சனி, 24 மார்ச், 2018

தமிழ்நாடு என்று பெயர்மாற்றம் செய்ததிற்கான பெருமை அண்ணாதுரையைச் சேருமா?

சென்னை மாகாணத்துக்கு, 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டப்பட வேண்டும் என்று முதல் குரல் எழுப்பியவர் ம.பொ.சியே. 29.11.1955-ல் தனது தமிழரசு கழகக் செயற் குழுக் கூட்டத்தில் முதன்முதலில் ம.பொ.சி தான், “தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்தை மெட்ராஸ் ஸ்டேட் என்றழைக்கப்படுவதை எதிர்க்கிறோம். தமிழ்நாடு என்று பெயரிடப் பட வேண்டும்” என்று தீர்மானத்தை நிறை வேற்றினார்.

பொங்கல் திருநாளை தமிழினத்தின் தேசியத் திருநாளாகக் கொண்டாட முதன் முதலில் ஏற்பாடு செய்தவர் ம.பொ.சி. 1946-ம் ஆண்டு ஜனவரி 14-ல் சென்னை கோகலே மண்டபத்தில் முதல் தமிழர் திருநாள் கொண்டாடும் பழக்கத்தைத் தொடங்கி வைத்தவரும் இவரே.

தமிழ்நாடு என பெயர்மாற்றம் செய்யவேண்டி அதற்காகப் போராடி தன் உயிரையே போக்கியவர் சங்கரலிங்கநாடார்.

தமிழ்நாடு என பெயர்மாற்றம் செய்ய அண்ணாதுரை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது தமிழரின் எழுச்சியால்தான்.

அதைப்போல தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தியவர்கள் தமிழ்மொழி உணர்வாளர்களும், தமிழ் மாணவர்களும்தான்.
இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரம் அடைந்த போது தவிர்க்கமுடியாமல் ஓட்டுக்காக திராவிடிஸ்ட்டுகளும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இணைந்துகொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பின்னால் வந்த திராவிடிஸ்ட்டுகள் அண்ணாதுரைதான் தமிழ்நாடு என பெயர்மாற்றினார் என்று வெறுங்கூச்சல் போடுகின்றனர்.