த நேரடி சோழர் பரம்பரையைச் சேர்ந்தவர்களே பிச்சாவரம் சோழர்கள்..

ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

பல்லவர்கள் தமிழரே!

பல்லவர்கள் தமிழரே!
பல்லவர்கள் யார்?
பல்லவர்கள் தொண்டைநாட்டின் குறுநில மன்னராயிருந்த தமிழ் மன்னர்களான தொண்டைமான் வழிவந்த தமிழர்களே. தொண்டைமான் இளந்திரையன் என்போன் சங்ககாலத்தில் தொண்டை நாட்டை ஆண்ட சிறப்புமிக்க தமிழ் மன்னன் ஆவான். சங்க காலத்திற்குப் பிறகு பல்லவப் பேரரசு அமையும்வரை தொண்டைமான்கள் ஆந்திராவை ஆண்ட சாதவாகனர் பேரரசுக்குக் அடங்கிய குறுநில மன்னர்களாக இருந்துள்ளனர்.
தொண்டைமான்கள் சோழர்களின் வழித்தோன்றல் ஆவர்.
பல்லவ மன்னர்கள் தொண்டைமான்களின் வழித்தோன்றல்கள் என்பதாலேயே பல்லவ மன்னர்களின் வழிவந்த சில மன்னர்களும் தளபதிகளும் தொண்டைமான் என்ற சிறப்புப் பெயருடன் அழைக்கப்பட்டனர். குலோத்துங்க சோழனின் படைத் தளபதியாய் இருந்த கருணாகரத் தொண்டைமானைப் "பல்லவர் தோன்றல்" என்று புகழ்கிறார் ஜெயங்கொண்டார். பல்லவ  வழித்தோன்றலாக இருந்த கருணாகரன் தொண்டைமான் என்ற சிறப்புப்பெயருடன் அழைக்கப்பட்டதற்கு என்ன காரணம்? பல்லவ மன்னர்கள் தொண்டை மண்டலத்தை ஆண்ட தொண்டைமான்களின் வழித்தோன்றல்கள்.

பல்லவர்களின் முன்னோரான தொண்டைமான்கள் தமிழர்கள் என்பது சங்க இலக்கியங்களுள் ஒன்றான பெரும்பாணாற்றுப்படை நூலின் மூலம் நிரூபிக்கப் பட்டிருக்கும்
உண்மை.
கருணாகரத் தொண்டைமானைக் கலிங்கத்துப்பரணி 535 ஆவது பாடலில் "பல்லவர் தோன்றலைப் பாடீரோ" என்கிறார் ஜெயங்கொண்டார்.
இதே கருணாகரத் தொண்டைமானைச் சிலை எழுபது என்ற நூலின் 68ஆவது பாடலில்-
" புவிக்காயிரம் பொன் இறைநீக்கி
கவிக்காயிரம் பொன் பரிசளித்தான்
கருணாகரத் தொண்டை வன்னியனே "
எனக் கவிச்சக்கரவர்த்தி கம்பர் பாடுகிறார்.
கவிச்சக்கரவர்த்தி ஜெயங்கொண்டார் கருணாகரத் தொண்டைமானைப் பல்லவர் என்று அடையாளப்படுத்துகிறார்.
அதே தொண்டைமான் வன்னியர் என்று கவிச்சக்கரவர்த்தி கம்பர் அடையாளப்
படுத்துகிறார்.

ஆகவே பல்லவர்கள் தமிழர்தான். கம்பர் எழுதிய சிலை எழுபது என்ற நூலின் மூலம் பல்லவர்கள் வன்னியர் சாதியைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதியாகிறது.

