திங்கள், 16 ஏப்ரல், 2018

பல்லவர்கள் தமிழர்தான்

தமிழரான பல்லவர் வரலாறு ஆரிய பிராமணர்களாலும் திராவிட தெலுங்கர்களாலும் திரிக்கப்பட்டுள்ளது.

பல்லவர்கள் தொண்டைமான் வழிவந்த தமிழர்கள்.

பல்லவர்கள் தொடக்க காலத்தில் வடமொழியில் கல்வெட்டுக்களை வெளியிட்டுள்ளனர். அதனால் அவர்கள் ஆரியர் என்று வறலாற்றாய்வாளர் சிலர் தவறாக பதிவுசெய்துள்ளனர்.
பல்லவருக்கு முன்பே வட இந்தியாவிலிருந்து காஞ்சிபுரத்தில் புத்த, சமண துறவிகளும் சமஸ்கிருத வைதீகர்களும் குடியேறி அவர்தம் வடமொழியை மதத்தளத்தில் பரப்பி இருந்தமையே அக்காலத்தில் பல்லவர்கள் சமஸ்கிருத கல்வெட்டுகளை வெளியிட்டதற்கு காரணம்.

பல்லவர்கள் ஈரானியர் என்றால் ஈரானிய மொழியில் அல்லவா கல்வெட்டுக்களை வெளியிட்டிருக்க வேண்டும்.

பல்லவர்களை தமிழரல்லர் என்று சொன்ன வரலாற்றாய்வாளர்கள் ஆரிய, திராவிட, தெலுங்க பக்தர்கள்தான். அதனால் பெருமைமிகு தமிழர் வரலாற்றை மறைக்க முயன்றனர்.

சோழர்களும் சமஸ்கிருத ஆதவாளர்களாக இருந்தனர் . சமஸ்கிருதப் பெயர்களைச் சூட்டிக்கொண்டனர். அதனால்
சோழர்களையும் தமிழரல்லர் அவர்கள் வடவர்கள் அல்லது ஈரானியர் என்று சொல்வார்கள் போலும். என்ன ஒரு குழப்படி வேலை.

முந்தைய வரலாற்றாய்வாளர்களின் ஆய்வு முடிவுகள் பல மறு ஆய்வுக்கு உட்பட்டவை.

*பல்லவர்கள் தம்மைப் பரத்வாஜ கோத்திரத்தில் வந்த பிராமண சத்திரியர்கள் என்று கல்வெட்டுகளில் பதிந்துள்ளனர் எனவும் அதனால் பல்லவர்கள் ஆரியர் எனவும் தமிழரல்லர் எனவும் சிலர் சொல்கின்றனர்.

தமிழகத்தில் வட இந்திய ஆரிய கலாச்சாரமும் மனுதரும நால்வருண கோட்பாடும் புகுந்த பிறகு பல தமிழ்க்குடிகள் தம் சாதிப் பெயரை வடமொழிப்படுத்தி புராணமயப்படுத்தினர்.

எடுத்துக்காட்டாக கொங்கு மண்டல வேளாளர்கள் தம்மை மரபாள வம்சம் என்றனர். வடமொழியின் மரபாள புராணத்தைத் தழுவி வேளாள புராணம் எழுதிக்கொண்டனர்.

கோனார் என்னும் இடையர்கள் தம்மை யாதவர் என்று சொல்லிக்கொண்டனர்.

தொண்டை மண்டலம், நடுநாடு, வட கொங்கு மண்டலம் ஆகியவற்றைப் பூர்வீகமாக கொண்ட வன்னியர்களான பள்ளிகள் தம்மை அக்னி வம்சம் என்று சொல்லிக்கொண்டனர்.

தச்சர்கள் தம்மை விஸ்வாமித்திர கோத்திரம் என்று சொல்லிக்கொண்டனர்.

நாடாண்ட மன்னர்கள் தம்மை சத்திரியர் என்று சொல்லிக்கொண்டனர்.

இவ்வாறே பல தமிழ்க்குடிகள் பெருமைக்காக வடமொழிப்பெயர்களையும் வடமொழி புராணங்களையும் தமக்கு ஏற்றிக்கொண்டன.

பல்லவர்கள் சொல்லும் பரத்வாஜ கோத்திரம் என்பது அவ்வாறுதான்.

உலக மொழிகள் பலவற்றில் தமிழ்ச்சொற்களை ஒத்த பல சொற்கள் உள்ளன.

ஈரானிய பஹலவா என்ற சொல்லுக்கும் தமிழ் பல்லவர் என்ற சொல்லுக்கும் உள்ள ஒலிப்பொற்றுமையை மட்டும் வைத்து பல்லவர்களை ஈரானியர் என்று கதைகட்ட வேண்டாம்.

பல்லவர்கள் தொண்டைநாட்டின் குறுநில மன்னராயிருந்த தமிழ் மன்னர்களான தொண்டைமான் வழிவந்த தமிழர்களே.
தொண்டைமான்கள் சோழர்களின் வழித்தோன்றலே ஆவர்.
களப்பிரர் காலத்தில் நிகழ்ந்த இருட்டடிப்பால் வடமொழிப்பண்பாடு, வடமொழி ஆதிக்கம் தமிழகத்தில் புகுந்து பல உண்மைகளை மறைத்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக