திங்கள், 19 மார்ச், 2018

பெரியார் ஈ.வெ.ரா பற்றியும் திராவிடம் பற்றியும் ஒரு அலசல்:

பெரியார் ஈ.வெ.ரா பற்றியும் திராவிடம் பற்றியும் ஒரு அலசல்

1
திராவிடர் என்ற சொல்லும் பொருண்மை மாற்றமும்:
=============
பண்டைக் காலத்தில் திராவிடர் என்ற சொல் விந்திய மலைக்குக் தெற்கே வாழ்ந்த பிராமணர்களை மட்டுமே குறித்தது. ஆந்திரம், கர்னாடகம், மஹாராஷ்ட்ரம் ஆகிய பகுதியை உள்ளடக்கிய தென்னிந்தியாவில் வாழ்ந்த பிராமணர்களை பஞ்ச திராவிடர் என்று அழைத்தனர். விந்திய மலைக்கு வடக்கே இருந்த வட இந்திய பிராமணர்களை பஞ்ச கௌடர் என்று அழைத்தனர்.
பஞ்ச திராவிடராகிய பிராமணர்கள் வாழும் நிலப்பரப்பை பஞ்ச திராவிடம் என்றும் அழைத்தனர்.
திருஞானசம்பந்தர் ஒரு பிராமணர். அதனாலேயே அவரை "திராவிட சிசு" என்று அழைத்தனர்.
தென்னிந்திய மொழிகளை ஆராய்ந்த மொழியறிஞர் எல்லீசு, கால்டுவெல் போன்றவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் ஒரு குடும்ப மொழிகள் என்பதைக் கண்டறிந்து அம் மொழிக்குடும்பத்துக்கு "திராவிட மொழிக் குடும்பம்" என்று பெயர் வைத்தனர்.
அதனால் தென்னிந்திய நிலப்பரப்பைக் குறிக்கப் பயன்படுத்திய திராவிடம் என்ற சொல் கால்டுவெல், எல்லீசு போன்றவர்களால் மொழிக்குடும்பத்தைக் குறிக்கும் சொல்லாக பொருண்மை மாற்றம் அடைகிறது.
அதனால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளைத் தாய்மொழியாகப் பேசும் (பிராமணரல்லாத) மக்களைக் குறிக்கும் சொல்லாக திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்தத் தொடங்கினர்.
அதாவது பிராமணர்களைக் குறிக்கப் பயன்படுத்திய திராவிடர் என்ற சொல் பிராமணரல்லாத மக்களைக் குறிக்கும் சொல்லாக பொருண்மை மாற்றம் அடைகிறது.
இந்த திராவிடம், திராவிடர் என்ற கருத்தியலால் தமிழகத்தில் மட்டும் பார்ப்பனியத்தை எதிர்த்து திரவிடத்தேசியம் என்ற அரசியல் தத்துவம் வளர்ந்து 1920 முதல் தற்போதுவரை அரசாளுமை செலுத்தியுள்ளது.
இந்த திராவிடத் தேசிய அரசியல் தமிழகத்தில் மட்டும் இருப்பதாலும், திராவிடத் தேசிய அரசியலில் தமிழகத்தில் உள்ள கன்னடரும், தெலுங்கரும் மட்டும் தலைமைத்துவ ஆதிக்கம் செலுத்துவதாலும் இப்போது தமிழர்கள் தலைமைதாங்கும் தமிழ்த்தேசிய அரசியல் வளர்ந்து வருகிறது.
தமிழ்த்தேசிய அரசியலின் எழுச்சியால் இப்போது திராவிடர் என்ற சொல் தமிழகத்தில் வாழும் தெலுங்கரையும் கன்னடரையும் மட்டும் குறிக்கும் சொல்லாக பொருள் குறுக்கம் என்றவகையில் பொருண்மை மாற்றம் அடைந்துவருகிறது.
தமிழர் வேறு திராவிடர் வேறு என்று சொல்லும் வகையில் திராவிடர் என்ற சொல் பொருண்மை மாற்றம் அடைந்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.
மொழியில் தோன்றும் சொற்களும் அதன் பொருளும் காலத்திற்கு ஏற்ப மாறுவதைத்தான் பொருண்மை மாற்றம் என்கின்றனர் மொழியியலறிஞர்.

2
வீரபாண்டிய கட்டபொம்மன் தமிழனல்ல.
அவன் தெலுங்கன்.
தெலுங்க நாயக்க மன்னர்கள் தமிழ்நாட்டைக் கைப்பற்றி ஆண்டபோது இப்போதைய தாலுக்கா என்னும் வட்டங்களைப் போல அப்போது தமிழகத்தை பாளையங்களாகப் பிரித்தனர்.
ஒவ்வொரு பாளையத்திலும் தெலுங்க ராணுவத்தை நிறுத்தி தமிழரின் நிலங்களைப் பிடுங்கிக்கொண்டு தமிழரை அடிமைப்படுத்தினர்.
பாளையங்களின் பரம்பரை தெலுங்க ராணுவத் தளபதிகளே பாளையக்காரர்கள். அதாவது தெலுங்க நாயக்க மன்னர்களுக்குக் கீழ் குறுநில மன்னர்களாகவே பாளையக்காரர்கள் இருந்தனர்.
அந்த பாளையக்காரர்கள் பாளையங்களில் சர்வாதிகார ராணுவ ஆட்சி நடத்தினர்.
நிலம் அரசுக்கே சொந்தமென சொல்லி தமிழரின் நிலங்களைப் பிடுங்கிக் கொண்டதோடு தமிழரை அடிமைச் சாதிகளாக்கி வரிக்கொடுமையும் செய்தனர்.
உயர்குடியாக இருந்த தமிழ்ச்சாதியினர் தமது வளமான நிலங்களை இழந்து தாழ்ந்த சாதியினராக மாறிப்போயினர்.
தமிழ்ச்சாதியினர் விவசாய கூலிகளாக மாற்றப்பட்டனர்.
அந்த பாளையக்காரர்களே ஆங்கிலேயர் காலத்தில் ஜமீன்தார்களாக பெயர் மாற்றிக்கொண்டு ஆட்சி செய்தனர்.
கட்டபொம்மன் அந்த பாளையக்காரர் பரம்பரையில் வந்த தெலுங்கன்.

கட்டப்பொம்மனுக்கு 200 ஆண்டுகளுக்கு முன்பே எட்டப்பன் பரம்பரை பாஞ்சாலங்குறிச்சியை ஆண்டுக்கொண்டிருந்தது. 
கட்டபொம்மன் டச்சுக்காரர்கள் துணையுடன் எட்டப்பன் ஆட்சியை வீழ்த்தி கைப்பற்றினான், எட்டப்பன் ஆங்கிலேயர் துணையுடன் கட்டபொம்மனை வீழ்த்தினான். இதில் யார் த
ுரோகி?

'வீரபாண்டிய கட்டபொம்மன்' என்ற ஒற்றைத் திரைப்படம் ஒட்டுமொத்த வரலாறையும் மாற்றிவிட்டது. அந்த படத்தில் நடித்தது சிவாஜி கணேசன், இயக்கியது யார் என்று தேடுங்கள் இதற்கு விடை கிடைக்கும். 

வரலாறு அறிவோம்.

3
பாரதிதானும் தமிழ்த்தேசியவாதிதான்:
========
பாவேந்தர் பாரதிதாசன் தொடக்க காலத்தில் பக்தி மார்க்கத்தில் இருந்துகொண்டு இந்திய தேசியம் பாடினார்.
பிறகு பெரியாரோடு சேர்ந்துகொண்டு பகுத்தறிவு, திராவிட தேசியம் ஆகியவற்றை வலியுறுத்திப் பாடினார்.
திராவிட தேசியம் தமிழருக்கானதாக இல்லாமல் அது தமிழரைப் பின்னுக்குத் தள்ளி, தமிழகத்தில் கன்னடர், தெலுங்கரை அரசியல் அதிகாரத்திற்குக் கொண்டுவந்துவிட்டது என்று பிறகுதான் அவருக்கு உரைத்தது.
அதன் பிறகே பெரியாரிடமிருந்து விலகி தமிழ்த்தேசியம் பாடினார்.
திராவிட தேசியத்தைச் சாடினார்.
"எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே
இங்கு பிறப்பினும் அயலான் அயலானே"
என்றார்.
=========================
பகையழிக்கும் பாவேந்தர்
"திராவிட இனவழி மரபில் ஊன்றி நில்!", "வாழ்க திராவிடத் தமிழ்த் திருநாடு!" என்றெல்லாம் பாவேந்தர் ஒருகால் பாடியதைக் கோடிட்டுக் காட்டி இன்று அடிக்காலிலேயே ஆட்டம் கண்டுவரும் 'திராவிடக்' கருத்தியலுக்கு உரம் சேர்க்க முயல்வாருமுண்டு.
தொடக்கத்தில் "எங்கெங்குக் காணினும் சக்தியடா!" என்று எழுதியவர்தாம் அப்பாவேந்தர். சங்கதமொழி இலக்கியங்களைத் தழுவிக் கதைப்பாட்டுகளைப் புனைந்தவர்தாம் அவர். பின்னர் ஈ. வெ. இராவுடன்இணைந்து அவரது 'திராவிடக்' கொள்கைகளுக்காக நின்று, "திராவிடத் தமிழன்" போன்ற பொருந்தாக் கலப்புருவைக் கருவாக வைத்தும் அவர் பாடினார்.
ஆனால், தேவநேயப் பாவாணரோடும் அவருடைய தனித்தமிழ் இயக்கத்தோடும் தொடர்பேற்பட்டப்பின், அவர் அந்த திராவிடத்தை மெல்ல விட்டுத்தொலைத்தார். தமிழிலக்கியங்களெல்லாம் வெறும் குப்பைகளேஎனச் சொன்ன பெரியாரின் தமிழெதிர்ப்பு நிலைப்பாட்டிற்கு நேரெதிராக,
நூலைப் படி - சங்கத்தமிழ்
நூலைப் படி! - முறைப்படி
நூலைப் படி - சங்கத்தமிழ்
நூலைப் படி!
காலையில் படி, கடும்பகல் படி,
மாலை இரவு, பொருள்படும்படி!
என்று சொல்லிப் பெரியாரின் திராவிட மெய்யினக் கொள்கைக்கு நேரெதிரான மொழிவழித் தமிழ்த் தேசிய இனக் கொள்கைக்காக அவர் பாடலானார். தமிழுணர்வை மிகவும் பழித்து வந்த கன்னடராம் ஈ. வெ. இராவுக்கு நேர்மாறாக,
பிள்ளை பிறந்தேன் யாருக்காக?
பெற்ற தமிழ்மொழிப் போருக்காக,
உள்ளம் இருப்பதும் தோள் இருப்பதும்
உயிர் நிகர் தமிழ்ச் சீருக்காக
என்று பாடினார். தாம் பிறந்த புதுவை மண்ணில், மிகச் சிறுபான்மையராம் தெலுங்கர்கள் போடும் கொற்றங்களை எல்லாம் கண்டு வெம்பியவராயிற்றே. அதனால்தான் பாவேந்தர்,
தமிழ்நாட்டில் அயலார்க் கினி என்ன வேலை?
தாவும் புலிக்கொரு நாய் எந்த மூலை?
என்றும்,
அவனவன் நாட்டில் அவனவன் வாழ்க மற்
றயல் நாட்டைச் சுரண்டுதல் அடியோடு வீழ்க!
என்றும்,
பழந்தமிழ்க் குடிகள் வழிவந்த நாமே
பச்சைத் தமிழர்கள் நமதிந்த நாடு! - நல்
உழுந்தள வேனும் நமைப்பிறர் ஆள
உரிமையே இல்லை என்றுநீ பாடு!
என்றும் தமிழ்த் தேசியப் போர்ப்பரணி பாடினார்.
எங்குப் பிறப்பினும் தமிழன் தமிழனே!
இங்குப் பிறப்பினும் அயலான் அயலானே!
செங்குருதித் தன்னில் தமிழ்த்தன்மை வேண்டும்!
சிறிதும் அயலான் கலப்பின்மை வேண்டும்!
என்று பாடிய பாட்டில், "திராவிடத் தமிழன்" என்னும் மாயை செத்து விட்டது. தமிழைத் தாழ்த்தித் "தாய்ப்பால் பைத்தியம்" என்றெழுதிய
ஈ. வெ. இரவுக்கு நேர்மாறாக,
தாய்மடியிற் குந்தித் தமிழ்முலைப்பால் உண்ணுகின்ற
சேய்தனக்கும் தாய்பேர் தெரிகிலையோ என்தாயே!
என்று பாடினார், திராவிட மெய்யினக் கொள்கையை அப்பால் எறிந்துவிட்டு,
தூங்கும் புலியைப் பறைக்கொண் டெழுப்பினோம்;
தூய தமிழரைத் தமிழ்கொண் டெழுப்பினோம்!
என்று பாடியவரும் பாவேந்தரே.
"தமிழனுக்கென்று தனித்த முறையில் ஆரியம் கலவாத இலக்கியம் கிடையாது" என்றெழுதிய பெரியாருக்கு மாறாக,
தமிழ்மொழி யெல்லாம் வடமொழி என்று
சாற்றுவார் பார்ப்பனர் பொய்யிலே நின்று;
தமிழ்மொழி யெல்லாம் தமிழ்மொழி என்று
சாற்றுவர் தமிழர்கள் மெய்யிலே நின்று!
என்று பாடிப் பாவாணர் மொழிந்த முதல்மொழி கொள்கைக்கு ஒப்புதல் தந்தவர்தாம் பாவேந்தர். பாவேந்தரின் இறுதிநிலை தமிழ் தேசியத்தோடு ஒன்றி, தமிழ் தேசிய பாவலராக முதிர்ந்துவிட்ட செம்மையான கோலம்.
ஆசிரியர் குணா
திராவிடத்தால் வீழ்ந்தோம்.""
நன்றி. *மலாயன் மலாயன் மலாயன்


4

தமிழ்படித்து உனக்கு ஆகப்போவதென்ன,
தமிழ் காட்டுமிராண்டி மொழி -ஈ.வெ.ராமசாமி என்ற பெரியார்.
தமிழ்படித்தால் சட்டிகழுவக்கூட ஆகாது -சோ.
தமிழ்படித்தால் பிழைக்கமுடியாது-ரஜினி
தமிழ் நீஷ பாஷை - சங்கர மடச் சாமியார்
ஆகமொத்தத்தில் தமிழரிடம் தமிழைத் தீண்டத்தகாக தீட்டு மொழி என நஞ்சை விதைப்பவர்கள் ஆரிய பிராமணரும் தெலுங்க கன்னட திராவிடரும்தான்.

5

பகுத்தறிவைக் கற்றுக்கொடுக்க திருவள்ளுவர் இருக்கிறார்.
பக்திநெறி கற்றுக்கொடுக்க வள்ளலார் இருக்கிறார்.
ஈ.வெ.ராமசாமியும் சங்கராச்சாரிகளும் தமிழர்களுக்குத் தேவையில்லை.


6

பெரியார் ஒரு கன்னடன்.
தமிழகத்தில் தெலுங்கரையும் கன்னடரையும் ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டுவரவே அவர் பாடுபட்டிருக்கிறார்.
அதனாலேயே திராவிடர் என்று புதுக்கதை புனைந்தார்.
தமிழ்நாட்டை தெலுங்கர்களுக்கும் கன்னடர்களுக்கும் சொந்தமாக்கத்தான் பெரியார் மண் என்றும் திராவிட நாடு என்றும் தெலுங்க கன்னட வந்தேரிகள் சொல்லிக்கொள்கின்றனர்.
தமிழன் தன்னைத் திராவிடனாக எண்ணிக்கொள்வது தெலுங்க கன்னடருக்கு அடிமைப்படவே வழிசெய்யும்.
தமிழர்கள் தங்களைத் திராவிடராக எண்ணாமல் தமிழர் என்றே சொல்லிக்கொள்ள வேண்டும்.
திருக்குறளில் மலவாடை வீசுகிறது என்று சொன்னவர் பெரியார்.
தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவர் பெரியார்.
ஆரியர்கள்தான் தமிழர்களின் பண்பாட்டையும் வரலாற்றையும் அழித்தார்கள் என்றால்,
இந்த தெலுங்க கன்னட திராவிடர்கள் திருக்குறளையே இழிவுபடுத்தி தமிழையும் தமிழர் இலக்கியங்களையும் , தமிழர் வரலாற்றையும் அழிக்கத் துடிக்கின்றனர்.
பெரியார் ஒரு நச்சுப்பாம்பு. திராவிடத்துவம் என்பது தமிழரை முட்டாளாக்கி அடிமைப்படுத்தும் தத்துவம்.
தமிழர்களே! ஏமாந்தது போதும்.
விழிப்புணர்வு தேவை.

