புதன், 14 மார்ச், 2018

தமிழ் என்றால் இலக்கியம் மட்டுமல்ல.

தமிழ் இலக்கியத்தை மட்டுமே படித்தால் அது தமிழ்த்துறை அல்ல.
தமிழ் இலக்கியத்தை மட்டுமே படித்தால் அது
தமிழிலக்கியத்துறை.

இலக்கியம் மட்டுமே தமிழ் அல்ல.
முதலில் தமிழ் ஒரு மொழி. அந்தவகையில் தமிழ் மொழியின் அமைப்பை அறிவியல் முறையில் விளங்கிக்கொள்ளவும் , அறிவியல் முறையில் தமிழ் மொழியை ஆராயவும், தமிழ்மொழியின் வளர்ச்சி வரலாற்றை ஆராயவும்
நவீன மொழியியல் தேவை.
மொழியியலை புறக்கணிப்பதென்பது தமிழாய்வை பின்னுக்கே தள்ளிவைக்கும்.

தமிழில் இலக்கிய நூல்கள் மட்டுமல்லாமல் சித்தர்கள் படைத்த மருத்துவ அறிவியல் நூல்கள் ஏராளமாக உள்ளன.
சித்தர்களின் மருத்துவ அறிவியலை அறிமுகம் செய்யாமல் அவர்களின் சித்தர் இலக்கியமான தத்துவஞானப் பாடல்களை மட்டுமே பயிற்றுவிப்பதால் பழந்தமிழரின் மருத்துவ அறிவியலை நாம் உணராமலேயே இருக்கிறோம். அதனால் சித்தர்கள் தமிழில் படைத்த மருத்துவ அறிவியல் சித்தமருத்துவத்துறையாக தனியாக ஒதுங்கிக்கொண்டது.
சித்தமருத்துவத்துறை தமிழறிஞர்களின் கையில் இல்லாமல் தமிழார்வமில்லாதவர்களிடம் சென்றுவிட்டது.

தமிழ் இனத்தின் வரலாறு, பண்பாடு போன்றவற்றை ஆராய மானுடவியல் , இனவரைவியல், கல்வெட்டியல், வரலாற்றியல் போன்றவை அவசியம்.

தமிழ் என்றால் கதை, கவிதை, கட்டுரை, நாடகம், காப்பியம் போன்ற வடிவில் உள்ள இலக்கியம் மட்டுமல்ல.
தமிழ் மொழி, தமிழில் உள்ள இலக்கியம், தமிழில் உள்ள மருத்துவம், தமிழில் உள்ள அறிவியல், தமிழினம் எல்லாவற்றையும் உள்ளடக்கியதைக் கொண்டதே தமிழ்த்துறை.

தமிழ்த்துறை பரந்துபட்டது.
தமிழிலக்கியத்துறை குறுகியவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக