செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

வேப்ப மர விதைகளை விதைத்தல்

*மரங்களை நடாமலேயே ஒரு தனிமனிதரால் இலட்சக்கணக்கான மரங்களை உருவாக்க முடியும். எப்படி?*
🌳🌳🌳🌳🌳
கோடைக்காலம் முடிவடையும் சமயத்தில் வேப்பங்கொட்டை *(வேம்பு விதை)* கிடைக்கும் பருவம். வேம்பு விதைகளைக் கிலோ கணக்கில் விலைக்கு வாங்கிக்கொள்ளுங்கள்.
*இருசக்கர வாகனத்திலோ, காரிலோ செல்லும்போது ஒரு கிலோ வேம்பு விதைகளுடன் செல்லுங்கள்!* *செல்லும் வழியெங்கும் சாலையோரங்களில் அவ் விதைகளை வீசிவிட்டுச் செல்லுங்கள்*. *மரம் நடுவதைக் காட்டிலும் மர விதைகளை விதைப்பது எளிது. அவை மழைக்காலங்களில் தாமாக முளைத்து தாமாகவே வளரும்.*

🌳🌳🌳
*வறட்சியை வெல்வதற்கு வழிசெய்யும் நாட்டு மரங்கள்!*

வெளிநாட்டு இறக்குமதி என்றால் தனிமதிப்புதான் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு மாயை பொதுவாக இருப்பதைப் பார்க்கிறோம். மரங்கள் நடுவதிலும் கூட நம் நாட்டு மரங்களை விட்டுவிட்டு வெளிநாட்டு மரங்களை நடும் வழக்கம் உள்ளது. இக்கட்டுரை நம் நாட்டு மரங்களை நடுவதிலுள்ள நன்மைகளை உணர்த்துகிறது!

தமிழகம் முழுக்க பரவலாக பருவமழை பொய்த்துப்போக, இது வரலாறு காணாத வறட்சி என்றும், இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய வறட்சி என்றும் பலரும் பலவிதமாகக் கூறிவருகிறார்கள். எந்த ஒரு செயலுக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு என்கிறார் நியூட்டன் தன் மூன்றாம் விதியில். இந்த வறட்சியும் நாம் முன்பு செய்த வினைகளின் எதிர்விளைவுதான் என்பது சற்று கவனித்துப் பார்த்தால் புரியும்.
காகம், மைனா போன்ற பறவைகளின் எச்சத்தில் ஆங்காங்கே விழுந்து முளைத்துக் கிடக்கும் வேம்பு, புங்கன், வாகை, ஆலம், அரசு போன்ற மரக்கன்றுகளை சேகரித்து, நமது வீடுகளின் முற்றத்திலும் விவசாய நிலங்களின் ஓரங்களிலும் நடலாம்.

அதிக அளவிலான மக்கள் தொகை, அதற்கேற்ப மரங்கள் அழிப்பு என மனித இனம் செய்த செயல்களே இன்றைய நிலைக்குக் காரணம் என்பது நமக்குப் புரிந்தாலும், தற்போது நாம் செய்ய வேண்டியது என்ன என்ற கேள்வி நம் முன்னால் நிற்கிறது! மரங்கள் நடுவதே இதற்கான தீர்வு என்பதை நம்மாழ்வார் போன்ற இயற்கை விஞ்ஞானிகள் மட்டுமல்லாது இயற்கை ஆர்வலர்கள் பலரும் முன்வைத்து வருகின்றனர். ஆனால், இப்படியொரு வறட்சியில் எங்கே கொண்டுபோய் மரம் நடுவது. நட்டாலும் அந்த மரங்கள் வறட்சியைத் தாங்கி உயிர்பிழைத்து வளருமா என்ற கேள்விகள் எழுவது இயல்பானதுதான்! இந்த அச்சத்தைப் போக்கும் வகையில் நமக்கு தீர்வாய் நம் கையில் இருப்பதுதான் நம் நாட்டு மரங்கள்.
நாட்டு மரங்களில் குறிப்பிடத்தக்கவை வேம்பு, புங்கன், பூவரசு, நாட்டு வாகை, புளிய மரம், அரசு, ஆலமரம் போன்ற மரங்களாகும். எண்ணற்ற மர வகைகள் இருக்க, இவற்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்வது ஏனென்றால், இதுபோன்ற மரங்கள் கோடை வெப்பத்தை தாங்கி, குறைந்த அளவு நீரை எடுத்துக்கொண்டு வளர்வதோடு, நல்ல நிழல் தந்து சுற்றுப்புறத்தைக் குளுமையாக்குகின்றன.