7

தமிழகத்தைப் பெரியார் மண் என்று பட்டா போடப் பார்க்கிறார்கள் திராவிடர்கள்.
தமிழையும் தமிழ் இலக்கியங்களையும் தன் மனம்போன போக்கிலே இழிவுபடுத்திப் பேசியவர் பெரியார்.
தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றார்.
திருக்குறளில் மலவாடை வீசுகிறது என்றார்.
பெரியார் பேச்சை நம்பி இருந்தால் இப்போது தமிழ் இருக்குமா?
திருக்குறள் இருக்குமா?
பெரியார் தமிழனாக இருந்திருந்தால் தமிழையும் திருக்குறளையும் இழிவாகப் பேசியிருப்பானா? மன்னிக்கவும். பேசியிருப்பாரா?
பெரியார் பகுத்தறிவுப் பகலவனாம்.
பகுத்தறிவு என்ற பெயரில் திருக்குறளை இழிவுபடுத்தும் துணிச்சல் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்ற கன்னடனுக்கு எங்கிருந்து வந்தது.
" எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்று ஒரே குறளில் பகுத்தறிவைச் சொல்லிமுடித்த திருவள்ளுவரின் பகுத்தறிவைப் பழிக்கும் துணிச்சல் ஈ.வெ.ராமசாமி நாயக்கருக்கு எங்கிருந்து வந்தது.
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்"
என்று ஒரே குறளில் சாதிமறுப்பை அழகாகச் சொல்லி விளங்கவைத்த திருவள்ளுவரின் அறிவுத்திறனை இழிவுபடுத்தும் துணிச்சல் ஈ.வெ.ராமசாமி நாயக்கருக்கு எங்கிருந்து வந்தது.
பெரியார் என்று சொல்வதே ஈ.வெ.ராமசாமி நாயக்கருக்குத் தகுதியான சொல் அல்ல.
தமிழகத்தைப் பெரியார் மண் என்று சொல்வது அவரால் அரசியல் ஆதாயம் பெற்றவர்கள்தான்.
எப்படி வாழவேண்டும் எப்படி வாழக்கூடாது என்று எல்லாவற்றையும் எக்காலத்துக்கும் பொருந்தும்படி திருவள்ளுவர் சொல்லிவிட்டார்.
தமிழருக்கு மட்டுமல்ல உலகத்தாருக்கெல்லாம் பொருந்தும்படி சொன்னவர் திருவள்ளுவர்.
தமிழருக்குப் பகுத்தறிவைப் புகட்ட ஈ.வெ.ராமசாமி தேவையில்லை.
திருவள்ளுவரே போதும்.
தமிழ்நாடு பெரியார் மண் அல்ல.
இது திருவள்ளுவர் மண்.
ஓங்கி ஒலிப்போம் திருவள்ளுவர் மண் என்று.
ஊர்கள்தோறும் திருவள்ளுவர் சிலைவைப்போம்.
பிறப்பு முதல் இறப்புவரை திருக்குறளைக் கடைபிடிப்போம்.
தமிழர் தந்தை திருவள்ளுவர் எனச் சொல்லி மகிழ்வோம்.

8

பெரியாரால் தமிழர்கள் கொடிபிடிக்கும் தொண்டராக மாறிப்போயினர்.
தெலுங்க, கன்னட திராவிடர்கள் தலைவர்களாகவும், ஆளுபவராகவும் மாறிவிட்டனர்.

9

பெரியார் தமிழரிடம் ஆதிக்க சாதிகள் தலித் சாதிகள் என்று உசுப்பேற்றிவிட்டார். அதனால் தமிழ்ச்சாதிகளிடம் சாதிவெறி உண்டாகி பல சாதிக்கலவரங்கள்தான் நடந்துள்ளன.
பெரியாருக்கு முன்பு தமிழரிடம் சாதிகள் மட்டும் இருந்தன. சாதிவெறி இல்லை. சாதிச்சண்டைகள் இல்லை.
பெரியாருக்குப் பிறகே சாதிவெறி உண்டாகி இருக்கிறது.
அது பெரியார் விதைத்த ஆதிக்க சாதிகள் தலித் சாதிகள் என்ற கருத்தியலால்தான்.

10

இந்துத்துவாவுக்கு கொடிபிடித்தால் ஆரிய பிராமணன் ஆளுபவனாக இருப்பான்.
திராவிடத்துவாவுக்கு கொடிபிடித்தால் கன்னடன் அல்லது தெலுங்கன் ஆளுபவனாக இருப்பான்.
இரண்டு துவாவிலும் தமிழன் கொடிபிடிக்கும் தொண்டனாக மட்டும் இருப்பான்.

11

*அரசியல் இலாபத்துக்காக தமிழரை மடைமாற்றுவதற்காக சீமானை மலையாளி எனவும் அவரது தந்தை மலையாளி எனவும் பொய்யாக சிலர் பிரச்சாரம் செய்கின்றனர்.*
சீமான் 1970 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 10 ஆம் நாள் சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையாங்குடி வட்டத்தில் அரினையூர் என்னும் சிற்றூரில் பிறந்தவர்.
சீமான் நாடார் என்கின்றனர். நாடார் என்பது தமிழைத் தாய்மொழியாகப் பேசும் தமிழ்ச்சாதி. அப்படி என்றால் அவரை மலையாளி என்று எப்படி சொல்ல முடியும்.
அவர் சைமன் என்ற தனது பெயரை சீமான் என மாற்றிக்கொண்டார் எனச் சிலர் பதிவிடுகின்றனர்.
சூரியநாராயண சாஸ்திரி என்ற பெயரை பரிதிமாற்கலைஞர் எனவும்,
வேதாசலம் என்ற பெயரை மறைமலை அடிகள் எனவும் தமிழறிஞர்கள்கூட தம் பெயரை தமிழ்ப்பெயராக மாற்றிவைத்துக் கொண்டனரே.
கருணாநிதியும் தட்சிணாமூர்த்தி என்ற தனது பெயரை கருணாநிதி என மாற்றிவைத்துக் கொண்டார் அல்லவா.
சீமானை கிருத்துவர் எனவும் அவர் இந்து அல்ல எனவும் சிலர் பதிவிடுகின்றனர்.
அவர் ஒரு கிருத்துவரின் மகன். அதாவது கிருத்துவ நாடாரின் மகன். நாடார் சமுதாயத்தில் 40 சதவீத மக்கள் ஆங்கிலேயர் காலத்தில் இந்து மதத்தில் இருந்த தீண்டாமைக் கொடுமையால் கிருத்துவ மதத்திற்கு மாறிவிட்டனர். இப்போது 60 சதவீத நாடார்கள்தான் இந்துவாக உள்ளனர். தமிழ்ச்சமுதாயத்தின் ஒரு பகுதி மதம் மாறிவிட்டால் அவர்கள் தமிழர் இல்லையா? நாடார்களில் 40 விழுக்காடு மதம் மாறி உள்ளனர். ஒரு எடுத்துக்காட்டுக்கு நீங்கள் ஒரு இந்து என்று வைத்துக்கொள்ளுங்கள். கிருத்துவ மதத்துக்கு மாறிவிடுகிறீர் என்றால் இப்பொழுது நீங்கள் மதத்தால் கிருத்துவர்.
மதம் மாறிவிட்டீர் என்பதால் நீங்கள் இப்பொழுது தமிழன் இல்லையா?
மதம் என்பது வழிபாட்டுக் கலாச்சாரம். மதம் மாற முடியும். ஆனால் இனம் மாற முடியாது. மதம் மாறிவிட்டால் தமிழன் இங்கிலிஷ்காரன் ஆகமாட்டான்.
இந்துவாக இருந்த மக்கள் கிருத்துவத்துக்கு மதம் மாறிவிட்டனர். பிறகு அந்த மக்கள் மீண்டும் இந்து மதத்துக்கு வரமுடியாதா? சைமன் என்ற சீமான் இந்துவாக இருந்து கிருத்துவ மதத்துக்கு மாறிய நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்.
இப்போது அவர் முருகனை கடவுளாக ஏற்கிறார். திருமுருக வழிபாடு செய்கிறார். சிவனை கடவுளாக ஏற்கிறார். குலதெய்வங்களை கடவுளாக ஏற்கிறார்.
குறிஞ்சிநிலக் கடவுள் முருகனையும், முல்லைநிலக் கடவுள் திருமாலையும், மருதநிலக் கடவுள் இந்திரனையும், நெய்தல்நிலக் கடவுள் வருணனையும் கடவுளாக ஏற்கிறார்.
சைவத்தையும், வைணவத்தையும் தனது மதங்களாக ஏற்கிறார்.
இந்துவாக இருந்து கிருத்துவ மதத்திற்குச் சென்றவர்கள் கிருத்துவ மதத்திலிருந்து மீண்டும் இந்து மதத்துக்கு வந்தால் அவர்களை இந்துவாக ஏற்கமாட்டார்களா?
நடுகல் வழிபாட்டு முறையிலிருந்து வளர்ந்த குலதெய்வ வழிபாடும், சைவ வைணவ வழிபாட்டு முறைகளும் தொன்றுதொட்டு தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டு முறைகளாகும்.
சங்க காலத்தில் மலைவாழ் மக்கள் முருகனையும், அதனை அடுத்த முல்லைநில காட்டுப்பகுதி மக்கள் திருமாலையும், வறண்ட பாலைநில மக்கள் காளியையும், ஆற்றுப் பாசனப் பகுதி மக்கள் இந்திரனையும், கடலோர மக்கள் வருணனையும் வழிபட்டனர்.
சங்க காலத்திற்கு பிறகு புத்தமும், சமணமும் தமிழகத்திற்கு வந்தன. பல தமிழர்கள் புத்த மதத்திற்கும் சமண மதத்திற்கும் மாறினர். பிறகு ஆழ்வார்கள், நாயன்மார்கள் காலத்தில் மீண்டும் சைவமும் வைணவமும் வளர்ந்தன. அதனால் புத்தமும் சமணமும் தமிழகத்தில் அழிந்தன. பல புத்த கோயில்கள் சைவ வைணவ கோயில்களாக மாற்றமடைந்தன.
சேரநாட்டு வணிகர்கள் மூலமும், அரேபிய வணிகர்கள் மூலமும் இசுலாம் மதம் கடல்வழியாக தமிழகத்திற்கு வந்தது. சைவ மதத் தமிழர்கள் சிலர் இசுலாத்திற்கு மாறினர். உருது பேசும் இசுலாமியர் தவிர்த்து மற்ற இசுலாமியர் அனைவரும் சைவராக இருந்து மதம்மாறிய தமிழர்கள்.
ஐரோப்பியர் வருகையால் கிருத்துவம் தமிழகத்திற்கு வந்தது. சைவ மதத் தமிழர்கள் சிலர் கிருத்துவத்திற்கு மாறினர். தமிழகத்து கிருத்துவர்கள் எல்லாம் ஐரோப்பியர் அல்லர். அவர்கள் சைவராக இருந்து மதம்மாறிய தமிழர்கள்.
அவ்வப்போது மதங்கள் வந்துகொண்டுதான் உள்ளன.
கி.பி 8 ஆம் நூற்றாண்டில் சேரநாட்டை ஆண்ட மன்னர்களில் ஒருவர் சேரமான் பெருமாள். அவர் சைவராக இருந்தவர். பிறகு அரேபியா சென்று முஸ்லிமாக மாறினார்.
முஸ்லிமாக மாறிவிட்டார் என்பதால் அவர் தமிழர் இல்லை என்பதா?
இராமதேவர் என்ற ஒரு சித்தர்.
500 ஆண்டுகளுக்கு
முன் வாழ்ந்தவர். அவர் அரேபியா சென்று முஸ்லிமாக மாறி யாகோபு என பெயர் மாற்றிக்கொண்டு மீண்டும் வந்தார்.
அவர் மதம் மாறிவிட்டதால் அவரை தமிழர் இல்லை அரபியன் என்று சொல்ல முடியுமா?
நமக்கு தெரிந்தவர்கள், நம் சொந்தக்காரர்கள் கிருத்துவராக மாறுவதை நாம் பார்த்ததில்லையா? அவர்கள் மதம் மட்டுமே மாறும். இனம் தமிழர்தான்.
மதத்தை மாற்றிக்கொள்ள முடியும். ஆனால் இனத்தை மாற்றிக்கொள்ள முடியாது.
இனம் பிறப்பால் வருவது.
இனம் வேறு மதம் வேறு.
சிலர் சொல்வது போல பல தலைமுறைகளுக்கு முன்பு சீமானின் முப்பாட்டன்களில் ஒருவர் கேரளத்தில் இருந்து வந்தவர் என்றே வைத்துக்கொள்ளுங்கள்.
கேரளாவில் இருப்பவர்கள் அனைவரும் மலையாளி இல்லை.
தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, மூணாறு, பாலக்காடு ஆகிய பகுதிகள் முழுவதும் தமிழர் வாழும் பகுதிகள்.
கேரளாவில் நம்பூதிரிகள் மற்றும் நாயர்களைத் தவிர அனைவருமே தமிழர்கள்தான்.
500 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் மலையாளம் என்ற மொழியே உருவாகவில்லை.
கேரளா 500 ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழ்பேசிய சேரநாடு.
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு
நம்பூதிரிகள் என்னும் ஆரிய பிராமணர்கள் கேரளத்தில் குடியேறி தமிழோடு அளவுக்கதிகமாக சமஸ்கிருத சொற்களைக் கலந்து பேசி தமிழைச் சீரழித்ததால் தமிழ் சிதைந்து மலையாளம் ஆனது. இப்போதும் கேரளத்தில் தனித்தமிழ் இயக்கம் தோன்றி மலையாளத்தில் கலந்துள்ள சமஸ்கிருதச் சொற்களை அகற்றினால் மலையாளம் தூய தமிழாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
பெங்களூரில் தமிழர் இல்லையா?
ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் முழுவதும் தமிழர் பகுதிதானே..
அங்கிருந்து தமிழர் எவராவது தமிழகத்திற்கு வந்தால் அவரைத் தெலுங்கர் எனவும் நீ தமிழனல்ல எனவும் சொல்ல முடியுமா?
தமிழர்களுக்கு அரசியல் விழிப்புணர்வையும், பண்பாட்டு விழிப்புணர்வையும் ஊட்டுவதில் சீமான் தவிர்க்கமுடியாத தலைவர்.
சீமான் தேர்தல்களத்தில் வெற்றிபெற வேண்டும் என்பது முக்கியமல்ல. பகுத்தறிவு சிந்தனையை பெரியார் பரப்பியது போல
தமிழ்த்தேசிய சிந்தனையை பட்டிதொட்டி எங்கும் பரப்புவதில் வல்லவராக இருக்கிறார் சீமான்.
*தமிழர் என்றால் தமிழைத் தாய்மொழியாகப் பேசுவோர். தொன்றுதொட்டு தமிழைத் தாய்மொழியாகப் பேசிவரும் மரபில் பிறந்தவர் யாரோ அவரெல்லாம் தமிழர்.*12

திராவிடம் ஆரியம் இவ்விரண்டுமே தமிழர்க்கு வேண்டாதவை.
இவ்விரண்டும் தமிழினத்தை அரசியல் தளத்திலும் பண்பாட்டுத் தளத்திலும் அடிமைப்படுத்தி ஆளுவதையே நோக்கமாகக் கொண்டவை.
👺
பெரியார் கன்னடர் அல்லவா?
அவரைத் தமிழினத் தந்தை என்று சொல்வது சரியாகுமா?
அம்பேத்கரைப் போல பெரியாரை சமுதாய சீர்திருத்தவாதி என்றுதான் சொல்ல வேண்டும். தமிழகத்தில் பகுத்தறிவு, பெண்விடுதலை, சமுதாயவிடுதலை போன்ற தளங்களில் பணியாற்றியவர் பெரியார். அதில் மாற்றுக்கருத்து இல்லை. அதற்காக அவரைத் தமிழர் என்று சொல்லமுடியாது.
அவர் தமிழினத்தில் பிறந்தவரல்ல. அவர் தமிழரல்ல.
பெரியாரைத்
தமிழினத் தந்தை என்றோ தமிழினத் தலைவர் என்றோ சொல்வது தமிழரை ஏமாற்றும் வேலையே ஆகும்.
தமிழக
அரசியல் தளத்தில் திராவிடர் என்ற போர்வையில் தெலுங்கர்களுக்கும், கன்னடர்களுக்குமே தலைமைப் பொறுப்பை வழங்கிவந்துள்ளார்.
வீரமாமுனிவர், கால்டுவெல், ஜீ.யு.போப், கமில் சுவலபில் போன்றவர்களெல்லாம் தமிழுக்குத் தொண்டு செய்தனர். அதனால் அவர்கள் தமிழ்ப்பற்றாளர்தானே அன்றி தமிழராகார்.
அவர்களைப்போல அண்ணாவும், கருணாநிதியும் தமிழுக்குத் தொண்டுசெய்தனர் என்பதால் தமிழ்ப்பற்றாளர்தான். அண்ணாவும், கருணாநிதியும் தமிழரல்லர். அவர்கள் தெலுங்கர்கள். அவர்களின் தாய்மொழி தெலுங்கு.
தமிழக ஆட்சித்தலைமைக்கு வந்த தெலுங்கர்களும், வரத் துடிக்கும் தெலுங்கர்களும் தமது தெலுங்க அடையாளத்தை மறைத்துக்கொள்ளவே திராவிட முகமூடியை அணிந்துகொண்டனர் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழர்களுக்கும் திராவிடப் போதை ஏற்றித் தமிழரே தமிழைப் பழிக்குமாறும் செய்துவிட்டனர்.
தமிழர் கழகம் என்றோ, தமிழர் முன்னேற்றக் கழகம் என்றோ, அண்ணா தமிழர் முன்னேற்றக் கழகம் என்றோ, மறுமலர்ச்சித் தமிழர் முன்னேற்றக் கழகம் என்றோ, தேசிய முற்போக்குத் தமிழர் கழகம் என்றோ கட்சிகளுக்குப் பெயர் வைக்காமல் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்று பெயர் வைத்ததற்கு என்ன காரணம்? அவர்கள் தமிழர் அல்ல. அதனால்தான் திராவிட என்ற பெயரில் கட்சி நடத்துகின்றனர்.
இவர்களின் முன்னோர் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட விஜயநகரப் பேரரசர்களும், தெலுங்க நாயக்க மன்னர்களும் 400 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டைக் கைப்பற்றி ஆண்ட போது ஆந்திராவிலிருந்து வந்து குடியேறியவர்கள் என்பது வரலாறு.
விஜயநகர, நாயக்க மன்னராட்சிக் காலத்தில் இவர்களே மன்னர்களாகவும், பாளையக்காரர்களாகவும் இருந்தனர். பிறகு ஆங்கிலேயர் காலத்தில் ஜமீன்தாரர்களாக இருந்தனர். 1916 ல் தொடங்கிய நீதிகட்சியின் தலைவர்களாகவும், அக்கட்சியின் சார்பில் முதலமைச்சர்களாகவும் இருந்தனர். இப்போது மக்களாட்சிக் காலத்தில் திராவிடர் என்ற பெயரில் திராவிட கட்சிகளின் தலைவர்களாகவும், ஆட்சியாளர்களாகவும் உள்ளனர்.
தமிழர்களோ சாதிக் கட்சிகளை நடத்திக்கொண்டு சண்டைபோட்டுக் கொண்டுள்ளனர்.
தமிழன் இதைத் தெரிந்து கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தெருக்கள் தோறும் சாராயக்கடைகளை வைத்து தமிழனைச் சாராய போதை மயக்கத்திலேயே வைத்துள்ளனர்.
மொழி உணர்வோ, இன உணர்வோ, அரசியல் அறிவோ இல்லாமல் சாராயமே கதி எனக் கிடக்கிறான் தமிழன்.
தெலுங்கும், கன்னடமும், மலையாளமும் தமிழிலிருந்து தோன்றிய கிளைமொழிகள்தான். எனினும் திராவிடர் என்ற பொதுப்பெயரை வைத்துக்கொண்டு தெலுங்க நாட்டையும்,
கன்னட நாட்டையும், மலையாள நாட்டையும் மீண்டும் தமிழ்நாடாக்க முடியுமா?
அம்மாநிலங்களில் தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகளின் தனித்தன்மையை அகற்றி மீண்டும் தமிழாக மாற்ற முடியுமா?
அம்மாநில மக்கள் அனைவரையும் தாங்களும் தமிழர்தான் என ஏற்கச்செய்ய முடியுமா?
உடைந்த பானையை ஒட்டவைக்க முடியாது என்பதே உண்மை.
🌹🌹🌹🌹🌹
தமிழகத்தில் உள்ள பார்ப்பனர்களில் பல பிரிவினர் வீட்டில் தமிழில்தானே பேசுகின்றனர். அவர்கள் தமிழர் இல்லையா? என்று பலர் கேட்கின்றனர்.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆடுமாடு மேய்க்கும் நாடோடிகளாக, நாகரிகம் அற்றவர்களாக இந்தியாவுக்கு வெளியிலிருந்து கைபர் போலன் கணவாய் வழியாக வந்து சேர்ந்தவர்களே ஆரியர்கள். அந்த ஆரியர்களுக்குள் சிறு பிரிவினராக இருந்த பூசாரிப் பிரிவினரே பிராமணர்கள். மூல ஆரியமொழி சிதைந்து அழிந்துவிட்ட காரணத்தால் அப் பிராமணர்கள் தமது ஆரியத் தாய்மொழியை மறந்துவிட்டு, அந்தந்த பகுதிகளில் மக்கள் பேசும் மொழிகளையே தமது வீட்டுமொழியாகவும் பேசிக்கொள்கின்றனர். அதாவது பிராமணர் என்போர் தமது மூல ஆரிய தாய்மொழியை இழந்துவிட்ட ஆரியர் ஆவர். அவர்கள் தமது தாய்மொழியை மறந்துவிட்டாலும் வேள்வி செய்தல் முதலான தமது பண்பாட்டை மறக்காமல் கடைபிடித்து வருகின்றனர்.
பிராமணர்கள் தமிழரல்லர். அவர்கள் ஆரியர்.
அரசியல்தளத்தில் தமிழரை அடிமைப்படுத்தி ஆள்வதில் திராவிடமும் ஆரிய பிராமணீயமும் ஒன்றுதான்.
🌹🌹🌹🌹🌹
யார் தமிழர்? என்று தமிழர் எவரும் கேட்பதில்லை. இந்த கேள்வி தமிழரைக் குழப்புவதற்காகத் தமிழரல்லாதார் கேட்கும் கேள்வி.
"வீட்டு மொழியாகவும், சாதி மொழியாகவும் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட, தமிழ்ச் சாதியைச் சேர்ந்தவரே தமிழர் ஆவார்".
அதாவது தொன்றுதொட்டு தமிழைத் தாய்மொழியாகப் பேசிவரும் மரபில் பிறந்தவர்கள் எவரோ அவரெல்லாம் தமிழர்.
🌹🌺🌹🌺🌹
தமிழகத்தை இதுவரை ஆண்ட முதலமைச்சர்களில் யாரெல்லாம் தமிழர்?
🌹காமராஜர் (தமிழர்),
🌹பக்தவத்சலம் (தமிழர்),
🌹ஓ. பன்னீர்செல்வம் (தமிழர்),
🌹எடப்பாடி கே.பழனிசாமி (தமிழர்)
இவர்களைத் தவிர முதலமைச்சராக இருந்தவர்கள் அனைவரும் தமிழரில்லை.
அண்ணா (தெலுங்கர்)
கருணாநிதி (தெலுங்கர்)
ஜெயலலிதா (ஆரியர். கன்னட பிராமிணர்)
எம்ஜிஆர் (மலையாளி)
குமாரசாமி ராஜா (தெலுங்கர்)
ராஜாஜி (ஆரிய பிராமிணர்)
"திராவிட"என்ற பெயரில் கட்சி நடத்தும் தலைவர்கள் அனைவருமே தெலுங்கர்கள்.
கருணாநிதி (தெலுங்கர்)
வைகோ (தெலுங்கர்),
விஜயகாந்த் (தெலுங்கர்)
பெரியார் (கன்னடர்)
இந்திய சுதந்திரத்திற்கு முன் தமிழ்நாடு மெட்ராஸ் மாகாணமாக இருந்த போது முதலமைச்சர்களாக இருந்த தெலுங்கர்கள்:
சுப்பராயலு (தெலுங்கர்),
பனகல் ராஜா (தெலுங்கர்),
பி. முனுசுவாமி நாயுடு (தெலுங்கர்),
ராமகிருஷ்ண ரங்காராவ் (தெலுங்கர்),
கூர்மா வெங்கட ரெட்டி நாயுடு (தெலுங்கர்),
த. பிரகாசம் (தெலுங்கர்),
ராமசாமி ரெட்டியார் (தெலுங்கர்),
குமாரசுவாமி ராஜா (தெலுங்கர்)
🌹 சுதந்திரத்திற்கு முன் மெட்ராஸ் மாகாண முதலமைச்சராக இருந்த தமிழர்
🌹சுப்பராயன் (தமிழர்)
🌺பி.டி.ராஜன் (தமிழர்)
🌹🌺🌹🌹🌺🌹
தற்போது தமிழக அரசியலில் ஆளுமைத்திறனும், பல நல்ல கொள்கை திட்டங்களையும் கொண்டுள்ள தலைவர்களாகத் தென்படும் தமிழர்கள்
🌹சீமான் (தமிழர்)
🌹அன்புமணி (தமிழர்)
இன்னும் பிற தமிழர்கள்
தினகரன் (தமிழர்)
வேல்முருகன் (தமிழர்)
திருமாவளவன் (தமிழர்)
அரசியலில் புதிதாகத் தலைகாட்டும்
ரஜினிகாந்த் (மராட்டியன், கர்னாடகாகாரர்)
கமலஹாசன் ஆரியன் (கன்னட பிராமணன்)
தமிழ்நாட்டில் யார்வேண்டுமானாலும் வாழலாம்.
தமிழ்நாட்டைத் தமிழர்தான் ஆளவேண்டும்.
🙏
வாழும் உரிமை அனைவருக்கும்
ஆளும் உரிமை தமிழருக்கே.


12

*திராவிட முகமூடி அணிந்த தெலுங்கர்கள்:*
தமிழர்கள் தொடங்கிநடத்தும் கட்சிகளை சாதிவெறிக் கட்சிகளாக விளம்பரப்படுத்தி, தமிழர்களின் ஒற்றுமையைச் சீர்குலைத்து, பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு தமிழ்நாட்டை ஆட்சிசெய்ததும், ஆளத்துடிப்பதும் திராவிட என்னும் பெயரில் கட்சி நடத்தும் தெலுங்கர்களின் கில்லாடித்தனம் ஆகும்.
தமிழர்களுக்கு இடையே சாதிக்கலவரம் ஏற்படுவதற்கு இந்த திராவிட தெலுங்கர்களே காரணம்.
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதைப் போல தமிழர்கள் சாதியால் பிளவுபட்டால் திராவிட என்னும் கட்சிப் பெயரில் தமிழகத்தை ஆளுவது தெலுங்கர்களுக்கு வசதியாகப்போய்விடுகிறது.
தமிழர்களே விழித்துக்கொள்ளுங்கள்.
திராவிட என்னும் பெயரில் கட்சிகளை தொடங்கி நடத்துபவர்கள் தெலுங்கர்கள்தான்.
அந்த தெலுங்கர்கள் 400 ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்க நாயக்கர்கள் தமிழ்நாட்டைக் கைப்பற்றி ஆண்டபோது ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு குடியேறிய தெலுங்கர்களின் வாரிசுகள் ஆவர். அவர்களின் தாய்மொழி தெலுங்கு.
தமிழர்கள் சாதிகளாகப் பிரிந்து தங்களுக்குள் அடித்துக் கொண்டால் தெலுங்கர்களுக்குத்தான் இலாபம்.
*_தமிழ்நாட்டு அரசியலில்_*:
பெரியார் கன்னடன்,
அண்ணா தெலுங்கன்,
திக- கி.வீரமணி தெலுங்கன்
திமுக- கருணாநிதி தெலுங்கன்
எம்ஜிஆர் மலையாளி,
ஜெயலலிதா ஆரியர் (கன்னட பிராமணர்)
மதிமுக- வைகோ தெலுங்கன்
தேமுதிக- விஜயகாந்த் தெலுங்கன்
காங்கிரஸ்- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கன்னடன்
மார்க்சிஸ்ட்- ஜி.ராமகிருஷ்ணன் தெலுங்கன்
பாஜக ஹெச்.ராஜா ஹிந்திக்காரன்
அதிமுக- மதுசூதனன் தெலுங்கன்
ரஜினிகாந்த் மராட்டியன் கர்நாடகாகாரன்
கமலஹாசன் ஆரியன் (கன்னட பிராமணன்)
திருமுருகன்காந்தி தெலுங்கன்.
இவர்கள் பொதுவெளியில் அழகாகத் தமிழ் பேசுகின்றனர். ஆனால் இவர்கள் தமிழரல்லர்.
இவர்களின் தாய்மொழி தமிழல்ல.
தமிழர்களே!
விழித்துக்கொள்ளுங்கள்.
*வாழும் உரிமை அனைவருக்கும்*
*ஆளும் உரிமை தமிழருக்கே*


13

*இலங்கையை ஆளும் தெலுங்கர்கள்::*
ஆந்திராவிலிருந்து வந்து தமிழ்நாட்டைக் கைப்பற்றி ஆண்ட தெலுங்க நாயக்க மன்னர்கள் இலங்கைக்கும் சென்று கண்டியில் ஆட்சியை அமைத்தனர்.
அந்த கண்டி நாயக்க மன்னர்களின் பரம்பரையைச் சேர்ந்தவர்களே இப்போது இலங்கையையும் ஆளுகின்றனர்.
சேனநாயக்கா, பண்டாரநாயக்கா, மகிந்த ராஜபக்ஜ, சந்திரிக்கா குமாரதுங்க, ரனில் விக்கிரமசிங்க போன்றவர்களும் தெலுங்கர்கள்தான்.
இலங்கையின் பௌத்த மதத் தலைவர்களாக இருப்பவர்களும் கண்டி நாயக்க பரம்பரையைச் சேர்ந்த தெலுங்கர்கள்தான். அதாவது தெலுங்கர்கள் இலங்கையின் பௌத்த மதத்தையும் கைப்பற்றிக் கொண்டனர். இலங்கையின் ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றிக் கொண்டனர்.
ராஜபக்சே, சந்திரிக்கா, ரனில்விக்ரமசிங்க போன்றவர்களின் குலதெய்வம் திருப்பதி ஏழுமலையான். அதனால்தான் அவர்கள் திருப்பதிக்கு வருகின்றனர்.
அவர்களின் பூர்வீகம் ஆந்திரா என்பதால்தான் திருப்பதிக்கு வந்துசெல்கின்றனர்.
அரசியலுக்காக சிங்களவர்களை தமிழர்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டு இலங்கையில் தமிழினப்படுகொலையை நடத்தியவர்கள் இந்த தெலுங்கர்கள்தான்.
தெலுங்கன்தான் தமிழினத்தின் துரோகி.
தமிழினத்தின் விரோதி


14

*அண்ணா தமிழரா தெலுங்கரா?*
அண்ணா செங்குந்தமுதலியார் அல்லவா அவரை தெலுங்கர் என எப்படிச் சொல்லலாம் என பலர் கருத்துரைக்கின்றனர்.
அண்ணா செங்குந்தமுதலியார் அல்ல.
அண்ணாவின் தந்தை நடேசன் தெலுங்க முதலியார்.
அவரது தாய் பங்காரு அம்மாள் தெலுங்க சின்னமேளம் என்ற சாதி.
அதுமட்டுமல்ல, அண்ணாவின் பிறப்புக்கு மட்டுமே காரணமானவர் நடேசன்.
அண்ணா குழந்தைப் பருவமாக இருக்கும் போதே அவரது தாய் நடேசனோடு குடும்பம் நடத்தாமல் நடேசனிடமிருந்து பிரிந்துசென்று நையாண்டி ஐயர் என்ற தெலுங்கு பிராமணரோடுதான் குடும்பம் நடத்தினார்.
அண்ணாவின் தாய்மொழி தெலுங்கு.
அவர் தெலுங்கர்.
கருணாநிதி தெலுங்கு சின்னமேளம் என்ற சாதியைச் சேர்ந்தவர்.
அண்ணாவின் தாயும் அதே தெலுங்கு சின்னமேளம் சாதி.
அதாவது தாய்வழியில் அண்ணாவும் கருணாநிதியும் உறவினர்கள்.
இருவருமே தெலுங்கர்கள்.


15

*திராவிடம் தமிழர்க்குத் தீது:::*
1950களுக்கு முன்னர் திராவிடத்தாய் எழுதிய பாவாணர் 1950க்கு பின்னர் திராவிடம் என்பதே தீது, திராவிடம் வேறு தமிழ் வேறு என்று திராவிடத்தை எதிர்த்தார்.
பாரதிதாசன் "எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்கு பிறப்பினும் அயலான் அயலானே" என்று எழுதினார்.
கி.ஆ.பெ. விசுவநாதம் சுயமரியாதை இயக்கத்தின் பெயரை தமிழர் கழகம் எனப் பெயர் மாற்றாமல் திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றிய போதே அது தமிழருக்கு ஒத்துவராத இயக்கம் எனக்கூறி வெளியேறினார்.
ஒட்டுமொத்தத்தில் திராவிட இயக்கங்கள் தெலுங்கர் இயக்கங்களே.
திராவிட கட்சிகளைத் தொடங்கியவர்களும் தெலுங்கர்களே. திராவிட கட்சிகளின் தலைவர்களாக இருப்பவர்களும் தெலுங்கர்களே.


16

*கடவுள் மறுப்பு என்பது பகுத்தறிவா?*
கடவுள் மறுப்பு என்பது பகுத்தறிவு அல்ல.
கடவுள் நம்பிக்கையாளர்களிலும் பகுத்தறிவாளர்கள் இருக்கிறார்கள்.
அறிவியலாளர்கள் பலர் கடவுள் நம்பிக்கையாளர்களாகவே உள்ளனர். இஸ்ரோகூட கடவுள் வழிபாட்டுக்குப் பிறகே ஏவுகணைகள், ராக்கெட்டுகளை ஏவுகிறது.
கடவுள் நம்பிக்கை என்பது மூடநம்பிக்கை அல்ல.
கடவுள் என்பது ஒரு கருதுகோள்.
ஆராய்ச்சியால் கடவுள் இருக்கிறார் என்றோ கடவுள் இல்லை என்றோ நிறுவிக்காட்ட முடியாத கருதுகோள்.
கடவுள் வழிபாட்டில் சில மூடநம்பிக்கைகள் உள்ளன என்பதை மறுக்க முடியாது. எடுத்துக்காட்டாக தன்விருப்பம் நிறைவேற வேண்டி அலகு குத்தவும், தீமிதிக்கவும், மொட்டை அடிக்கவும் வேண்டிக் கொள்வதும் வேள்விசெய்வதும்தான் மூடநம்பிக்கை.


17

தமிழரிடம் தமிழ் மொழி உணர்வும் தமிழ் இன உணர்வும் இல்லாமல் போனதற்கு
திராவிட இயக்கங்கள் என்னும் தெலுங்கர் இயக்கங்களே காரணம்.
தமிழன் தன்னைத் தமிழனாக உணராதிருக்க திராவிடன் எனச்சொல்லச் செய்து தமிழ் இன உணர்வையும் தமிழ் மொழி உணர்வையும் அழித்தொழித்தவர்கள் திராவிடத் தெலுங்கர்களே.
திராவிடம் தமிழர்க்குத் தீது.
திராவிடம் தமிழுக்குப் பகை.

18

சுயமரியாதை இயக்கத்தோடு நீதிக்கட்சியை இணைத்து அதற்குப் பெயர் வைக்கும்போது, தமிழர் கழகம் என்று பெயர் வைத்தால் அதில் பார்ப்பான் வந்துவிடுவான் என்று பொய்யுரைத்தனர்.
பார்ப்பான் தன்னைத் தமிழனென்று எப்படிச் சொல்லுவான்.
அவ
ன் ஆரியன் அல்லவா.

திராவிடர் கழகம் என்று பெயர் வைத்தால்தான் அதில் தெலுங்கனும் கன்னடனும் உள்நுழைந்து ஆதிக்கம் செலுத்தி தமிழ்நாட்டைத் தெலுங்கர்கள் ஆள முடியும் என்பதற்காகவே திராவிடர் கழகம் எனப் பெயர் வைத்தனர் கன்னடன் ஈ.வெ.ராமசாமி என்ற பெரியார் தலைமையில் தெலுங்கர்கள்.
அது தெலுங்கர் இயக்கமாகவும், அதன் வழித்தோன்றிய திராவிட இயக்கங்களும் தெலுங்கர் இயக்கங்களாகவே உள்ளன.

திராவிடம் தமிழர்க்குத் தீது:::
1950களுக்கு முன்னர் திராவிடத்தாய் எழுதிய பாவாணர் 1950க்கு பின்னர் திராவிடம் என்பதே தீது, திராவிடம் வேறு தமிழ் வேறு என்று திராவிடத்தை எதிர்த்தார். 

பாரதிதாசன் "எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்கு பிறப்பினும் அயலான் அயலானே" என்று எழுதினார்.

கி.ஆ.பெ. விசுவநாதம் சுயமரியாதை இயக்கத்தின் பெயரை தமிழர் கழகம் எனப் பெயர் மாற்றாமல் திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றிய போதே அது தமிழருக்கு ஒத்துவராத இயக்கம் எனக்கூறி வெளியேறினார்.

ஒட்டுமொத்தத்தில் திராவிட இயக்கங்கள் தெலுங்கர் இயக்கங்களே.


19

தமிழர்கள் தம்மைத் தமிழராகக் கருதிக்கொள்ளாதிருக்க திராவிடத் தெலுங்கர்கள் தமிழர்களைத் திராவிடர் என்று சொல்லச் செய்தனர்.
தமிழர்களோ தம்மைத் திராவிடர் என்று சொல்வது செயற்கையாகத் தோன்றியதால் திராவிடர் என்பதை ஏற்கவில்லை.
திராவிடச் சதியால் தமிழர் என்று தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளவும் மறந்தனர்.
அதனால் தமிழருக்கு கண்முன்னே தெரிந்தது சாதி அடையாளம் மட்டுமே.
தமிழர்கள் தமிழராக இல்லாமல் சாதி அடையாளத்தை முன்னிருத்தி அரசியலை முன்னெடுக்கத்தொடங்கினர்.
தமிழன் தன் இன ஒற்றுமையை மறந்தான்.
சாதிச்சண்டை செய்துகொண்டு தமிழர்கள் தங்களுக்குள்ளேயே அடிபட்டுக் கொண்டிருப்பதால் திராவிடத் தெலுங்கர்களுக்கு மேலும் வசதியாகிவிட்டது. திராவிடம் தமிழரிடம் பிரித்தாளும் சூழ்ச்சியைத்தான் கையாளுகிறது.
தமிழரிடம் ஆதிக்க சாதிகள் தலித் சாதிகள் என்று சொல்லி சாதிச்சண்டைகளைத் தூண்டிவிடுவதே திராவிடம்தான்.
திராவிடத்தை அழித்து தமிழன் தன்னைத் தமிழனாக உணரும்போதுதான் சாதிய ஏற்றத்தாழ்வுகள் மறையும்.
திராவிடத்தைப் புறந்தள்ளும் அதேவேளையில் பிராமணியத்தை நுழைய அனுமதித்துவிடக்கூடாது.
தமிழரின் அரசியலையும் பண்பாட்டையும் அழித்தொழிப்பதில் திராவிடமும் பிராமணியமும் ஒன்றுதான்.
தமிழரின் மொழியையும் பண்பாட்டையும் அழித்தொழிப்பதில் திராவிடத்தைக் காட்டிலும் பிராமணியம் மிகக் கொடுமையானது.


20

🌎🌹 *இதுதான் தமிழருக்கான அரசியல்*
👇👇👇
தமிழர்கள் இந்து என்ற மதக்கருத்தியலைத் தூக்கிப்பிடிக்கும் கட்சியை ஆதரித்தால் அங்கும் ஆரிய பிராமணனும் தெலுங்க, கன்னட அந்நியர்களும் தாமும் இந்து என்று சொல்லிக்கொண்டு தலைமைத்துவத்தைக் கைப்பற்றிக் கொள்வர்.
இந்துத்துவமும் தமிழர்களை அடிமைப்படுத்தும் தீய சக்தியே ஆகும்.
தமிழர்கள் திராவிடக் கருத்தியலை ஆதரித்ததால் தெலுங்கர்கரும் கன்னடரும் மலையாளியும் தாமும் திராவிடர் என்று சொல்லிக்கொண்டு தமிழரின் அரசியலைக் கைப்பற்றி வைத்துள்ளனர் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
தமிழர்கள் சாதி அடையாளத்தை முன்னிறுத்தினால் தங்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லாமல் சாதிச் சண்டை செய்துகொண்டு இந்துத்துவ ஆரியரிடமும் திராவிடத் தெலுங்கரிடமும் அடிமைப்பட்டுக் கிடக்கும் நிலையே தொடரும்.
இந்துத்துவமும் தமிழர்க்குத் தீது.
திராவிடமும் தமிழர்க்குத் தீது.
சாதியம் தமிழரின் ஒற்றுமைக்குத் தீது.
தமிழர்கள் தங்களை இந்து என்றோ திராவிடர் என்றோ அடையாளப்படுத்திக் கொள்ளாமல்,
தமிழர் என்ற அடையாளத்தை தூக்கிப்பிடிக்க வேண்டும்.
அப்போதுதான் அரசியல் தளத்தில் தமிழர்கள் தலைமைத்துவத்தைக் கைப்பற்ற முடியும்.
இல்லையென்றால் தமிழர்கள் என்றைக்கும் அந்நியர்க்குக் கொடிபிடிக்கும் தொண்டர்களாகவே இருந்து சாராய போதையே பேரின்பம் என்று இருந்துவிடும் அவலநிலையே தொடரும்.


21

*திக, திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக* ஆகிய கட்சிகளுக்கு
*தமிழர் கழகம்* என்றோ,
*தமிழர் முன்னேற்ற கழகம்* என்றோ,
*அண்ணா தமிழர் முன்னேற்றக் கழகம்* என்றோ,
*மறுமலர்ச்சித் தமிழர் முன்னேற்றக் கழகம்* என்றோ,
*தேசிய முற்போக்கு தமிழர் கழகம்* என்றோ பெயர் வைக்கவில்லையே ஏன்?
திராவிடமெல்லாம் இருக்கட்டும்.
திராவிட கட்சிகளைத் தொடங்கியவர்களும் அதன் தலைவர்களும் தமிழரா தெலுங்கரா?
பெரியார் கன்னடன் (சாதி- பலிஜா நாயுடு),
அண்ணா தெலுங்கன் (சாதி- தெலுங்க முதலியார்+ தெலுங்க சின்னமேளம்),
கருணாநிதி தெலுங்கன் (சாதி-தெலுங்க சின்னமேளம்),
எம்ஜிஆர் மலையாளி (சாதி- மேனன்)
ஜெயலலிதா ஆரியர் (சாதி-கன்னட பிராமணர்)
வைக்கோ தெலுங்கன் (சாதி- கம்மவார் நாயுடு),
விஜயகாந்த் தெலுங்கன் (சாதி- நாயுடு),
ரஜினிகாந்த் மராட்டியன்,
கமலஹாசன் ஆரியன் (கன்னட பிராமணன்)
இவர்களெல்லாம் தமிழர் இல்லை.
அதனால்தான் *திராவிட* என்று கட்சிகளுக்குப் பெயர்வைத்துக்கொண்டனர்.


22

தமிழில் எழுத்துக்கள் அதிகமாக இருப்பதால் குழந்தைகள் தமிழ்கற்க சிரமப்படுவதாகவும், ஆங்கிலத்தில் 26 எழுத்துக்கள் மட்டும் உள்ளதால் ஆங்கிலத்தைக் கற்பது எளிதாக இருக்கிறது எனவும் கூறித் தமிழ் எழுத்துக்களைக் குறைக்கவேண்டும் என பண்டிதர்களிடம் பெரியார் கேட்டுக்கொண்டாராம்.
பெரியார் தமிழ் எழுத்துக்களை எந்தவகையில் குறைக்கச் சொன்னார்?
தமிழ் எழுத்துக்கள் உயிர் 12 + மெய் 18 + ஆயுதம் 1 = மொத்தம் 31 மட்டுமே.
இவற்றில் உள்ள ஒரு உயிரொலியும் ஒரு மெய்யொலியும் சேர்ந்து ஒலிக்கும் போது பிறக்கும் ஒலி கூட்டொலி ஆகும்.
அந்தவகையில் கூட்டொலிகள் மொத்தம் 12×18=216 உருவாகின்றன.
இந்த 216 கூட்டொலிகளுக்குத்தான் 216 உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்கியுள்ளனர். இந்த 216 உயிர்மெய் எழுத்துக்களுக்கும் தனித்தனி எழுத்துருக்களை உருவாக்காமல் ா, ி, ீ, ெ, ே, போன்ற சில குறியீடுகளை மட்டும் உருவாக்கி அவற்றை 18 மெய்யெழுத்துக்களோடு சேர்த்து 216 உயிர்மெய் எழுத்துக்களையும் எழுத வழிசெய்தனர். எனவே 216 உயிர்மெய் எழுத்துக்களைக் கற்பது ஒன்றும் பெரிய சுமையல்ல.
ஆங்கிலம் போன்ற மொழிகளில் கூட்டொலிகளுக்கு எழுத்துக்களை உருவாக்காமல் உயிரெழுத்துக்களையும் மெய்யெழுத்துக்களையும் மட்டுமே வைத்துக்கொண்டு எழுதிக்கொள்கின்றனர்.
கூட்டொலிகளுக்கு தனி எழுத்துக்களை உருவாக்கும் அறிவு ஐரோப்பியர்களுக்கு இல்லாமல் போனது.
நாமும் தமிழில் உயிர்மெய் எழுத்துக்கள் இல்லாமல் 31 எழுத்துக்களை மட்டுமே வைத்துக்கொண்டு தமிழை எழுதமுடியும்.
தமிழ் என்பதை த்அம்இழ் என்றும்,
அமுதக்கனி என்பதை அம்உத்அக்க்அன்இ என்றும்,
வில்லவன் கோதை என்பதை வ்இல்ல்அவ்அன் க்ஓத்ஐ என்றும் எழுத முடியும். அவ்வாறு எழுதினால் எழுதுவதற்கான நேரமும் இடமும் அதிகம் தேவைப்படும் என்பதை உணர்ந்தே கூட்டொலிகளுக்கு உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்கினர்.
உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்கிய தமிழர்களின் அறிவாராய்ச்சி வியக்கத்தக்கதாகத் தெரியவில்லையா?
ஆங்கிலேயர்களுக்கு அந்த அறிவு இல்லை. அவர்கள் முட்டாள்கள்தான். குறில், நெடில் வேறிபாட்டைக்கூட எழுதிக்காட்ட ஆங்கிலத்தில் எழுத்துக்கள் இல்லை.
ஆங்கிலத்தில் 26 எழுத்துக்கள் மட்டுமே உள்ளன என்று சொல்வதும் ஏமாற்று வேலைதான்.
உண்மையில் ஆங்கிலத்தில் 104 எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றனர்.
அச்சில் பயன்படுத்துவது பெரிய எழுத்துக்கள் 26 என்றும், சிறிய எழுத்துக்கள் 26 என்றும்,
கையெழுத்தில் பயன்படுத்துவது பெரிய எழுத்துக்கள் 26 என்றும், சிறிய எழுத்துக்கள் 26 என்றும் ஆக மொத்தம் 104 எழுத்துக்கள் ஆங்கிலத்தில் உள்ளன.
ஐகார, ஔகார எழுத்துக்கள் பற்றி,,,,,
அகர உயிரை அடுத்து யகர மெய் வந்தால் அது அஇ என்றவாறே ஒலிக்கிறது.
அகர உயிரை அடுத்து வகர மெய் வந்தால் அது அஉ என்றே ஒலிக்கிறது.
ஐ என்பது அஇ என்றே ஒலிக்கும். அய் என்று ஒலிக்காது.
ஔ என்பது அஉ என்றே ஒலிக்கும். அவ் என்று ஒலிக்காது.
அதனாலேயே அறிவியல் முறைப்படி தமிழர்கள் நுண்ணிய வேறுபாட்டைக் கண்டுபிடித்து ஐ, ஔ ஒலியன்களுக்கு எழுத்துக்களை உருவாக்கினர்.
பன்னாட்டு மொழியியல் அறிஞர்களும் தொல்காப்பியரின் ஒலியியல் மற்றும் ஒலியனியல் ஆராய்ச்சியைப் பாராட்டுகின்றனர்.
தொல்காப்பியரைவிட பெரியார் ஒன்றும் பெரிய மொழி அறிஞர் அல்ல.
எழுத்துக்களைப் பற்றிய ஆய்வில் பெரியார் பகுத்தறிவில்லாத ஒரு முட்டாள்.
தமிழைப் பொருத்தவரை பெரியாரைப் பின்பற்றினால் தமிழ் சிதைந்துதான் போகும்.
தமிழர்கள் பன்னெடுங்காலத்திற்கு முன்பே பேச்சொலிகளை நுட்பமாக ஆராய்ந்து அவ்வொலிகளுக்கு எழுத்துக்களை உருவாக்கி தமிழுக்கான வரிவடிவத்தை வரிசைப்படுத்திக் கட்டமைத்திருப்பது வியக்கத்தக்க அறிவியலாகும்.
பெரியாரைப் பின்பற்றி அய், அவ், கய், ழய், ணய் என்று எழுதுவது மிகப்பெரிய முட்டாள்தனம்.
அய்யா, அவ்வை, அய்ப்பசி, மழய், தய், கய், வய், வெண்ணய், எண்ணய், பொட்டய், நெட்டய், குட்டய், தரய், குறய் என்று எழுதுபவர்கள் தமிழை அழிப்பவர்களே ஆவர்.