தென்னிந்தியாவில் அமைந்த வலிமையான முதல் பேரரசு தமிழர்கள் அமைத்த பல்லவப் பேரரசு.
தமிழர்களான பல்லவர்கள் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு 9 நூற்றாண்டுகள் வலிமையான பேரரசாக இருந்து நல்லாட்சி செய்தார்கள். அதன்பிறகு காடவராயர், சம்புவராயர் என்ற பெயர்களில் குறுநில மன்னர்களாக இருந்தும் ஆண்டார்கள். பிற்கால சோழ, பாண்டிய பேரரசுகளின் வீழ்ச்சிக்குப் பிறகும் தெலுங்க நாயக்கர் ஆட்சிக்காலத்தில் உடையார்பாளையம், முகாசா பரூர் ஆகிய பகுதிகளில் பாளையக்காரர்களாக ஆட்சி செய்தனர். அதன்பிறகு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில்  உடையார்பாளையம், முகாசா பரூர் ஆகிய ஜமீன்களுக்கு ஜமீன்தாரர்களாகவும் தொடர்ந்து ஆட்சி செய்தனர். ஜமீன் ஒழிப்புச் சட்டம் வரும்வரை பல்லவர் வழிவந்தோர் ஜமீன்தாரர்களாக இருந்துவந்தனர்.
இப்போதும் வாழும் பல்லவ வழித்தோன்றல்கள் உடையார்பாளையத்திலும், முகாசா பரூரிலும் வாழ்ந்து வருகின்றனர்.

தமிழகப் பகுதியான தொண்டைநாடு ஆந்திர எல்லைக்கு அருகில் இருப்பதால் பல்லவர்கள் தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திராவின் பெரும்பகுதியைப் பிடித்து ஆளுவதற்கும் வசதியாக இருந்துவிட்டது.

பல்லவர்கள் தமிழகம், ஆந்திரம் மட்டுமல்லாமல் கடல்கடந்து இலங்கை, மலேசியா, கம்போடியா வரை சென்று ஆட்சி செய்தனர். கம்போடியாவின் அங்கோர்வாட் என்ற உலகின் மிகப்பெரிய வழிபாட்டுத் தளத்தைப் பல்லவர்கள்தான் கட்டினர்.

பல்லவர்கள் தொடக்க காலத்தில் பிராகிருத மொழியிலும், சமஸ்கிருத மொழியிலும் பட்டயங்களை வெளியிட்டுள்ளனர். சங்க காலத்திற்குப் பிறகு பல்லவப் பேரரசு அமைவதற்கு முன்பு தொண்டைமண்டலம் ஆந்திராவை ஆண்ட சாதவாகனர் பேரரசுக்கு கட்டுப்பட்டு அடங்கிய நாடாக இருந்ததால் முற்காலப் பல்லவர்கள் சாதவாகனப் பேரரசின் தாக்கத்தால் பிராகிருத, சமஸ்கிருத ஆதரவாளர்களாக மாறியிருந்தனர். பல்லவப் பேரரசு அமைவதற்கு முன்பே வட இந்தியாவிலிருந்து சமண, பௌத்தத் துறவிகளும், சமஸ்கிருத வைதீகர்களும் காஞ்சிபுரத்தில் குடியேறி அவர்தம் பிராகிருத, சமஸ்கிருத மொழிகளை மதத்தளத்தில் பரப்பி இருந்ததும் முற்காலப் பல்லவர்கள் பிராகிருத, சமஸ்கிருதப் பட்டயங்களை வெளியிட்டமைக்கு காரணம் ஆகும்.

பல்லவர்கள் தொடக்கத்தில் சமணத்தைத் தழுவி இருந்தனர். முற்காலப் பல்லவர்கள் சமணத்தைத் தழுவியிருந்த போது பிராகிருதத்தையும், பிறகு இடைக்காலப் பல்லவர்கள் வைதீகத்தைப் பின்பற்றிய போது சமஸ்கிருதத்தையும், பிற்காலப் பல்லவர்கள் சைவத்தைப் பின்பற்றிய போது தமிழையும் ஆட்சிமொழியாகக் கொண்டிருந்தனர். சமண, பௌத்த, வைதீக சமயங்கள் சங்க காலத்திற்குப் பிறகு காஞ்சிபுரத்தில் செல்வாக்குடன் பரவியிருந்தன. சமண, பௌத்த மதங்களின் மொழி பிராகிருதம். வைதீக மதத்தின் மொழி சமஸ்கிருதம். தமிழரின் சைவம் தமிழைச் சமய மொழியாகக் கொண்டு வளர்ந்தது. பல்லவர்கள் பிராகிருதம், சமஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளை முறையே ஆட்சி மொழிகளாகக் கொண்டிருந்தமைக்கு அவர்கள் பின்பற்றிய மதங்களே முதன்மைக் காரணம் ஆகும்.
தற்காலத்தில் இசுலாம் மதத்தைத் தழுவியுள்ள சில தமிழர்கள் அரபு மொழியைத் தூக்கிவைத்துக் கொண்டாடுகின்றனர் அல்லவா? இந்துக்கள் சமஸ்கிருதத்தில் வழிபாடு, திருமணச்சடங்கு போன்றவற்றைச் செய்யவில்லையா? அப்படித்தான்.