நாட்டு மரங்கள் என்பவை நம் மண்ணிற்கு ஏற்ற மரங்களாகும். அதாவது, நம் ஊரின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப வறட்சியைத் தாங்கி வளரக்கூடியவை. நீங்கள் பொதுவாகக் கோடைகாலங்களில் மரங்களைப் பார்க்கும்போது வேம்பு, புங்கன் போன்ற மரங்கள் மட்டும் பசுமையான இலைகளுடன் தளைத்து இருப்பதையும் பிற இறக்குமதி செய்யப்பட்டுள்ள மரங்கள் கோடையில் இலைகளை உதிர்த்துவிட்டு வாடி இருப்பதையும் பார்க்கமுடியும்.

குறிப்பாக தமிழகத்தில் வேப்ப மரத்திற்கு தனித்துவமான இடம் உண்டு! கோயில் திருவிழா என்றால் ஊரைச் சுற்றி காப்பு கட்டுவது முதற்கொண்டு, நாட்டு வைத்தியத்தில் நோயை விரட்டும் மூலிகையாக இருப்பது வரை வேம்பு முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.

வேப்பிலைகள் மட்டுமல்லாமல், வேப்ப மரத்தின் பூ, காய், பட்டை என அனைத்து பாகங்களும் மருத்துவப் பயன் கொண்டவையே! நம் அனைவரின் வீட்டின் முன்பும் ஒரு வேப்பமரம் இருப்பது அனைவரின் வீட்டின் முன்பும் ஒரு மருத்துவர் இருப்பதற்கு சமமானதாகும்.

கோடைகாலத்தில் வேப்ப மரங்கள் தழைத்து வளருகின்றன. காகம், மைனா போன்ற பறவைகளின் எச்சத்தில் ஆங்காங்கே விழுந்து முளைத்துக் கிடக்கும் வேம்பு, புங்கன், வாகை, ஆலம், அரசு போன்ற மரக்கன்றுகளை சேகரித்து, நமது வீடுகளின் முற்றத்திலும் விவசாய நிலங்களின் ஓரங்களிலும் நடலாம். இதற்கெல்லாம் நேரமில்லாதவர்கள் "நர்சரி கார்டன்" என்னும் நாற்றுப் பண்ணைகளிலிருந்து மரக்கன்றுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

நாம் ஆளுக்கொரு வேம்பு நட்டு வளர்த்தால், ஆரோக்கியமான அடுத்த தலைமுறைகளைப் பெறமுடியும் என்பது உறுதி. தமிழகத்தின் பருவநிலையும் மண்ணும் வேம்பு வளர்வதற்கு உகந்ததாக அமைந்துள்ளதால், வேப்ப மரங்களைப் பராமரிப்பதற்கு பெரிதாக நாம் மெனக்கெடத்தேவையில்லை.

வியாழன், 14 பிப்ரவரி, 2019

எது கொங்கு மண்டலம்?

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் வன்னியர் மண்டலம்.

எது கொங்கு மண்டலம்???
கொங்கு மண்டலம் என்பது ஈரோடு, திருப்பூர், கோயமுத்தூர், கரூர் மாவட்ட மேற்குப் பகுதி ஆகியவை மட்டுமே ஆகும்.
அங்கு மட்டுமே கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்கள் கொங்குநாடல்ல. இம்மாவட்டங்கள் மழநாடு, தலைநீர் நாடு, தகடூர் நாடு என சங்க காலம் முதல் அழைக்கப்பட்டு வந்தன. இம்மாவட்டங்கள் வன்னியர்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்கள் ஆகும்.

காவிரிக்குத் தெற்கேதான் கொங்கு மண்டலம்.
கொங்கு மண்டலம் பற்றிய தனிப்பாடல் பழனியைத் தெற்கெல்லையாகவும், ஈரோடு மாவட்டத்திலுள்ள தலமலையை வடக்கெல்லையாகவும் கொண்டதே கொங்கு மண்டலம் என்கிறது........

வன்னியர் பெரும்பான்மை என்பதாலேயே சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் அரசியல் வன்னியர் வசம் உள்ளது.