23


தமிழகத்தில் தெலுங்கர் ஆட்சி வரலாறு.
=================
பிற்கால சோழராட்சிக் காலத்தில் கி.பி 1070 ல் அநபாயன் என்ற தெலுங்கன், அதிராசேந்திர சோழனைச் சதிசெய்து கொன்றுவிட்டு குலோத்துங்க சோழன் என்ற பெயரில் சோழராட்சியைக் கைப்பற்றினான்.
அவன் வழிவந்த தெலுங்கசோழர் பரம்பரையை பிற்கால பாண்டியர்கள் ஆட்சியிலிருந்து அகற்றினர்.
1370 ம் ஆண்டு ஆந்திராவையும் கர்நாடகாவையும் ஆண்ட விஜயநகரப் பேரரசின் இளவரசன் குமாரகம்பணன் என்ற தெலுங்கர் மதுரையைக் கைப்பற்றினார்.
அப்போது முதல் தமிழகம் தெலுங்கர் ஆட்சிக்கு உள்ளானது.
1529 ஆம் ஆண்டு காலகட்டத்தில் விஜயநகர பேரரசின் ஆளுநர்களாக இருந்த தெலுங்க நாயக்கர்களின் பரம்பரை இராணுவ ஆட்சியில் தமிழகம் முற்றாக தெலுங்கர்களிடம் அடிமை ஆனது. சிறிது காலத்தில் தெலுங்க நாயக்கர்கள் விஜயநகரப் பேரரசிடமிருந்து தங்களை விடுவித்துக்கொண்டு சர்வாதிகாரம் பொருந்திய மன்னர்களாக தமிழகத்தை ஆளத்தொடங்கினர். அந்த காலகட்டத்தில்
ஏராளமான தெலுங்கர்கள் ஆந்திரத்திலிருந்து தமிழகத்திற்குக் குடியேறினர்.
தெலுங்க பிராமணர்களையும் அவர்களே தமிழகத்தில் குடியேற்றினர்.
தமிழர்களின் வளமான நிலங்களை எல்லாம் அரசுக்கே சொந்தமென சொல்லி தெலுங்கர்கள் கைப்பற்றிக் கொண்டனர்.
பள்ளர்கள் உட்பட தமிழ் விவசாயப்பெருங்குடி மக்கள் வளமான நிலத்தை இழந்து அடிமைச் சாதிகளாக மாறிப்போயினர். தமிழர்கள் விவசாய கூலிகளாக மாற்றப்பட்டனர்.
தமிழகத்தின் ஒவ்வொரு கிராமங்களையும் பாளையங்களாகப் பிரித்து தெலுங்க ராணுவத்தை நிறுத்திவைத்து தமிழரை எல்லாம் அடிமைப்படுத்தினர்.
நாயக்க மன்னர்கள் சார்பில் ஒவ்வொரு பாளையத்திலும் நிலைகொண்டிருந்த இராணுவ அதிகாரி பாளையக்காரன் என்று அழைக்கப்பட்டான்.
இராணுவ வல்லாதிக்க பாளையக்காரர்கள் தமிழர்களிடம் நிலத்தைப் பறித்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல் வரிக்கொடுமை செய்தனர்.
ஆங்கிலேயர்கள் வந்தபின் நாயக்க மன்னர்கள் மட்டுமே அதிகாரம் இழந்தனர். பாளையக்காரர்கள் எல்லாம் ஜமீன்தார்கள் என்று பெயரை மட்டுமே மாற்றிக் கொண்டனர்.
அதே ராணுவ ஆட்சியைத்தான் செய்தனர் தெலுங்க ஜமீன்தார்கள்.
ஆங்கிலேயர் இருக்கும் போதே பார்ப்பனப் பூச்சாண்டி காட்டி 1916 ல் நீதிக்கட்சியைத் தொடங்கி, 1920 முதல் பலமுறை அந்த தெலுங்கர்களே முதலமைச்சர்களாக இருந்தனர்.
1944 ல் திராவிடர் என்று பெயர்மாற்றிக் கொண்டு அந்த தெலுங்கர்களே பிறகு தமிழகத்தை நீண்டகாலம் ஆட்சி செய்துள்ளனர்.
1370 ஆம் ஆண்டுமுதல் இப்போதுவரை தமிழகத்தை ஆளுவது தெலுங்கர்கள்தான்.
அதுவே தொடர்கிறது.
திராவிட என்ற பெயருடைய கட்சி சார்பில் தமிழர்களான எடப்பாடியும் பன்னீரும் முதலமைச்சர் ஆகி இருப்பதுமட்டும் விதிவிலக்கு.
தமிழர்களிடம் ஆதிக்க சாதி என்றும் தலித் சாதி என்றும் சொல்லி சாதிச்சண்டைகளை மூட்டிவிட்டு தமிழரிடம் ஒற்றுமையைக் குலைப்பவர்கள் அந்த திராவிட தெலுங்கர்கள்தான்.
தமிழர்கள் சாதிச்சண்டை செய்துகொண்டு ஒற்றுமை அடையாமல் இருக்கும்வரை திராவிட தெலுங்கர்களுக்குக் கொண்டாட்டம்தான்.
" தமிழர்கள் ஒன்றுபட்டால் தமிழர்க்கு உண்டு வாழ்வு.
தமிழர்க்குள் ஒற்றுமை நீங்கினால் தமிழர்க்கே தாழ்வு".
" வாழும் உரிமை அனைவருக்கும்
ஆளும் உரிமை தமிழருக்கே".


24

பார்ப்பனர் பார்ப்பனர் என்று சொல்லி பூச்சாண்டி காட்டியே தமிழர்களை அடிமைப்படுத்துவான் தெலுங்கன்.
(திராவிடன் என்றால் தெலுங்கன் என்று அரசியலில் அர்த்தம்.)
இந்து இந்து என்று சொல்லியே தமிழர்களை அடிமைப்படுத்தி தமிழை அழிப்பான் ஆரிய பிராமணன்.
(பாஜக என்றால் ஆரிய பிராமணன் என்று அரசியலில் அர்த்தம்.)
பார்ப்பனியம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் காங்கிரசைக் கைப்பற்றி வைத்திருந்தது.
இப்போது பார்ப்பனியமே பாஜக என்று புது அவதாரம் எடுத்திருக்கிறது.
பார்ப்பனிய பயங்கரவாத பாஜகவை தமிழகத்தில் வளரவிட்டால் தமிழை அழித்து தமிழ்நாட்டை இந்திநாடாக மாற்றிவிடுவர் என்பதை இப்போதே தமிழன் உணர்ந்துவைத்திருக்க வேண்டும்.
திராவிடம் இந்துத்துவம் இரண்டுமே தமிழுக்கும் தமிழருக்கும் கேடு செய்யும்.


25

தமிழருக்கான அரசியல் திராவிடமோ இந்துத்துவமோ அல்ல.
தமிழர்கள் இந்து என்ற மதக்கருத்தியலைத் தூக்கிப்பிடிக்கும் கட்சியை ஆதரித்தால் அங்கும் ஆரிய பிராமணனும் தெலுங்க, கன்னட அந்நியர்களும் தாமும் இந்து என்று சொல்லிக்கொண்டு தலைமைத்துவத்தைக் கைப்பற்றிக் கொள்வர்.
இந்துத்துவமும் தமிழர்களை அடிமைப்படுத்தும் தீய சக்தியே ஆகும்.
தமிழர்கள் திராவிடக் கருத்தியலை ஆதரித்ததால் தெலுங்கர்கரும் கன்னடரும் மலையாளியும் தாமும் திராவிடர் என்று சொல்லிக்கொண்டு தமிழரின் அரசியலைக் கைப்பற்றி வைத்துள்ளனர் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
தமிழர்கள் சாதி அடையாளத்தை முன்னிறுத்தினால் தங்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லாமல் சாதிச் சண்டை செய்துகொண்டு இந்துத்துவ ஆரியரிடமும் திராவிடத் தெலுங்கரிடமும் அடிமைப்பட்டுக் கிடக்கும் நிலையே தொடரும்.
இந்துத்துவமும் தமிழர்க்குத் தீது.
திராவிடமும் தமிழர்க்குத் தீது.
சாதியம் தமிழரின் ஒற்றுமைக்குத் தீது.
தமிழர்கள் தங்களை இந்து என்றோ திராவிடர் என்றோ அடையாளப்படுத்திக் கொள்ளாமல்,
தமிழர் என்ற அடையாளத்தை தூக்கிப்பிடிக்க வேண்டும்.
அப்போதுதான் அரசியல் தளத்தில் தமிழர்கள் தலைமைத்துவத்தைக் கைப்பற்ற முடியும்.
இல்லையென்றால் தமிழர்கள் என்றைக்கும் அந்நியர்க்குக் கொடிபிடிக்கும் தொண்டர்களாகவே இருந்து சாராய போதையே பேரின்பம் என்று இருந்துவிடும் அவலநிலையே தொடரும்.


26

பெரியார் தமிழ்வளர்ச்சிக்கு என்ன செய்தார் என்று கேட்டால் எழுத்துச்சீர்திருத்தம் கொண்டுவந்தார் என்கின்றனர் பெரியாரின் சில பக்தர்கள்.
ஏற்கனவே 12 உயிர், 18 மெய், 1 ஆயுதம், 216 உயிர்மெய் என்று தமிழ் எழுத்துக்களை நன்கு ஆராய்ந்து வடிவமைத்துள்ளனர் தமிழர்கள்.
பெரியார் ஒன்றும் தமிழ் எழுத்துக்களைப் படைக்கவில்லை. எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில் தமிழ் எழுத்துருக்களைச் சீரழிக்க நினைத்தவர் பெரியார். எழுத்துரு மாற்றத்திற்காக அவர் பரிந்துரைத்த அனைத்தையும் எம்ஜிஆர் அரசு நடைமுறைப்படுத்தவில்லை. றா,னா,ணா
லை, ளை, னை, ணை இவற்றை மட்டுமே மாற்றியமைக்க அரசு ஆணையிட்டது. இச்சீர்திருத்தமும் பெரியாருக்கு முன்பே குத்தூசி குருசாமி முன்மொழிந்ததே ஆகும்.
பெரியார் சொன்னது எழுத்துச் சீர்திருத்தம் அல்ல. எழுத்துக்குறைப்பு. அதாவது தமிழ் எழுத்தைச் சீரழிப்பது.
அறிவியல் முறைப்படி நன்கு ஆராய்ந்து வரிசைப்படுத்தி வடிவமைத்த தமிழ் வரிவடிவத்தை சிதைக்க எண்ணிய கோடாரிக்காம்பே பெரியார் என்னும் கன்னடன்.
👇👇👇👇👇
பெரியார் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தின் முன்னோடி என்பது உண்மையா?
தமிழ் எழுத்துகள் திடீரென உருக்கொண்டவையல்ல. சமூக வளர்ச்சிப் போக்கில் இவ்வெழுத்துகள் தேவை கருதி உருமாறி வளர்ந்திருக்கின்றன.
கற்பாறையிலும், அதன்பிறகு பனை ஓலையிலும் எழுதப்பட்ட எழுத்துகள் அதனதன் தேவைக்கேற்பவும், விரைவாக எழுதுவதற்கேற்பவும், ஓர் எழுத்துக்கும் பிரிதொரு எழுத்துக்குமிடையே ஒன்று போல கருதும் எழுத்து மயக்கம் ஏற்பட்டு விடாதபடியும் எழுத்துகளின் வடிவங்கள் உறுதி செய்யப்பட்டன. இன்றைக்கு நம் பயன்பாட்டில் உள்ள தமிழ் எழுத்து வடிவங்கள் பல ஆயிரம் ஆண்டுகளின் காலவளர்ச்சியில் மக்கள் பயன்பாட்டுத் தேவைக்கேற்ப வளர்ந்த வரிவடிவங்களாகும்.
19ஆம் நூற்றாண்டில் அச்சு இயந்திரங்களின் வருகையாலும், இன்ன பிற காரணங்களாலும் எழுத்துச் சீர்திருத்தம் கோரி குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. 1915ஆம் ஆண்டில் பாரதியாருக்கும், வ.உ.சிதம்பரனாருக்கும் நடந்த கருத்துப் பரிமாற்றம் முதன்மையான ஒன்றாகும். அதே ஆண்டில் சுப்பிரமணிய சிவா நடத்திய 'ஞான பாநு' ஏட்டில், 'தமிழ் எழுத்துகள்' என்ற தலைப்பில் வ.உ.சி. எழுதிய கட்டுரை ஒன்றில், இக்காலத்திலே (ஓணான் சுருட்டிய வால் போன்று உள்ள எழுத்துகள்) எழுதப்படும் எழுத்துகளுக்கு மாற்றாக றா, றோ, னா, னோ, என்று எழுத வேண்டும் என்று சிலர் கருதுவதாக குறிப்பிட்டுள்ள
ார்.
1930இல் காரைக்குடியில் இருந்து வெளிவந்த 'குமரன்' இதழில் அதன் ஆசிரியர் திரு.முருகப்பா என்பவர் ணா, றா, னா, ணை, ளை, னை என்ற வரிவடிவங்களை பயன்படுத்தி கட்டுரையொன்றை எழுதி வாசகர்களின் கருத்தை கேட்டுள்ளார். 1931இல் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து பொறியியல் அறிஞர் பா.வே.மாணிக்க நாயக்கர் என்பவரும் தன்கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தக்கால கட்டத்தில் தான் குத்தூசி குருசாமி அவர்கள் முன்மொழிந்திட பெரியாரும் எழுத்துச் சீர்திருத்தத்தை வலியுறுத்தியதோடு, தனது ஏடுகளில் தமிழில் உள்ள சில எழுத்துகளை மாற்றம் செய்து வெளியிட்டார். பெரியார் வந்த பிறகு தான் தமிழ்நாட்டில் எழுத்து சீர்திருத்த சிந்தனை பிறந்தது என்று கூறுவது தவறானதாகும். பெரியார் தனது குடியரசு, விடுதலை ஏடுகளில் எழுதி வந்தவை எழுத்து குறைப்பே அன்றி எழுத்துச் சீர்திருத்தம் அல்ல, அதுவும் கூட தமிழின் பழைய எழுத்து வரிவடிவமேயன்றி புதியன அல்ல. இதற்கு கல்வெட்டு சான்றுகளும் உள்ளன.
கவிமணி தேசிக விநாயகர் நாஞ்சில் நாட்டு கல்வெட்டுகளை இதற்கு சான்றாக கூறியிருப்பதாக தனித்தமிழியக்க மூத்த அறிஞர் இரா.இளங்குமரனார் குறிப்பிடுகிறார். அது வருமாறு:
" க், ங், ஞ், ட், த், ந், ப், ம், ய், ர், வ், ழ், ற், எனும் பதினான்கு மெய்களும் ஐகாரம் ஏறக் கை, ஙை, சை, என்றாயின. ஐகார அடையாளமாக இரட்டைச்சுழி அமைக்கப்பட்டு வந்தன. அப்படியே ண. ல. ள. ன, என்னும் நான்கு எழுத்துகளும் ணை, லை, ளை, னை என்று இரட்டைச்சுழி துணை எழுத்தோடு எழுதப்பட்டன. இந்த நான்கு எழுத்துகளும் மற்றைய எழுத்துகளில் வேறுபட்டவை. சுழிகளால் அமைந்தவை. 'ண' மூன்று சுழி. 'ல' ஒரு சுழி. 'ள' ஒரு சுழி. 'ன' இரண்டு சுழி. இச்சுழி எழுத்துகளோடு இரண்டு சுழித்துணை எழுத்து ஒட்டும் போது, (ணை) மூன்று சுழி ஐந்து சுழியாகவும், ஒரு சுழி (லை) மூன்று சுழியாகவும், ஒரு சுழி (ளை) மூன்று சுழியாகவும், இரண்டு சுழி (னை) மூன்று சுழியாகவும் மாறி விடும் அல்லவா? இச்சுழிகளுள் ஒவ்வொன்றைக் குறைக்கும் வகையால் மேலே துதிக்கையாக்கினர். 'வ' என்பது சுழியுடைய எழுத்தாக இருப்பினும், அதற்கு துதிக்கை இட்டால் லகரத்தோடு மயக்கம் ஏற்படுத்தும் என எண்ணி மற்றைப் பதின்மூன்று எழுத்துகள் போல் வைத்துக் கொண்டனர்....
'கா' முதலிய நெடில்களின் கால்கள் ண, ற, ன, என்பவற்றில் சுழியாக இருந்தன. அவற்றை மற்ற எழுத்துகளின்படியே கால் இட்டு எழுதுதல் புதிதாகத் தோன்றவில்லை. பெரிய சீர்திருத்தமாகவும் படாமல் இயல்பாக இருப்பவையாயின."
பெரியார் மேற்கண்ட பழைய வரி வடிவ எழுத்துகளோடு நில்லாது ஐ, ஒள, விலும் மாற்றம் செய்திட்டார். அவற்றை அய், அவ், என்றே எழுதினார். உயிர் எழுத்தை நீக்கி விட்டு உயிர்மெய்யை வைத்துக் கொள்வது குழப்பத்தையே தரும். அதாவது 'ஐ' என்ற உயிர் இல்லாமல் தலை, மலை, மனை முதலிய உயிர்மெய்கள் எவ்வாறு வரும்? மேலும் கய், தய்யல், பிழய், மழய், என்று எழுதியதோடு, வந்தான்= வன்தான், மாங்காய்= மான்காய், பஞ்சம்= பன்சம் என்றெல்லாம் பெரியார் எழுதத் தொடங்கினார்.
அதுமட்டுமின்றி, நண்பரை Fரண்ட்ஸ் என்றும், வரிக்குதிரை என்பதை Zப்பிரா என்றும் ஆங்கில எழுத்துகளை தமிழோடு கலந்து துணிந்து எழுதிட்டார். எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் எழுத்துகளை அறவே அகற்றி விட்டு முழுவதும் ஆங்கில எழுத்துகளையே பயன்படுத்தினால் நான் மகிழ்ச்சியடைவேன் என்றும் கூறினார்.
1978இல் எம்.ஜி.ஆர். ஆட்சியில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்ட போது பாவலரேறு பெருஞ்சித்திரனார் சினங்கொண்டு "தமிழ்மொழியைப் பற்றி கவலைப்படாத நிலையில் தமிழ் எழுத்தைப்பற்றி மட்டும் ஏன் அக்கறை காட்ட வேண்டும்" என்று கேள்வி எழுப்பினார். பாவாணரும் கூட 1937இல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது பெரியாருடன் தொடர்பு கொண்டு இறுதிவரை நெருங்கிப்பழகியும், அவர் 'விடுதலை' எழுத்தை மேற்கொள்ளும்படி சொல்லவோ, எழுதவோ இல்லை என்கிறார்.
தமிழ் ஆட்சிமொழியாகவும், கல்லூரிகளில் பயிற்றுமொழியாகவும் வருவதை யாரெல்லாம் விரும்பவில்லையோ யாரெல்லாம் ஆங்கிலமே தமிழர் வாழ்வில் தலைமை பெற்றுள்ள நிலை நீடிப்பதை விரும்புகிறார்களோ அவர்களெல்லாம் எழுத்துச் சீர்திருத்தம் பேசுவதாக சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் குறிப்பிடுவார்.
பெரியார் வழியில் வீரமணி, வ.செ.குழந்தைசாமி ஆகியோர் எழுத்துச் சீர்திருத்தம் பேசிக்கொண்டே ஆங்கிலமொழிக்கு பல்லக்கு தூக்கி வருவது கண்கூடான உண்மையாகும்.
தமிழின் தாழ்வுற்ற நிலை போக்காது எழுத்துச்சீர்தி
ருத்தம் எவர் பேசினாலும் அவர் தமிழுக்கு எதிரி என்பதை இனியாவது தமிழர்கள் உணர வேண்டும்.
(நன்றி: முதன்மொழி ஏப்.சூன் 2010,
நுமான் எழுதிய மொழியும், இலக்கியமும்: பெரியாரின் சிந்தனைகள்.
தென்மொழி- மே 1986)
நன்றி - கதிர்


