பிச்சாவரம் சோழர் (ஜமீன்தார்) குடும்பத்தினர் ஆண்வழியில் கீழைச் சாளுக்கியர் பரம்பரையா?
இல்லை, இல்லவே இல்லை.. பிச்சாவரம் சோழர் குடும்பத்தினர் ஆண்வழியில் ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழனின் நேரடி சோழர் பரம்பரையே..
அதிராஜேந்திர சோழனோடு சோழர் பரம்பரை முடிந்துவிட்டது என்பதும், அதற்குப் பிறகு ஆண்ட சோழர் அனைவரும் குலோத்துங்க சோழன் வழிவந்த சாளுக்கிய சோழர் என்பதும், மூன்றாம் இராஜேந்திர சோழனோடு அந்த சோழர் பரம்பரையும் முடிந்துவிட்டது என்பதும் கட்டுக்கதை...
அதிராஜேந்திர சோழனுக்குப் பிறகு வந்த குலோத்துங்க சோழனும் , விக்கிரம சோழனும், இரண்டாம் குலோத்துங்க சோழனும், இரண்டாம் இராஜராஜ சோழனும் என 4 சோழர்கள் மட்டுமே சாளுக்கிய சோழர்கள்..
இரண்டாம் இராஜராஜ சோழனுக்குப் பிறகு பதவியேற்ற இரண்டாம் இராஜாதிராஜ சோழனும், அவனது தம்பி மூன்றாம் குலோத்துங்க சோழனும் அவனைத் தொடர்ந்து வந்த மற்ற சோழர்களும் சாளுக்கிய சோழர்கள் அல்ல.. அவர்கள் முதலாம் ராஜராஜ சோழன் வழிவந்த நேரடி சோழர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்.. அதாவது அதிராஜேந்திர சோழனின் சித்தப்பா, பெரியப்பா வழி பங்காளி குடும்பத்திலிருந்து வந்த நெறியுடைய பெருமாள் என்னும் சங்கம சோழனின் வழித்தோன்றல்கள்..
ஆகவே அதிராசேந்திர சோழனோடு தமிழ்ச் சோழர் பரம்பரை முடிந்துபோனது என்பது கட்டுக்கதை..
இரண்டாம் இராஜாதிராஜ சோழன் சாளுக்கிய சோழனான விக்கிரம சோழனின் மகள்வழிப் பேரன் ஆவார். விக்கிர சோழன் தனது மகளை அதிராஜேந்திர சோழனின் பங்காளி மகன் நெறியுடைய பெருமாள் என்னும் சங்கம சோழனுக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார்.. அந்த சங்கம சோழனின் மகனே எதிரிலிப் பெருமாள் என்னும் இரண்டாம் இராஜாதிராஜ சோழன்.. அவர் கங்கைகொண்ட சோழபுரத்தில் பிறந்தவர்..
மூன்றாம் ராஜேந்திர சோழனோடு சோழர் பரம்பரையே முடிந்துவிட்டது என்பதும் கட்டுக்கதை..
சோழரை வீழ்த்தித்தான் மதுரையில் நாயக்கர் ஆட்சி உருவானது..
15 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் தென்மண்டலங்களில் ஒன்றான மதுரைக்கு அரசப்பிரதிநிதியாக இருந்தவர் விசுவநாத நாயக்கர்.
இவர் விஜயநகர சாம்ராச்சியத்தில் கிருஷ்ணதேவராயரின் வெற்றிகரமான தளபதி நாகம்ம நாயக்கரின் மகனாவார்.15 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சோழ ஆட்சியாளரான வீரசேகர சோழர் மதுரையை ஆக்கிரமித்து பாண்டிய மன்னர் சந்திரசேகர பாண்டியனைப் பதவிநீக்கம் செய்தார்.இந்த பாண்டிய மன்னர் விஜயநகர பாதுகாப்பில் இருந்தார். அதோடு அவர் விஜயநகர பேரரசிடம் முறையிட்டதன் பேரில், நாகம்ம நாயக்கரின் கீழ் பாண்டியருக்கு உதவியாக ஒரு பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. நாகம்ம நாயக்கர் வீரசேகரசோழனை வீழ்த்தி மதுரை அரியணையைக் கைப்பற்றினார். விஜயநகர சக்கரவர்த்தி யாராவது ஒருவர் இச்சிக்கலைச் சரிசெய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டபோது,நாகம்ம நாயக்கரின் சொந்த மகனான விசுவநாத நாயக்கர் முன்வந்தார்.மன்னர் விசுவநாதநாயக்கரோடு,கிளர்ச்சியாளருக்கு எதிராக ஒரு படையையும் அனுப்பிவைத்தார். அதன்படியே அவர் தனது தந்தையை விஜயநகர சக்கரவர்த்தியிடம் ஒப்படைத்தார்.இந்த விசுவாசத்தின் வெகுமதியாகவே மன்னர், விசுவநாத நாயக்கரை மதுரை மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கு மன்னராக நியமித்தார். மதுரையில் நாயக்க மன்னர்கள் ஆட்சி உருவானது..
எனவே 15 ஆம் நூற்றாண்டிலும் சோழர்களும் பாண்டியர்களும் ஆண்டிருக்கின்றனர்..
அதனைத் தொடர்ந்து தீவுக்கோட்டையிலும், பிச்சாவரத்திலும் சிற்றரசர்களாக சோழர்கள் அரசாண்டுள்ளனர்..
இப்போது பிச்சாவரம் பாளையக்காரர் என அழைக்கப்படும் சிதம்பரநாத சூரப்ப சோழனார் குடும்பமும் அவரது மகன் மன்னர்மன்னன் என்பவரும் சோழர்களின் தற்கால வாரிசு..
சோழ மன்னர்கள்
விசயாலய சோழ வம்சம்
விசயாலய சோழன் 848-871 ,
ஆதித்த சோழன் 871-907 ,
முதலாம் பராந்தக சோழன் 907-950 ,
கண்டராதித்த சோழன் 950-955 ,
அரிஞ்சய சோழன் 956-957 ,
இரண்டாம் பராந்தக சோழன் 957-973 ,
ஆதித்த கரிகாலன் 957-969 ,
உத்தம சோழன் 970-985 ,
முதலாம் இராசராச சோழன் 985-1014 ,
முதலாம் இராசேந்திர சோழன்
1012–1044 ,
முதலாம் இராசாதிராச சோழன் 1018–1054 ,
இரண்டாம் இராசேந்திர சோழன் 1051–1063 ,
வீரராசேந்திர சோழன் 1063–1070 ,
அதிராசேந்திர சோழன் 1070
சாளுக்கிய சோழர்கள்
முதலாம் குலோத்துங்க சோழன் 1070–1120 (முதலாம் இராசேந்திர சோழனின் மகள் வழிப் பேரன்),
விக்கிரம சோழன் 1118–1136 ,
இரண்டாம் குலோத்துங்க சோழன் 1133–1150 ,
இரண்டாம் இராசராச சோழன் 1146–1163
மீண்டும் விஜயாலய சோழன் வம்ச சோழர்கள்
எதிரிலிப் பெருமாள் என்னும் இரண்டாம் இராசாதிராச சோழன் (விக்கிரம சோழனின் மகள் வழிப் பேரன்)1163–1178 ,
மூன்றாம் குலோத்துங்க சோழன் 1173–1218 ,
மூன்றாம் இராசராச சோழன் 1216–1256 ,
மூன்றாம் இராசேந்திர சோழன் 1246–1279
வீரசேகர சோழன் 15ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில்,
பிச்சாவரம் சோழர் வம்சம் தற்போதுவரை..