விதிவிலக்காக எடப்பாடி பழனிச்சாமி வென்றுள்ள எடப்பாடி தொகுதியும் பாமகவின் கோட்டைதான். பலமுறை பாமக வென்ற தொகுதி அது. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பார்த்து மக்கள் ஓட்டுபோட்டதால் எடப்பாடியார் வென்றுள்ளார். எடப்பாடி தொகுதி வன்னியர்கள் பெரும்பான்மையாக வாழும் தொகுதி.

இம்மாவட்டங்களில் கொங்கு கவுண்டர் ஒரு எம்எல்ஏ கூட ஆகமுடியாது. காரணம் கொங்கு கவுண்டர்கள் மிகச் சிறுபான்மையாகவே உள்ளனர். இவர்கள் கடந்த நூறு ஆண்டுகளுக்கு உள்ளாக குடியேறியவர்கள். இவர்கள் யாருக்கும் இம்மாவட்டங்களில் குலதெய்வக்கோயில் கிடையாது. குலதெய்வக் கோயிலைத் தேடி ஈரோடு, காங்கேயம் பகுதிக்கே செல்கின்றனர். ஈரோடு, காங்கேயம் பகுதியே அவர்களின் பூர்வீகம்.

நாமக்கல் பகுதியில் வசிக்கும் நாட்டுக்கவுண்டர்கள் காவிரிக்குத் தெற்கே காங்கேயம் பகுதியிலிருந்து காவிரிக்கு வடக்கே குடியேறியவர்கள். அவர்கள் காவிரிக்கு தெற்கே உள்ள கொங்கு வேளாளர்களுடன் திருமண உறவை முறித்துக் கொண்டு தனி சாதியினராக பிரிந்து காணப்படுகிறார்கள்.
கொங்கு வேளாளர்கள் அனைவரின் பூர்வீகமும் காவிரிக்கு தெற்கில் உள்ள ஈரோடு , காங்கேயம் பகுதிதான் என்பது உறுதியாகிறது.....

திங்கள், 4 பிப்ரவரி, 2019

பழந்தமிழ் இலக்கியத்தில் தமிழ்நாடு

#தமிழ்நாடு_என்ற_சொற்கள் இருக்கும்
சில நூல்களைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.....

#பரிபாடல்,
#பதிற்றுபத்து,
#சிலப்பதிகாரம்,
#மணிமேகலை

பரிபாடலில் வருகிற 'தண்டமிழ் வெளி #தமிழ்நாட்டு_அகமெல்லாம்' என்ற வாக்கியத்துக்கு, மூன்று பகுதிகளும்
#இனிமையானதமிழ்_சூழ்ந்த_தமிழ்நாடு என்று பொருள்.

2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பதிற்றுபத்தில் ' #இமிழ்கடல்_வெளி_தமிழகம்' என்று எழுதப்பட்டு இருக்கிறது. அதாவது #கடலை_எல்லையாகக்_கொண்ட_தமிழ்நாடு.

சிலப்பதிகாரத்தில்,
#தென்தமிழ்_நந்நாடு' என கூறப்பட்டிருக்கிறது. இதன் பொருள் #நல்ல_தமிழ்நாடு.

மணிமேகலையில், '
#சம்புதீவினில்_தமிழக_மருங்கில்' என வருகிறது. #தமிழ்நாடு_சம்புத்தீவு என அழைக்கப்படுகிறது என்பதே இதன் பொருள்.

மழநாடு

*மழநாடு*
மழவர்கள் ஆண்ட நாடு மழநாடு என்று அழைக்கப்பட்டது.

இடம்

திருச்சிராப்பள்ளிக்கு மேல்பால் காவிரியாற்றுக்கு வடபுறத்திலுள்ள பகுதி முதல் பண்டைய எருமைநாடு வரை (தற்போதய மைசூர்) தற்கால நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை மாவட்டத்தின் மேற்கு பகுதி, திருச்சி மாவட்டத்தின் சில பகுதிகள் மற்றும் கரூர் மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியது மழநாடு. கி.மு. முதல் கி.பி. வரை மழநாட்டின் வரலாறு நீள்கிறது. சங்ககால புலவர் ஔவையாரால் பாடப்பட்ட அதியமான்கள், வல்வில் ஓரி, கொல்லி மழவன், அரியலூர் ஜமீன் சமஸ்தானத்தை கி.பி. 14ம் நூற்றாண்டில் ஆண்ட ஒப்பில்லா மழவராயர், திருவக்கரை வல்லவ நாட்டை கி.பி. 17ஆம் நூற்றாண்டில் ஆண்ட மழவராய பண்டாரத்தார் போன்றோர் மழநாட்டை ஆண்டு வந்தனர். தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதையரின் முன்னோர்கள் இந்த அரியலூர் மழவராயர்களால் போற்றப்பட்டனர். மழநாடு எல்லை குறித்த கல்வெட்டுகள் கருநாடக மாநிலத்தில் கிடைத்துள்ளன.