27

பார்ப்பனீயம் என்றால் என்ன?
பார்ப்பனர் என்பது சாதி.
பார்ப்பனீயம் என்பது உயர்வு தாழ்வை கற்பிக்கும் தீண்டாமைச் செயல்.
அதாவது தாங்கள்தான் உயர்ந்தவர்கள், மற்றவர்கள் எல்லாம் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணமும் செயலுமே பார்ப்பனீயம்.
இந்த பார்ப்பனீயம் எல்லா சாதிகளிலும் இருக்கிறது.
இது பார்ப்பனரிடமிருந்து எல்லா சாதிகளுக்கும் பரவி இருக்கிறது.
தாழ்த்தப்பட்ட சமூகம் என்று சொல்லக்கூடிய பறையர்கள் பள்ளர்களையும், சக்கிலியர்களையும் தீண்டத்தகாதவர்களாகத்தான் மதிக்கின்றனர். அதாவது பள்ளர்களையும், சக்கிலியர்களையும்விட பறையர்கள் உயர்ந்த சாதியாம்.
கலப்புத்திருமணம், சாதிமாறிய காதல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் பறையர் சமூகத்தவர்கள் சக்கிலியர் மற்றும் பள்ளர் சமூகத்தவர் பெண்ணையோ ஆணையோ திருமணம் செய்துகொள்வதில்லை. காதலிப்பதில்லை. அவர்களின் வீட்டில் சோறு சாப்பிடுவதில்லை. ஏன்?
பறையர் சாதிக்குள்ளும் பார்ப்பனீயம் இருக்கிறது.
ஒரே சாதி என்றாலும் பணக்காரர்கள் ஏழைகளை மதிப்பதில்லை.
படித்தவர்கள் படிக்காதவர்களை மதிப்பதில்லை.
படிப்பில்கூட உயர்ந்த படிப்பு, தாழ்ந்த படிப்பு என்று கருதப்படுகிறது.
அரசாங்க வேலையில் இருப்பவர்கள் தனியார் வேலை செய்பவர்களை மதிப்பதில்லை.
"அஞ்சணா சம்பளம் என்றாலும் அரசாங்க சம்பளம்" என்ற எண்ணம்.
வெளிநாட்டிற்குச் சென்று வேலை செய்பவர்கள் உள்நாட்டிலேயே வேலை செய்பவர்களை மதிப்பதில்லை.
முதலாளியாக இருப்பவர்கள் தொழிலாளியாக இருப்பவர்களை மதிப்பதில்லை.
பெருமுதலாளிகள் சிறுமுதலாளிகளை மதிப்பதில்லை.
ஆட்சியாளராக இருப்பவர்கள் ஆளப்படும் மக்களை மதிப்பதில்லை.
இவை யாவும் பார்ப்பனீயமே ஆகும்.


27

கேரளாவில் பார்ப்பனீயத்தை வளரவிட்டதால் தமிழ் சிதைந்து மலையாளம் உருவானது.
மலையாள மொழி உருவாக்கமானது பார்ப்பனீயத்தால் தமிழுக்கு விளைந்த கேடு.
மலையாளம் உருவாகி 500 ஆண்டுகள்தான் ஆகிறது.
500 ஆண்டுகளுக்கு முன்புவரை கேரளா தமிழ்பேசிய சேரநாடு.
தமிழ் கொஞ்சம்கொஞ்சமாக மாற்றமடைந்து மலையாளமாக உருவானது.
இப்போதும் தமிழின் ஒரு வட்டார வழக்கே மலையாளம் என்று சொல்லலாம்.
தமிழ் எழுத்துருக்கள் மூலம் அப்பகுதி மக்களுக்குக் கல்வி புகட்டியிருந்தால் இப்போதும் கேரளா தமிழ்நாடாகத்தான் இருந்திருக்கும். நம்பூதிரி பிராமணர்கள் சேரநாட்டில் குடியேறிய பிறகு
சேரநாட்டு வட்டார வழக்குத் தமிழில் சமஸ்கிருதச் சொற்களை கலந்து பேசி தமிழை மலையாளம் என்னும் தனிமொழியாக உருவாக்கிவிட்டனர்.
தமிழ்ச்சொற்களையும் சமஸ்கிருதச் சொற்களையும் கலந்து எழுதுவதற்கு ஏற்ப 400 ஆண்டுகளுக்கு முன்பு
இராமானுசன் எழுத்தச்சன் என்பவன் தனி எழுத்துருக்களையும் உருவாக்கிவிட்டான். அவ்வெழுத்துருக்களே மலையாள எழுத்துருக்கள் ஆகின.
கேரளத்தில் தனித்தமிழ் இயக்கம் தோன்றி சமஸ்கிருதச் சொற்களை அகற்றினால் மலையாளம் தூய தமிழாக
இருக்கும் என்பதில் ஐயமில்லை.
மலையாளத்தை மலைநாட்டுத் தமிழ் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.
தமிழகத்தில் இப்போது பார்ப்பனீயமானது காவிக்கட்சிகளால் வளரத்துடிக்கிறது.
இங்கு பார்ப்பனீயத்தை வளரவிட்டால் தமிழைச் சிதைத்து சமஸ்கிருதக் கலப்புமொழியான இந்தியைப் பரப்பி இந்திமயம் ஆக்கிவிடுவர் என்பது உறுதி.
தமிழின் வாழ்வும் சாவும் தமிழர் கையில் உள்ளது.
தமிழினமே!
தமிழ்தான் உன் அடையாளம்.
தமிழ் என்னும் அடையாளத்தை நீ இழந்துவிட்டால் உலகத்தில் நீ நாடற்ற பரதேசி ஆகிவிடுவாய்.
தமிழில் பேசித் தமிழைக் காத்து,
தமிழர் என்ற உன் அடையாளத்தைக் காத்து,
உனக்கு உரிமையான தமிழ்நிலத்தைக் காத்துக்கொள்.
தமிழை இழந்தால் உன் நாட்டை இழந்துவிடுவாய் என்பதை மனத்தில் வை.


28

🌿🌿🌿
பெரியார் சொன்னதைப் போல தமிழ் காட்டுமிராண்டி மொழியல்ல.
சங்கர மடச் சாமியார் சொன்னதைப் போல தமிழ் நீஷ பாஷை அல்ல.
தமிழ் அறிவியல் மொழி.
============
சித்தர்கள் என்போர் பண்டைய தமிழகத்தின் அறிவியலாளர்கள் ஆவர். அவர்கள் ஆன்மீகவாதிகளோ சாமியார்களோ அல்லர். அவர்கள் விஞ்ஞானிகள் (Scientists). அவர்கள் வானியல், மருத்துவம், வேதியியல் ஆகிய துறைகளில் ஆராய்ச்சி செய்தனர்.
96 உடல்தத்துவங்களாகப் பிரித்து மனித உடற்கூறியலை ( Human Anatomy) ஆராய்ந்தனர்.
நோயியல் (Pathology) துறையில் மிக ஆழமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். மனிதர்களுக்கு ஏற்படும் நோய்கள் 4448 என்று வரையறுத்தனர். இது நோயியல் துறையில் அவர்களின் ஆழமான ஆராய்ச்சி அறிவைக் காட்டுகிறது. மூச்சுறுப்புகளில் ஏற்படும் நோய்களை கப நோய்கள் எனவும், செரிமான உறுப்புகளில் ஏற்படும் நோய்களைப் பித்த நோய்கள் எனவும், மற்றவற்றை வாத நோய்கள் எனவும் வகைப்படுத்தினர்.
மருந்தியல் (Pharmacology) பற்றி விரிவான ஆய்வு செய்தனர். அதன் பயனாக கண்டுபிடித்த மருந்துகளை 32 வகை உள்மருந்துகள், 32 வகை வெளிமருந்துகள் என வகைப்படுத்தினர். மருந்தியல் துறையில் ஏராளமான நூல்களைப் படைத்துள்ளனர்.
நரம்பியலை ஆராய்ந்து வர்ம மருத்துவத்தைக் கண்டுபிடித்தனர். இந்த வர்ம மருத்துவம் சித்தர்கள் கண்டுபிடித்த நரம்பியல் மருத்துவம் (Neurological medicine) ஆகும்.
வேதியியல் துறையை வாதம் என்ற பெயரில் ஆராய்ந்தனர். போகர் வேதியியல் துறையில் ஆழமான விரிவான ஆய்வுகளைச் செய்தவர். செயற்கையாக வேதிப்பொருள்களாகிய தாதுக்களைத் தயாரிக்கும் முறைகளைக் கண்டுபிடித்தனர். அதற்கு வைப்புமுறை என்று பெயரிட்டனர். சித்தர்கள் எழுதிய வாதநூல்கள் அனைத்தும் வேதியியல் துறையில் அவர்களின் ஆழமான ஆராய்ச்சியை வெளிப்படுத்துபவை ஆகும்.
விண்பொறியியல் துறையில் போகர் ஆராய்ந்திருக்கிறார். அதன் பயனாக பஞ்சபூதத்தால் செய்த ஆகாயப்புரவி என்ற விமானத்தைக் கண்டுபிடித்து சீனாவுக்குப் பயணம் செய்திருக்கிறார். ஆகாயப்புரவி என்ற விமானம் பற்றிய குறிப்புகளை போகர் ஏழாயிரம் என்ற நூலில் காணமுடிகிறது.
உடல், மனம், அறிவு வளர்ச்சிக்குப் பயன்படும் வகையில் யோக ஆய்வுகளைச் செய்து யோக நூல்களையும் படைத்தனர்.
மெய்யியல் என்னும் தத்துவத்துறையிலும் ஆய்வுகளைச் செய்தனர். தமது தத்துவ ஆய்வுச் சிந்தனைகளை ஞானநூல்களாகப் படைத்தனர். மொத்தத்தில் சித்தர்கள் பலதுறை வல்லுநர்களாக விளங்கினர்.
சித்த மருந்தியலையும் , சித்த வேதியியலாகிய வாதத்தையும் நவீன வேதியியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி ஆராய்வதன் மூலம் அறிவியல் உலகிற்குப் புதிய வெளிச்சத்தைத் தர முடியும். உலக அறிவியல் வரலாற்றில் சித்தர்களை அறிவியலாளர்களாகக் குறிப்பிடச்செய்ய வேண்டியது நமது கடமை.
இப்போதும் ஆங்கில மருத்துவத்திற்கு சித்த மருத்துவம் சவால் விட்டுக்கொண்டிருக்கிறது.
பல நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்து இல்லாதபோதும் சித்த மருத்துவத்தில் மருந்துகள் உள்ளன என்பதை சித்த மருத்துவம் நிரூபித்துக் காட்டிக்கொண்டிருக்கிறது.
சித்தர்கள் தமிழில் எழுதிய மருத்துவ அறிவியல் நூல்கள் இப்போதும் 500 க்கும் மேற்பட்டவை நமக்குக் கிடைத்துள்ளன.
தமிழ் பண்டைக் காலத்திலிருந்தே அறிவியல் மொழி.
தமிழ் நமது தாய்மொழி என்பதால் பெருமைப்படுவோம்.