பல்லவர்கள் தம்மைப் பரத்வாஜ கோத்திரத்திலிருந்து வந்த சத்திரியர்கள் என்று கல்வெட்டுகளில் பதிந்துள்ளனர் எனவும் அதனால் பல்லவர்கள் ஆரியர் எனவும் தமிழரல்லர் எனவும் சிலர் சொல்கின்றனர்.
தமிழகத்தில் வட இந்திய ஆரிய கலாச்சாரமும் மனுதரும நால்வருண கோட்பாடும் புகுந்த பிறகு பல தமிழ்க்குடிகள் தம் சாதிப் பெயரை வடமொழிப்படுத்தி புராணமயப்படுத்தினர்.
எடுத்துக்காட்டாக, கொங்கு மண்டல வேளாளர்கள் தம்மை மரபாள வம்சம் என்றனர். வடமொழியின் மரபாள புராணத்தைத் தழுவி வேளாள புராணம் எழுதிக்கொண்டனர்.
கோனார் என்னும் இடையர்கள் தம்மை யாதவர் என்று சொல்லிக்கொண்டனர்.
தொண்டை மண்டலம், நடுநாடு, வட கொங்கு மண்டலம் ஆகியவற்றைப் பூர்வீகமாக கொண்ட வன்னியர்களான பள்ளிகள் தம்மை அக்னி வம்சம் என்று சொல்லிக்கொண்டனர். வடமொழியில் உள்ள ஆக்னேய புராணத்தைத் தழுவி வன்னிய புராணம் எழுதிக்கொண்டனர்.
தச்சர்கள் தம்மை விஸ்வாமித்திர கோத்திரம் என்று சொல்லிக்கொண்டனர்.
நாடாண்ட மன்னர்கள் தம்மை சத்திரியர் என்று சொல்லிக்கொண்டனர்.
இவ்வாறே பல தமிழ்க்குடிகள் பெருமைக்காக வடமொழிப்பெயர்களையும் வடமொழி புராணங்களையும் தமக்கு ஏற்றிக்கொண்டன.
பல்லவர்கள் சொல்லும் பரத்வாஜ கோத்திரம் என்பதும் அவ்வாறுதான்.

பல்லவர்கள் தமிழர் என்பதில் ஐயமில்லை.

பல்லவர் பற்றிய முந்தைய வரலாற்று ஆய்வாளர்களின் ஆய்வு முடிவுகள் மறு ஆய்வுக்கு உட்பட்டவை.
முந்தைய வரலாற்று ஆய்வாளர்களின் பல்லவர் பற்றிய தரவு சேகரிப்புக்கு செயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி நூலின் செய்தியும், கம்பரின் சிலையெழுபது நூலின் செய்தியும் எட்டாமல் இருந்திருக்கிறது.
அதனால் "பல்லவர்கள் எங்கிருந்து வந்தார்கள், அவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை" என்று பொத்தாம் பொதுவாக எழுதிவிட்டுச் சென்றனர்.
"பல்லவர்கள் யார் என்று தெரியவில்லை" என்று வரலாற்று ஆய்வாளர்கள் எழுதிய காரணத்தால் பல்லவர்கள் மீது தெலுங்கர்கள் உரிமை கொண்டாடத் தொடங்கிவிட்டனர்.