மழகொங்கம்

கி.பி. 770ல் வெளியிடப்பட்ட வேள்விக்குடி செப்பேடுகள் மழகொங்கம் பகுதியைக் குறிப்பிடுகின்றன. அதில், இராஜசிம்மன்(மாறவர்மன்), பூக்கள் விரிகின்ற சோலைகளையுடைய காவிரியைக் கடந்து அழகமைந்த வில்லினால் மழகொங்கம் பகுதியை அடிப்படுத்தினான் என்றுள்ளது. இந்த மழகொங்கம் தமிழ் நாட்டிலே காவிரியின் வடகரையில் உள்ளது. அப்போது, சங்க இலக்கியத்தில் மழவர் பெருமகன் என்றழைக்கப்படும் அதியமான்கள் இப்பகுதியை ஆண்டு வந்தார்கள். அதியமான்கள் உருவாக்கிய கோயில்களே நாமக்கல் குகைக்கோயில்கள். தமிழக அரசியல் வரலாற்றில் மழகொங்கம் முக்கிய பங்கு வகித்தது. மலை வளமும் நீர் வளமும் மிக்கது. இப்பகுதி கிழக்கே பாச்சில்(திருவாசி) வரை பரவியிருந்தது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருமழபாடி பண்டை நாளில் மழவர் ஊராகத் திகழ்ந்தது.

மழநாடு

தற்கால திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் பிரம்மியம் எனும் ஊரில் கிடைத்த கி.பி. 998ஆம் ஆண்டு கல்வெட்டில் மழநாடு என்றொரு நாடு இருப்பது பதிவாகியுள்ளது. கி.பி. 11ஆம் நூற்றாண்டில் தொல்காப்பியத்திற்கு இயற்றப்பட்ட இளம்பூரணர் உரையில் மழநாடு என்றொரு நாடு இருப்பது குறிப்பிடப்படுகிறது. மேலும், இந்த மழநாடு திருச்சிராப்பள்ளிக்கு மேல்பால் காவிரியாற்றுக்கு வடபுறத்திலுள்ள பகுதி என்று அகராதிகள் கூறுகின்றன. மேலும், மழகொங்கம், மழபுலம் ஆகிய சொற்களுக்கு அருத்தம் மழநாடு என்று அகராதிகள் குறிப்பிடுகின்றன. கி.பி. 12ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் இயற்றப்பட்ட பெரியபுராணம் மேல்மழநாட்டை மேன்மழநாடு எனும் நீர்நாடு என்று குறிப்பிடுகிறது. சங்க இலக்கியமான புறநானூற்றில் அதியமான் நெடுமான் அஞ்சியை ஔவையார் மழவர் பெருமகன் என்றும் தலை நீர் நாடன் என்றும் அழைக்கிறார். இதன் மூலம், மழவர் பெருமகனான அதியமான் நெடுமான் அஞ்சியின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நாடு தலைநீர் நாடு எனப் பெயர் பெற்றிருந்தது என்பதும் இங்கு ஒப்புநோக்கத்தக்கது. கல்வெட்டுகளில் தலைநீர் என்ற சொல் முதல் மடைப் பாய்ச்சல் என்ற அருத்தத்தில் பயின்று வரும். இதன் மூலம் காவிரியாறு முதன்முதலில் பாயும் நாடு தலைநீர் நாடு என்பது புலப்படும். இப்பெரியபுராணத்துப் பாடலின் உரையிலிருந்து மழநாடு மேல்மழநாடு, கீழ்மழநாடு முதலிய நிலப்பகுப்புகளை உடையது என்றும் அதில் கீழ்மழநாட்டை திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவாசியைத் தலைநகராகக் கொண்டு கொல்லி மழவன் எனும் அரசன் ஆண்டான் என்றும் அறியமுடிகிறது. இதன்மூலம், மழவர் ஆண்ட நாடு மழநாடு என்று அழைக்கப்பட்டது என்று அறியமுடிகிறது. மேலும், சுமார்த்தப்பிராமணரின் ஒரு உட்பிரிவு மழநாட்டுப்பிருகச்சரணம் என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலமும், மழநாடு என்றொரு நாடு இருப்பது நமக்குத் தெரியவருகிறது.