29

பெரியார் அணிந்துகொள்ளச் சொன்ன திராவிட முகமூடி எதற்காக?
ஈவெரா என்ற பெரியார்
பார்ப்பான், சூத்திரன், சாஸ்த்ரம் இந்த மூன்று சொற்களை மட்டுமே திரும்பத்திரும்ப தமிழரிடம் சொல்லி பார்ப்பனப் பூச்சாண்டி காட்டி தமிழனை தெலுங்கனிடம் அடிமைப்படுத்தினார்.
அவருடைய நோக்கம் தமிழரிடம் தமிழன் என்ற அடையாளத்தை அழிப்பது.
தமிழை அழிப்பது.
தமிழ்நாட்டை திராவிடர் என்ற பெயரில் தெலுங்கரும் கன்னடரும் ஆளுவது.
அதற்காக அவர் கையில் எடுத்ததே திராவிடர் என்ற சொல்.
தமிழ்நாட்டைத் தெலுங்கரும் கன்னடரும் ஆளவேண்டும் என்ற உள்நோக்கத்திலேயே தமிழர் கழகம் என்று பெயர் வைக்காமல் திராவிடர் கழகம் என்று பெயர் வைத்தார்.
அதன் அடிப்படையிலேயே அதற்குப் பிறகு தமிழ்நாட்டில் கட்சி தொடங்கிய தெலுங்கர்கள் திராவிட என்ற பெயரில் கட்சி தொடங்கினர்.
அதற்காகவே தமிழை மட்டுமே காட்டுமிராண்டி மொழி என்றார்.
தமிழ் இலக்கியங்களை மட்டுமே குப்பைகள் என்றார்.
திருக்குறளை மலம் என்றார்.
பெரியார் தன்னுடைய தாய்மொழியாகிய கன்னடத்தையோ, தெலுங்கையோ, மலையாளத்தையோ காட்டுமிராண்டி மொழி என்று சொல்லி இழிவுபடுத்தவில்லை.
தெலுங்கு, கன்னட, மலையாள மொழி இலக்கியங்களை குப்பைகள் என்றும் மலம் என்றும் சொல்லவில்லை.
தமிழர்களை மட்டும் தமிழில் பேசாதே வீட்டிலும் வெளியிலும் ஆங்கிலத்திலேயே பேசுங்கள் என்றார்.
ஆனால் அவர் வீட்டில் தன்னுடைய தாய்மொழி கன்னடத்திலேயே பேசினார்.
தமிழர்கள் மட்டும் தங்களைத் தமிழன் என்று சொல்லிக்கொள்ளாமல் இருக்க திராவிடன் என்று சொல்லச்சொன்னார்.
ஆனால் அவர் தன்னைக் கன்னடன் என்று சொல்லிப் பெருமைப்பட்டார்.
தமிழ் எழுத்துக்களைக் கூட கற்றுக்கொள்ளும் அறிவில்லாமல் சிரமப்பட்ட வாழைப்பழ சோம்பேரி அவர்.
அதனாலேயே தமிழில் எழுத்துக்கள் அதிகமாக இருக்கின்றன என்று சொல்லி எழுத்துச்சீர்திருத்தம் என்ற பெயரில் தமிழ் எழுத்துக்களை அழித்தொழிக்க திட்டமிட்டார்.
தமிழ் எழுத்துக்களைக் கைவிட்டுவிட்டு தமிழை ஆங்கில எழுத்துக்களில் எழுதவேண்டும் என்றார்.
புரிகிறதா தமிழர்களே! பெரியாரின் கொள்கைகளும் திட்டங்களும் தெலுங்கரும் கன்னடரும் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டது. அதற்காகவே தமிழர்களுக்குள் தமிழர் என்ற அடையாளத்தை அழிக்கத் திட்டமிட்டார். திராவிடர் என்ற புதுப்பெயர் புனைந்தார்.
தமிழர்களுக்குள் ஒற்றுமை ஏற்படாதிருக்க சாதிகளைக் கையில் எடுத்தார்.
ஆதிக்க சாதிகள் என்றும் தலித் சாதிகள் என்றும் சொல்லி தமிழர்களைப் பிரித்தார்.
பெரியாரின் சாதிய கருத்துக்களால் தமிழகத்தில் சாதிகள் ஒழியாமல் சாதிவெறிதான் உண்டாகி இருக்கிறது.
இது பெரியார் கையாண்ட பிரித்தாளும் சூழ்ச்சி.
சாதிகளை ஒழிப்பதாகச் சொன்னார். ஆனால் தன்னுடைய பலிஜா நாயுடு என்ற சாதியைக் கூட அவர் ஒழிக்கவில்லை.
தெலுங்க, கன்னட சாதிகள் எதையும் அவர் ஒழிக்கவில்லை.
தமிழ்நாட்டைத் தமிழர் மண் என்று சொல்லாமல் பெரியார் பூமி என்று தெலுங்கரும் கன்னடரும் சொல்வது எதனால் என்று புரிகிறதா?
தமிழ்நாடு தமிழருக்கு மட்டும் சொந்தமல்ல இது தெலுங்கருக்கும் கன்னடருக்கும் சொந்தமானது என்று சொல்லவே பெரியார் பூமி என்கின்றனர் திராவிடவாதிகள்.
ஈ.வெ.ராமசாமி என்ற பெரியார் திராவிட முகமூடியை எதற்குப் பயன்படுத்தினார் என்று விளங்கியதா நண்பர்களே.


29

தமிழ்நாட்டைத் தமிழரே ஆளவேண்டும் என்று சொன்னால்
"எந்த தமிழர் ஆளவேண்டும் கொஞ்சம் தெளிவாக கூறுங்கள் ஊர் தமிழரா இல்லை ஊருக்கு ஒதுக்குபுறமாக வைக்கப்பட்ட சேரித்தமிழரா?"
என்கின்றனர் சில பெரியாரிஸ்ட்டுகள்.
சேரித்தமிழர் ஊர்த்தமிழர் என்று பேசி தமிழரை ஒன்றுபட விடமாட்டார்கள் இந்த பெரியாரிஸ்ட்டுகள்.
இதே வரையறையை
கர்நாடகத்தில் சென்று கர்நாடகத்தில் ஆள வேண்டியது ஊர் கன்னடனா? சேரிக் கன்னடனா? என்றும், ஆந்திரத்திலோ, தெலங்கனாவிலோ சென்று ஊர் தெலுங்கனா? சேரி தெலுங்கனா? யார் ஆள வேண்டும் என்றோ, கேரளாவிற்கு சென்று சேரி மலையாளியா? ஊர் மலையாளியா? யார் கேரளத்தை ஆள்வது என்று கேட்பார்களேயானால் கேட்பவர்களை மலத்தில் தோய்த்த துடைப்பத்தை கொண்டு பிய்யபிய்ய அடிப்பார்கள்.
ஈ.வெ.ராமசாமி கீழவெண்மணியில் நாற்பதுபேரை குடிசையில் கொளுத்திய கோபாலகிருட்டிண நாயுடு பக்கமே நின்றார்;கோவையில் நாயுடுக்கு எம்.எல்.ஏ வுக்கு நிற்க இடம் கொடுக்கவில்லையென்று காங்கிரசை வசைபாடினார். ஈழத்தந்தை செல்வா ஈழச்சிக்கலுக்கு ஆதரவுகேட்டு ஈவெராவிடம் வந்தபோது ஆதரவு கொடுக்காததோடு, இலங்கையிலுள்ள தெலுங்கர்களை அனுசரித்துப்போங்க என்றும் அறிவுரை சொல்லியிருக்கிறார்.
ஈ.வெ.ராமசாமியும் நாயுடு
கொளுத்திய கோபாலகிருஸ்ணனும் நாயுடு.
சாதிப்பாசம்.
கீழவெண்மணி விசயத்தில் சேரியா- நாயுடா என்று சிந்தித்து தெளிவாக நாயுடு பக்கம் நின்றார் ஈவெரா.
ஈவெரா ஒரு சாதிவெறியன் என்பது தெளிவு.

30

திராவிடம், திராவிட நாடு பற்றி முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்பிள்ளை சொன்னவை.
கி.ஆ.பெ.வி. தந்த 30 பதில்களைப் படியுங்கள்! உண்மையை உரைத்திட முன் வாருங்கள்!
1. தமிழ் என்பது ஒரு நல்ல தமிழ்ச் சொல். திராவிடம் என்பது அழுத்தமான வடமொழிச் சொல்
2. திராவிடம் என்ற சொல்லே திரிந்து “தமிழ்” என்று ஆயிற்று என்பது தமிழ் பற்றாளர் சிலரது கூற்று. இது அவரவர் மொழிப்பற்றை காட்டுமேயன்றி உண்மையைக் காட்டாது-
3. பழைய சங்க காலத்திய தமிழ் நூல்கள் அனைத்திலும் “திராவிட” என்ற சொல் ஒன்று கூட இல்லை.
4. சங்க காலத்திற்குப் பின்னும், 700 ஆண்டுகளுக்கு முன்னும் தோன்றிய இன்றும் இருக்கும் எந்த நூலிலும் திராவிடம் என்ற சொல் இல்லை.
5. 650 ஆண்டுகளுக்குப் பிற்பட்ட வரலாற்று காலத்தில் தான் வரலாறு எழுதிய ஆங்கிலேயரும், ஆங்கிலேயரைப் பின்பற்றி ஆரியரும் தமிழரை தமிழ் நாட்டை தமிழ்மொழியை மட்டுமல்லாமல் தமிழ் இனத்தையும், தமிழ் இனத்தின் மொழிகளையும் சேர்த்து “திராவிடம் ” எனக் குறிப்பிட்டு இருக்கின்றனர்.
6. தமிழருக்கும், தமிழ் இனத்தாருக்கும் திராவிடர் எனப் பெயரிட்டு வரலாறு எழுதிய ஆங்கிலேயருக்கு அறிவித்தவர்கள் அக்காலத்தில் நன்கு கற்றறிந்த ஆரியர்களே!
7. “தமிழ்” என்ற தமிழ்ச் சொல்லிற்கு தம்மிடத்தில் “ழ்” ஐ உடையது. (தம்+ழ்) என்பது பொருள். “திராவிடம்” என்ற வடசொல்லிற்கு குறுகிய விடம் என்றும் திராவிடர் என்ற சொல்லிற்கு குறுகியவர்-அல்லது குறுகிய புத்தியுள்ளவர் என்றும் பொருள்.( திராவி- அற்பம், குறுகல் )
8. தமிழ்நாடு என்பது தமிழ்நாட்டை மட்டுமே குறிக்கும் – திராவிட நாடு என்பது ஆந்திரா, மலையாளம், கன்னடம், துளுவ நாடுகளையும் சேர்த்துக் குறிக்கும்.
9. தமிழ்நாடு என்று ஒரு தனி நாடும்; தமிழ் மொழி என்று ஒரு தனி மொழியும் உண்டு. திராவிட நாடு என்று ஒரு தனி நாடும், திராவிட மொழி என்று ஒரு தனி மொழியும் இல்லை.
10. தமிழ்நாடு , தமிழ் மொழி எனக் கூறலாம்- ஆனால் திராவிட நாடு, திராவிட மொழி எனக் கூற இயலாது. திராவிட நாடுகள், திராவிட மொழிகள் என்றே கூறியாக வேண்டும்.
11. தமிழ்நாட்டு எல்லை வரையறுத்துக் கூறப்பட்டிருக்கிற ஒன்று. திராவிட நாட்டின் எல்லை இதுவரை எவராலும் வரையறுத்து கூறப்படாத ஒன்று. ஒரு நாள் இந்திய மலை வரையில், மற்றொரு நாள் அசாம் வரையில், வேறொரு நாள் இந்தியா முழுவதுவமே “திராவிட நாடு” கூறப்பட்டதும் உண்டு..
12. தமிழ் என்றால் திராவிடம் தான், திராவிடம் என்றாலும் தமிழ் தான், தமிழர் என்றால் திராவிடர் தான், திராவிடர் என்றாலும் தமிழர் தான், தமிழ்நாடு என்றால் திராவிடநாடு தான். திராவிட நாடு என்றாலும் தமிழ்நாடு தான் “அந்தக் கருத்தில்தான் அப்படிச் சொல்லப்பட்டு வருகிறது” என்பதில் புரட்டு இருக்குமே தவிர உண்மை இருக்காது.
13. தமிழர் என்று எழுதி (திராவிடர் ) என்று கூட்டுக்குள் போடுவதும், தமிழ்நாடு என்று எழுதி (திராவிட நாடு ) என்று கூட்டுக்குள் போடுவதும், பிறகு திராவிடர் ( தமிழர்) என்று எழுதி கூட்டுக்குள் போடுவதும் , திராவிட நாடு ( தமிழ் நாடு) என்று எழுதி கூட்டுக்குள் போடுவதும் தவறான எழுத்தாகுமேயன்றி நேர்மையான எழுத்தாகாது.
14. தமிழ்நாட்டைத் தாய்நாடாகக் கொண்டு, தமிழ்மொழியைத் தாய் மொழியாகக் கொண்டு, தமிழ்ப் பண்பை தாய்ப்பண்பாகக் கொண்டு வாழ்பவர் அனைவரும் தமிழரே என்பது ஜாதி பேதமற்று உறுதி செய்யப்பட்டு விட்டது. ஆனால் திராவிடர் யார்? என்பது இன்னும் உறுதி செய்யப்படாமலே இருந்து வருகிறது. ஒரு நாள் மகாராஷ்டிரரும் திராவிடர் என்றும், மற்றொரு நாள் வங்காளிகளும் திராவிடர் என்றும், வேறொரு நாள் “ஆரியர் தவிர அனைவரும் திராவிடரே” என்றும் சொல்லப்பட்டு வந்திருக்கிறது.
15. தமிழ்மொழி ஒன்று மட்டுமே தனித்து நிற்க எழுதப்பேச, இயங்க ஆற்றலுடையது. இத்தகைய ஆற்றல் தமிழ் ஒழிந்த திராவிட மொழிகளில் எதற்கும் இன்று இல்லை.
16. திராவிட மொழிகள் பலவும், வடமொழியோடு சேரச் சேர பெருமையடைகின்றன! தமிழ்மொழி ஒன்று மட்டுமே வடமொழியிலிருந்து விலக, விலக பெருமையடைகிறது!
17. தமிழ்நாடு ஒன்று மட்டுமே பிரிந்து வாழும் தகுதியையும் சிறப்பையும் பிற அமைப்பையும் உடையது. திராவிட நாடுகளில் எதுவும் இத்தகைய நிலையில் இன்று இல்லை.
18. தமிழ் மக்களுக்கு மட்டுமே வட நாட்டிலிருந்து பிரிந்து தனித்து வாழ வேண்டும் என்ற உணர்ச்சி இருந்து வருகிறது. இத்தகைய உணர்ச்சியில் சிறிதளவாவது பிற திராவிட மக்களிற் பலரிடத்திலும் காண முடியவில்லை.
19. “தமிழ்நாடு தமிழருக்கே” என்பது தமிழ்மக்களின் பிறப்புரிமையாக இருக்கும். “திராவிடநாடு திராவிடருக்கே” என்பதுவேண்டாதவர்களுக் விரும்பாதவர்களுக்கும் சேர்ந்து கூப்பாடு போடுவதாக இருக்கும்.
20. திராவிட நாட்டினர்களிற் பலர் தமிழ் மக்களில் எவரையும் அறிவாளி என்று ஒப்பியதுமில்லை; ஒப்புவதுமில்லை. தமிழர்களில் எவரையும் தங்களின் தலைவனாக ஏற்றுக்கொண்டதுமில்லை. ஏற்றுக்கொள்ளப்போவதும
21. திராவிட மக்களிற் பலரும் தமிழர்களிடமிருந்து பிரிந்து வாழவே ஆசைப்படுகிறார்கள். குறை கூறுகிறார்கள். வைகிறார்கள். மனிதனை மனிதனாகக்கூட மதிப்பதில்லை. இக்கூற்றை மெய்ப்பிக்க திராவிடத்தின் தலைவர் என்று தன்னை சொல்லிக் கொள்ளுகிறவர் வீர உணர்ச்சியுள்ள தமிழ்நாட்டு இளைஞர்களே “அதுகள்; இதுகள்” என அஃறிணைப்படுத்தி வைதும் செல்லுமிடமெல்லாம் தமிழ்நாட்டுத் தலைவர்களை, அறிஞர்களை இழிவுபடுத்தி வைவதுமே போதுமான சான்றாக இருந்து வருகிறது. இதனைப் பார்க்கும்போது திராவிடம் என்பதே தமிழ்ப் பகைவர் பேச்சாக இருக்குமோ என்ற ஐயம் உண்டாகிறது.
22. 10 ஆண்டுகளாக திராவிடப் பேச்சு, பிரச்சாரம், பத்திரிகை, கிளை அமைப்பு, பண வசூல், சுற்றுப் பிராயணம், கமிட்டி, தொண்டர்கள், உண்டியல்கள், ஆகிய 9-உம் தமிழ்நாட்டில் மட்டுமே நடைபெற்று வருவதால் அதை தமிழ்நாட்டுக் கழகம் எனச் சொன்னாலும் சொல்லலாமே ஒழிய திராவிட நாட்டுக் கழகம் எனச் சொல்லுவது உண்மைக்கு மாறானதாகும்.
23. தமிழ் நாட்டிற்குள்ளாக திராவிடம் பேசுவது, தமிழ் இளைஞர்களின் தமிழ்ப்பற்றை, தமிழ் நாட்டுப் பற்றை, வீர உணர்ச்சியை வேண்டுமென்றே வீணாக்கி, பாழ்படுத்துவதாக இருந்து வரும்.
24. காலம் செல்லச் செல்ல திராவிட நாடுகளுக்கும் சென்று, அங்கும் பிரச்சாரம் செய்து அவர்களுக்கும் உணர்ச்சி ஊட்டி விடலாம் என்று எவரேனும் கூறுவதானால், அவ்வாறு கூறுகிற அவர் தமது ஆற்றலைத் தவறாகக் கருதுகிறவர் என முடிவு கட்டி விட வேண்டும்.
25. திராவிடர் எவரும் விரும்பாத திராவிட நாட்டை, திராவிடர் எவரும் உறுப்பினரில்லாத திராவிடர் கழகத்தை, திராவிடர் எவரும் ஒப்புக் கொள்ளாத திராவிடத் தலைவர், அரசியல் கழகமல்லாத ஒரு கழகத்தைக் கொண்டு “அடைந்தே தீருவேன் திராவிட நாடு” என்றால் அது இல்லாத ஊருக்கு, போகாத பாதையை, தெரியாத மனிதனிடம், புரியாத விதமாகப் பேசிக் கொண்டிருப்பது போலவே இருக்கும்.
26. அப்படியே பிரிவதாக இருந்தாலும் திராவிடக் கூட்டாட்சியில் தமிழ் மொழி அரசியல் மொழியாக இருக்குமா? அதனை திராவிட நாட்டார்கள் அனைவரும் ஒப்புவரா? என்பதையும் ஒப்பிட்டுப் பார்ப்பது நலமாகும்.
27. அப்படியே ஒப்பினாலும் கூட்டாட்சியில் உறுப்பினராக இருக்கும் வடமொழிப்பற்றும், வடசார்பும் உள்ள ஆந்திரர், மலையாளி, கன்னடியர், துளுவர் ஆகிய நால்வருக்கும் எதிராக தமிழ் மொழிப்பற்றும் சார்பும் உள்ள ஒருவன் இருந்து தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் நலன்களை வளர்க்க முடியுமா? முடியாவிட்டாலும் பாதுகாக்கவாவது முடியுமா? என்பதும் எண்ணிப் பார்க்க வேண்டிய ஒன்றாகும்-
28. அவ்விதமே முடிந்தாலும் அந்தக் கூட்டாட்சிக்கு உறுப்பினனாக தமிழ் நாட்டின் தலைவனைத் தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டாமா? தேர்ந்தெடுக்க தமிழ்நாடு முழுவதும் அடங்கிய ஓர் அமைப்பு வேண்டாமா? அத்தகைய அமைப்பு திராவிடத் தலைவருக்கு போட்டியாகவும், அமைப்பை அமைக்கத் தொண்டு செய்பவர்கள் பித்தலாட்டக்காரர்களாக, அயோக்கியர்களாகத் தோன்றவும் காரணம் என்ன? என்பவைகள் அரசியல் அறிஞர்களால் ஆராய வேண்டியவைகளாகும்.
29. தமிழ் வாழ்க என்று கூறி தமிழ்நாடு தமிழருக்கே என அலறி தமிழர் கழகத்தைத் தோற்றுவித்துத் தமிழர் மாநாடுகளைக் கூட்டி, தமிழ்க்கொடியை உயர்த்தி, இந்தி எதிர்ப்பை நடத்தி, பண முடிப்புகளைப் பெற்றுக் கொண்ட பிறகு, அவைகளை அடியோடு ஒழித்துவிட்ட திராவிடம் வளர்க எனக் கூறி, திராவிட நாடு திராவிடருக்கே என அலறி திராவிட கழகத்தைத் தோற்றுவித்து, திராவிட மாநாடுகளை நடத்தி, திராவிடக் கொடிகளை உயர்த்தி திராவிடர்க்கு போராட வேண்டிய அவசியமும், அவசரமும் என்ன? என்பதற்கு திராவிடம் இதுவரை பதிற்கூறவேயில்லை. தமிழ் வேறு, திராவிடம் வேறு என்பதற்கும், இரண்டும் ஒன்றல்ல என்பதற்கும் இதுவும் போதுமான சான்றாகும்.
30. தமிழ்ப் பெரியார் என்றும், தமிழ்த் தாத்தா என்றும், தமிழ்நாட்டுத் தலைவர் என்றும், தமிழ்நாட்டு தனிப்பெருந்தலைவர் என்றும், தமிழ் மக்கள் அனைவரும் இந்தி எதிர்ப்புக் காலத்தில் அழைத்தும், சொல்லியும் வரலாற்றில் எழுதியும் கூட அவர் தன்னை கன்னடியர் என்று நினைக்கிற நினைப்பும், முனைப்புமே இம்மாற்றத்திற்குத் காரணம் என்பதை அவர் இன்றுவரை மறுக்க முன்வராததால், அது உறுதி செய்யப்பட வேண்டியதேயாகும்.
இதுகாறுங் கூறியவைகளைக் கண்டு
தமிழ் எது? திராவிடம் எது?
தமிழர் யார்? திராவிடர் யார்?
தமிழ்நாடு எது? திராவிட நாடு எது?
தமிழ் மக்களுக்கு வேண்டுவது எது?
என்ற இவையும், இவை போன்ற பிறவும் ஒருவாறு விளங்கியிருக்கும் என எண்ணி உண்மையை விளக்க இவை போதும் என நம்பி இத்தோடு நிறுத்துகிறோம்.
நன்றி:”,தமிழர் நாடு” இதழ், 1 மார்கழி 1980 (16.12.1949)
பேரா.கோ.வீரமணி தொகுத்த “முத்தமிழ்க் காவலர்” கி.ஆ.பெ.விசுவநாதம் நூலிருந்து.