மழவர் பெயரில் உள்ள இடங்கள்

வரலாற்று இடப்பெயர்கள்

தற்கால தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் உள்ள சின்னாங்குப்பம் என்னும் ஊரில் கிடைத்த கி.பி. 8-9ஆம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டில், கங்க மன்னன் ஸ்ரீ புருசவருமனது ஆட்சிக் காலத்தில் பிருணிதுவியார்(கல்வெட்டியலார் ச. கிருஷ்ணமூர்த்தி பிருதிவிராயர் என படித்து உள்ளார்) என்பவர் புறமலை நாட்டை ஆண்டு வந்தார் என்றும் அவர் மழவூர்த் தொறுக் கொள்ளச் சென்ற போது அப்பூசலில் செருப்பச்சடையன் என்ற வீரன் இறந்து பட்டான் என்றும் அவ்வீரனுக்கு எடுக்கப்பட்டதே அந்த நடுகல் என்ற செய்தியும் பதிவாகியுள்ளது.
தற்கால தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் உள்ள சிந்தல்பாடி என்னும் ஊரில் கிடைத்த கி.பி. 14ஆம் நூற்றாண்டு கல்வெட்டில், கானப்பள்ளி எனும் ஊரில் மழவராயப்புத்தேரி எனும் ஏரி இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

வரலாற்றுச் சான்றுகள்

தொல்லியல் மூலங்கள் தரும் செய்திகள்

கி.பி. 6ஆம் நூற்றாண்டு

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் அசுரம்சேரி எனும் ஊரில் வட்டெழுத்து பொறிப்பு பெற்ற கி.பி. 6ஆம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டில், பல்லவன் சிம்மவர்மனுடைய இருபத்தொன்பதாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 524) ஆடி மாதம் புணர்பூச நட்சத்திரம் கூடிய நாளின் போது தகடூரின் பிடி மண்ணேரிக் கிழக்குப் பகுதியை ஆள்பவருடைய படையை எதிர்த்து இலாட நாடு ஆளும் அரைசர், மழவரைசர் ஆகியோர் இணைந்த கூட்டுப் படையைச் சேர்த்துக் கொண்டு போரிட்டு வென்று வீர சாவடைந்தார் கங்க அதி அரைசர் உடைய படைத் தலைவரான கல்நாட்டின் மாதன் பெருதிஅரைசர் என்பவர், என்னும் செய்தி பதிவாகியுள்ளது.
கி.பி. 8ஆம் நூற்றாண்டு தொகு
கி.பி. 770ல் வெளியிடப்பட்ட வேள்விக்குடி செப்பேடுகள் மழகொங்கம் பகுதியைக் குறிப்பிடுகின்றன. அதில், இராஜசிம்மன்(மாறவர்மன்), பூக்கள் விரிகின்ற சோலைகளையுடைய காவிரியைக் கடந்து அழகமைந்த வில்லினால் மழகொங்கம் பகுதியை அடிப்படுத்தினான் என்றுள்ளது. இந்த மழகொங்கம் தமிழ் நாட்டிலே காவிரியின் வடகரையில் உள்ளது.
வேள்விக்குடி செப்பேடுகள் வழங்கிய பராந்தகன் நெடுஞ்சடையன் பாண்டியனின் தாய் மழவர் குடியில் பிறந்தவராவார். இவரை மழவேந்திரனின் மகள்(செப்பேட்டில் உள்ள சங்கத சுலோகத்தின் படி மளவேந்திரன்) அதாவது மழவ மன்னன் மகள் என்றும் இவரை பாண்டிய வேந்தன் இராஜசிம்மன்(மாறவர்மன்) மணந்தான் என்றும் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. இச்செப்பேட்டுகள் பராந்தகன் நெடுஞ்சடையன் பாண்டியனின் மூன்றாம் ஆட்சி ஆண்டில் வழங்கப்பட்டன என்பதால் இவற்றின் காலம் கி.பி.770 என அறியமுடிகிறது.

கி.பி. 8-9ஆம் நூற்றாண்டு

தற்கால தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் உள்ள சின்னாங்குப்பம் என்னும் ஊரில் கிடைத்த நடுகல் கல்வெட்டில், கங்க மன்னன் ஸ்ரீ புருசவருமனது ஆட்சிக் காலத்தில் பிருணிதுவியார்(கல்வெட்டியலார் ச. கிருஷ்ணமூர்த்தி பிருதிவிராயர் என படித்து உள்ளார்) என்பவர் புறமலை நாட்டை ஆண்டு வந்தார் என்றும் அவர் மழவூர்த் தொறுக் கொள்ளச் சென்ற போது அப்பூசலில் செருப்பச்சடையன் என்ற வீரன் இறந்து பட்டான் என்றும் அவ்வீரனுக்கு எடுக்கப்பட்டதே அந்த நடுகல் என்ற செய்தியும் பதிவாகியுள்ளது.

கி.பி. 9ஆம் நூற்றாண்டு

தற்கால தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் உள்ள செல்லம்பட்டி என்னும் ஊரில் கிடைத்த நடுகல் கல்வெட்டில், கி.பி.898ஆம் ஆண்டு தகடூர் மாவலிவாணராயரடியான் கூடல் மாணிக்கன் உளைக்குன்றினை ஆண்டு வந்தான். அவனுடைய மாமனும் கோவூர் நாட்டு ஐந்நூறின் தலைவனாக விளங்கியவனுமான மழற்பையன் என்பவனின் அடியான் சூழிபுளியன் என்பவன், புலியைக் கொன்றபோது இறந்து பட்டான் என்றும் அவ்வீரனுக்கு எடுக்கப்பட்டதே அந்த நடுகல் என்ற செய்தியும் பதிவாகியுள்ளது. இக்கல்வெட்டில் மழற்பையன் என்ற சொல் மழவர் மகன் என்ற அருத்தத்தில் பயின்று வந்துள்ளது.

கி.பி. 10ஆம் நூற்றாண்டு

கண்டராதித்த சோழனின் பட்டத்தரசி, அருண்மொழிவர்மனை(முதலாம் இராஜராஜ சோழன்) வளர்த்த வளர்ப்புத்தாய், செம்பியன் மாதேவி, மழவர் குடியில் பிறந்தவராவார். இவர் கொல்லி மலை மழவரையரின் மகளாராவார். இவரை கல்வெட்டுக்கள் ஸ்ரீ உத்தம சோழதேவரை திருவயிறு வாய்த்த மழவரையர் மகளார் பராந்தக மாதேவ (டிகளார்) ராந செம்பியன் ம(ர)ஹ(ர) தேவியார் என்றும் மேற்கெழுந்தருளிய தேவர் கண்டராதித்த தேவர் தேவியார், மழப் பெருமானடிகள் மகளார் பராந்தகன் மா தேவடிகளான செம்பியன் மா தேவியார் என்றும் கூறும். இவரது காலம் கி.பி.910-1001 ஆகும்.
அருண்மொழிவர்மனின்(முதலாம் இராஜராஜ சோழன்) தந்தை சுந்தர சோழனின் மனைவி, முதலாம் இராஜராஜ சோழனின் தாய், வானவன் மாதேவி, மலையமான் வமிசத்து மழவர் குடியில் பிறந்தவராவார்.
தற்கால திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் பிரம்மியம் எனும் ஊரில் கிடைத்த கி.பி. 998ஆம் ஆண்டு கல்வெட்டில் மழநாடு என்ற சொல் பதிவாகியுள்ளது.
தற்கால கருநாடக மாநிலம் ராமநகரம் மாவட்டம் சன்னபட்னா வட்டத்தில் உள்ள ஊர் மாலூர்பட்டினம். இந்த ஊரில் கிடைத்த கல்வெட்டுகள் படி இவ்வூர் மழவூர் என்றும் முடிகொண்டசோழமண்டலத்து இராஜேந்திரசோழவளநாட்டுக் கிழலைநாட்டு மழவூரான இராசேந்திரசிங்கச்சதுர்வேதிமங்கலம் என்றும் முடிகொண்டசோழமண்டலத்து கரிகாலசோழவளநாட்டு பெரிய மழவூர் இராசேந்திரசிங்கச்சதுர்வேதிமங்கலம் என்றும் அழைக்கப்படுகிறது.மற்றொரு கல்வெட்டு சன்னபட்னா எனும் ஊரை சிறியமழவூர் என்று குறிப்பிடுகிறது. இதன்மூலம், மழவூர்பட்டினம் என்னும் ஊர் மாலூர்பட்டினம் என்றும் சின்னமழவூர்பட்டினம் என்ற பெயர் சின்னபட்டினம் என்றாகி இன்று சன்னபட்னா என்றும் வழங்கப்படுவது புலனாகிறது.
கி.பி. 14ஆம் நூற்றாண்டு தொகு
தற்கால தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தில் உள்ள சிந்தல்பாடி என்னும் ஊரில் கிடைத்த கல்வெட்டில், கானப்பள்ளி எனும் ஊரில் மழவராயப்புத்தேரி எனும் ஏரி இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

கி.பி. 16ஆம் நூற்றாண்டு

தற்கால திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேசூர் பேரூராட்சியில் உள்ள ஈசுவரன் கோவிலில் உள்ள கி.பி. 1528ஆம் ஆண்டு கல்வெட்டில், சி(சீ)ர்மழவர் குலம் என்ற சொல் பதிவாகியுள்ளது. இக்கல்வெட்டு படி, கரிதுர்க்க நாவலற்கருள் கம்பையாதிபன் கன்னன் மிகு பொன்னைநாடன் கார்போலவந்த பாரியாழ்வானுக்கந்ததொரு கருணை உண்ணாமுலையன் என்பவன், திருமருவுமிசுரத்திம்மையன் என்பவனின் கிறுபைகொண்டு, சி(சீ)ர்மழவர் குலம் விளங்கத் தேசூரிலே செங்கை வேலாயுதனுக்கொரு திருக்கோவிலைக் கட்டுவித்தான் என்றுள்ளது.
தற்கால திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் மயில்ரங்கம் எனும் ஊரில் கிடைத்த கி.பி. 1532ஆம் ஆண்டு கல்வெட்டில் மாடைகளில் மழவராயர், அவினாசி மழவராயர் ஆகிய சொற்கள் பதிவாகியுள்ளன.

இலக்கிய மூலங்கள் தரும் செய்திகள்

சங்ககாலம்

சங்க இலக்கியங்களில் மழவர்

இவர்கள் மணிகட்டிய வேலை ஏந்திப் போர் புரியும் பாங்கினர். வள்ளல் அதியமான் நெடுமான் அஞ்சியும் வள்ளல் ஓரியும் மழவர் பெருமகன் எனக் குறிப்பிடப்படுகின்றனர். பல்யானைச் செல்கெழு குட்டுவன் மூன்றாம் பத்தின் தலைவன். இவன் மழவர்களைக் காக்கும் கவசமாக விளங்கினான். இவர்கள் ஆயர் குலத்தின் ஒரு பிரிவினர் ஆவர். இம்மழவர் குடியினர் தண்டாரணியப் பகுதியிலும் வாழ்ந்தனர். இவர்கள் வருடை ஆடுகளைப் பிடித்துவந்து பழக்கப்படுத்தி வளர்த்து அதன் பயனைத் துய்த்து வந்தனர். ஆறாம்பத்துத் தலைவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் அவர்களின் ஆடுகளைக் கவர்ந்துவந்து தன் நாட்டுத் தொண்டி மக்களுக்கு வழங்கினான். அன்றியும் ஆடுகளைக் கவர்ந்து வரும்போது எதிர்த்த ஏனை கரந்தை மழவரையும் போரில் வென்றான்.மழவர் வில்லும் அம்பும் ஏந்தியவராய் வீளை (வாய் ஊதல்) அடித்துக்கொண்டு நாள்தோறும் ஆனிரைகள் மேய்த்து வருவர்.

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் விடியும் பொழுதில் தன்னைத் தாக்கிய மழவர்களை விரட்டினான் மழவர் குடியினர் குதிரைமலை நாட்டில் வாழ்ந்துவந்தனர். பொதினி எனப்பட்ட பழனிமலை அரசன் தனைத் தாக்கிய இந்த மழவர்களை விரட்டினான். திருச்சி மாவட்டத்தில் திருப்பாச்சில் ஆசிரமத்தைத் தலைநகராகக் கொண்டு கொல்லி மழவன் என்பவன் ஆட்சிபுரிந்துவந்தான். இது இடைக்கால நிலை. இக்காலத்துத் திருமழபாடி முற்காலத்தில் மழவர்குடியினர் வாழ்ந்த இடம் எனக் கருத இடமுண்டு. இவர்கள் வாழ்ந்த ஊர் பாடி என்று வருவதால் இவர்கள் முல்லை நில குடியினர் என்பது விளங்குகிறது.

சிற்றுரை சேர்ந்த ஆயர்கள் கையை தலை மீது வைத்து வருந்தும்படி கொழுத்த ஆவினை கவர்ந்து அதன் இறைச்சியை பாலைத்திணை மழவர் உண்டனர் என்றும், கன்றினையுடைய பசுவினை கொன்று உண்டனர் என்றும் கடவுளுக்கும் காணிக்கையாக பலியிட்டனர் என்றும் அறிய முடிகிறது.

மழபுலம்

மழபுலம் என்பது சங்ககாலத்தில் மழவர் வாழ்ந்த நாடு.
வேங்கட நாட்டை ஆண்ட தமிழ்மன்னன் புல்லி
இவன் மழவர்களை வணங்கச் செய்து அவர்களது நாட்டைத் தன் ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்தான்.
சங்ககாலப் புலவர் மாமூலனார் இந்தச் செய்தியைக் குறிப்பிடுகிறார்.. கள்வர் கோமான் மழபுலம் வணக்கிய மாவண் புல்லி

கி.பி. 11ஆம் நூற்றாண்டு

தொல்காப்பியம் - இளம்பூரணர் உரை

கி.பி. 11ஆம் நூற்றாண்டில் தொல்காப்பியத்திற்கு இயற்றப்பட்ட இளம்பூரணர் உரையில் மழநாடு என்றொரு நாடு இருப்பது குறிப்பிடப்படுகிறது.

திருத்தொண்டர் திருவந்தாதி
கி.பி. 11ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் முதலாம் இராஜராஜ சோழன் காலத்தில் இயற்றப்பட்ட திருத்தொண்டர் திருவந்தாதியில் சுந்தரமூர்த்தி நாயனாரைப் பற்றிக் கூறும் பாடலில் மேல்மழநாட்டைப் பற்றி குறிப்புள்ளது.

கி.பி. 12ஆம் நூற்றாண்டு

பெரியபுராணம்

கி.பி. 12ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பெரியபுராணம் மேல்மழநாட்டை மேன்மழநாடு எனும் நீர்நாடு என்று குறிப்பிடுகிறது.

கி.பி. 13-17ஆம் நூற்றாண்டு

கைலாயமாலை

கைலாய மாலை எனும் இவ்விலக்கியம் செகராசசேகரன் என்னும் அரசன் யாழ்ப்பாணத்தை ஆளத் துவங்கிய போது உறையூரைச் சேர்ந்த செந்தியப்பன் என்பவருடைய மகனான முத்துராசக் கவிராசர் என்பவரால் பாடப்பட்டது. இதில், பாண்டி மழவன் என்பவன், செகராசசேகரனிடம் சென்று யாழ்ப்பாண அரசை ஏற்கும் படி வேண்டினார் என்ற செய்தி பதிவாகியுள்ளது. மேலும், பாண்டி மழவனை விவரிக்கையில், இவனை பொன்பற்றியூரன், அண்டர் போரில் அழல்சூரன், மின்பற்று காலின் விலங்குதன்னை - அன்புற்று வெட்டுவித்து விட்டபுகழ் வேளாளர் வங்கிஷத்தில் திட்டமுடன் வந்து செனனித்தோன் என இன்னும் பலவாறு விவரிக்கிறது.

கி.பி. 15ஆம் நூற்றாண்டு

திருப்புகழ்

கி.பி. 15ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதரால் இயற்றப்பட்ட திருப்புகழில் காவிரி ஆறு நிறைந்து வரும் கால்வாய்கள் உள்ள சிறந்த மழ நாட்டுப் பகுதியில் சிறப்புடன் உள்ள பூவாளூரில் வீற்றிருக்கும் பெருமாளே என்று குறிப்பிடப்படுகிறது.

கி.பி. 18ஆம் நூற்றாண்டு

சோழ மண்டல சதகம்

கி.பி. 18ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் மறுபதிப்பாக வெளியிடப்பட்ட சோழ மண்டல சதகத்தில் மழநாட்டுப் பகுதிகள் இராசாச்சிரய வளநாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.