31

திராவிடத்தைப் பற்றி ஐயா பாவாணர்: : :
தீது தீது திராவிடம் என்பதே தீது - அன்பார்ந்த தமிழர்களே, தமிழ்தாயின் தலைமகனும், தமிழர்களின் தத்துவார்த்த தலைவனும், தமிழர்களின் ஒரேதந்தையுமான, திராவிடஇருள் கிழித்த செந்தமிழ் ஞாயிறு, ஐயா தேவநேயப் பாவாணர் அவர்களின் கருத்துக்களே இங்குத் தரப்பட்டுள்ளது. கால்டுவெல் கண்காணியார் முதன்முதலாக திராவிடமொழிகளை ஆய்ந்ததினாலும். அக்காலத்தில் தமிழ்த் தூய்மையுணர்ச்சியின்மையாலும் தமிழை திராவிடத்தினின்று வேறுபடுத்திக் காட்டத் தேவையில்லாதிருந்தது. இக்காலத்திலோ ஆராய்ச்சி மிகுந்து விட்டதனாலும், வட மொழியும் இந்தியும் பற்றிய கொள்கையில் தமிழர்க்கும் பிற இனமொழியாளர்க்கும் வேறுபாடு இருப்பதனாலும், தமிழென்றும் பிற இன மொழிகளையே (தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்றவற்றையே) திராவிடம் என்றும் வேறுபடுத்திக் காட்டுதல் இன்றியமையாதது. தமிழ்த் தூய்மையான தென்மொழி என்றும், திராவிடம் என்பது ஆரியம் கலந்த தென்மொழிகள் என்றும் வேறுபாடறிதல் வேண்டும். பால் தயிராய்த் திரிந்த பின் மீண்டும் பாலாகாதது போல் வட மொழி கலந்து ஆரிய மயமாகிப் போன திராவிடம் மீண்டும் தமிழாகாது. வட மொழிக் கலப்பால் திராவிடம் உயரும், தமிழ் தாழும். ஆதலால், வடசொல் சேரச்சேரத் திராவிடத்திற்க்கு உயர்வு. அது தீரத் தீர தமிழிற்கு உயர்வு. திராவிடம் என்ற மொழிநிலையே வடமொழிக் கலப்பால்தான் நேர்ந்தது. அல்லாக்கால் அது கொடுந்தமிழ் என்றே பண்டுபோற் கூறப்படும். தமிழ் தனித்தியங்கும். திராவிடம் வடமொழித் துணையின்றி தனித்தியங்காது. இங்ஙனம் வடமொழியை நட்பாகக்கொள்ளும் திராவிடத்திற்கும், பகையாகக்கொள்ளும் தமிழிற்கும் ஒருசிறிதும் நேர்த்தம் இருக்கமுடியாது. ஆதலால், தமிழ், தமிழன், தமிழ்நாடு என்ற சொற்களன்றி, திராவிடம், திராவிடன், திராவிடநாடு என்றசொற்கள் ஒலித்தல்கூடாது. திராவிடம் அரையாரியமும், முக்காலாரியமுமாதலால் அதனோடு தமிழை இணைப்பின், அழுகளோடு சேர்ந்த நற்கனியும் கெடுவதுபோல், தமிழும்கெடும். தமிழனும் கெடுவான். பின்பு தமிழுமிராது, தமிழனுமிரான். இந்தியா முழுவதும் ஆரியமயமாகி விடும். திராவிட முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு என்னும் கொள்கையை விட்டுவிட்டுத் திராவிட நாடு என்னும் பொருத்தமற்றக் கொள்கையை கடைபிடித்து தமககுத்தாமேயும் முட்டுக்கட்டை இட்டுக் கொண்டது. இது நீங்கினாலொழிய முன்னேற்றமும், வெற்றியுமில்லை. தமிழ் என்னும் சொல்லிலுள்ள உணர்ச்சியும், ஆற்றலும் திராவிடம் என்னும் சொல்லில் இல்லை. தமிழ் சென்னையைத் தலைநகராகக் கொண்ட தென்னாட்டில் மட்டுமுள்ளது. தமிழ் வேறு திராவிடம் வேறு, தமிழையும் திராவிடத்தையும் இணைப்பது பாலையும் தயிரையும் கலப்பது போன்றது. மேற்சொன்ன கருத்துகளின் மொழியியல் ஆதாரங்களே பின்வருவது. கால்டுவெல் கண்காணியார் குமரிநாட்டு சரித்திரத்தையும், தொல்காப்பியத்தையும், மேற்கணக்கு நூல்களையும் அறியாதவராதலாதலின் தமிழரை வடக்கிருந்து வந்தவராகவும், ஆரியரால் நாகரிகமடைந்தவராகவும் கொண்டு த்ரமிளம் எனும் வடசொல்லினின்று தமிழ் எனும் சொல் பிறந்ததென்று கூறினார். ஆனால், பண்டிதர் கிரையர்சன் இதை மறுத்துத் தமிழம் என்பதே த்ரவிடம் என்பதன் மூலம் என தமது இந்திய மொழியாராய்ச்சி எனும் நூலில் நிலைநாட்டியுள்ளார். தமிழுக்கு திராவிடம் எனும் பெயர் தமிழ்நாட்டில் வழங்காமையானும் தமிழ் என்னும் வடிவத்தையொட்டிய பெயர்களே மேனாட்டிலும், வட நாட்டிலும் பழங்காலத்தில் வழங்கி வந்தமையானும், திராவிட மொழிகளெல்லாம் ஒரு காலத்தில் தமிழாகவேயிருந்தமையானும், தமிழம் என்னும் பெயரே திராவிடம் எனத் திரிந்தது என்று தெளியப்படும். தமிழ் என்னும் பெயர் எங்கனம் திராவிடம் எனத் திரிந்ததோ அங்கனமே தமிழாகிய மொழியும் பிற திராவிட மொழிகளாய் திரிந்தது என்க. 16ம் நூற்றாண்டு வரை மலையாள நாட்டுமொழி கொடுந்தமிழாய் இருந்ததென்றும் அதன் பின்னரே வடமொழி கலப்பால் மலையாளமாகத் திரியத் தொடங்கிற்று என்றும் அறியலாம். 1860ம் ஆம் ஆண்டில்தான் முதல் மலையாள இலக்கணமும் எழுந்தது. 19ம் நூற்றாண்டு வரை மலையாளியர் தமிழையும் கற்று வந்தனர். தொல்காப்பியர் காலத்தில் கன்னடம் தோன்றவில்லை என்பதும், தெலுங்கு கொடுந்தமிழ் நிலையில் நின்றது என்பதும் வேங்கடவெல்லைக்கு தெற்கில் உள்ள நிலப்பகுதி முழுவதும் செந்தமிழே வழங்கின என்பதும் அறியப்படும். தெலுங்கு பிரிந்தது சுமார் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்றும், கன்னடம் பிரிந்தது சுமார் கி.பி. ஆறாம் நூற்றாண்டு என்றும் கூறலாம். மலையாளத்திற்கு அடுத்துத் தமிழோடு தொடரபுள்ளது கன்னடம். கன்னடம் என்பது கருநடம் என்னும் தமிழ் சொல்லின் திரிபு. இது முதலாவது கன்னட நாட்டை குறித்து பின்பு அங்கு வழங்கும் மொழியைக் குறித்தது. இதன் பழைய வடிவங்கள், கருநாடு, கருநாடகம் என்பன, கன்னட நாட்டார், கருநாடார் என்றும் கருநடர் என்றும் அழைக்கப்பட்டனர். கருநடம் அல்லது கருநாடகம் என்னும் சொல்லுக்கு இரு பொருள்கள் கூறப்படுகின்றன. அவை 1. கரியநாடு, 2. கருங்கூத்து என்பன. கன்னட நாட்டின் பெரும்பகுதி கரிசல் நிலமாய் இருப்பதால் கரிய நாடு என்று பொருள் கொண்டனர் குண்டெட் பண்டிதரும், கால்டுவெல் கண்கானியாரும். மிகப்பழமையான அநாகரிக அல்லது கண்மூடிப்பழக்கத்தை பழைய கர்நாடகம் என்பர். இங்கு கர்நாடகம் எனபது பழமையான அநாகரிகத்தைக் குறிக்கலாம். ஆகவே, கருநடம் அல்லது கருநாடகம் என்னும் பெயர் கருங்கூத்து நிகழும் நாடு என்னும் பொருள் கொண்டதாய் இருக்கலாம். ஆயினும் கருநடரை கருநாடர் என்னும் வழக்கும் உண்மையானும் கூத்தாகிய காரணத்தினும் நிலவகையாகிய காரணம் பெயர் பேற்றிற்குச் சிறந்தலானும், கரிசற்பாங்கான நாடு என்று பொருள் கொள்வதே பொருத்தமாம். சேர நாடு கடைக்கழகக் காலத்திலேயே குடமலைக்கு (மேற்குத் தொடர்ச்சி மலை) மேற்பால் வேறும், கீழ்பால் வேறுமாக பிரிந்து போயிற்று. கீழ்பால் நாடு, மீண்டும் தெற்கில் கொங்கு நாடும் வடக்கில் கங்க நாடும் இடையில் அதிகை நாடு, துவரை நாடு, முதலியனவுமாக பிரிந்துவிட்டது. அதிகை நாடு தகடூரை (இன்றைய தர்மபுரியை) தலைநகராகக் கொண்டு அதிகமான் மரபினர் ஆண்டுவந்தது கங்க நாடு. அதன் வடக்கில் கங்க மரபினர் குவலாலபுரத்தை (கோலார்) தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தனர். இது கங்கபாடி என்று கல்வெட்டுகளில் கூறப்படும். இக்கங்க மரபைச் சேர்ந்தவனே பன்னிரெண்டாம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்கச் சோழன் காலத்தவனும், அமராபரணன் ஸ்ரீமத் குவலாலபுர பரமேசுவரன் கங்கருலோர்பவன் என்று தன் மெய்கீர்த்திகளில் பாராட்டப்பெறுபவனும் பவணந்தி முனிவரைக் கொண்டு நன்னூலை ஆக்குவித்தவனுமாகிய சீயகங்கன் என்பவன். இவன் ஒரு தமிழ் இலக்கணத்தை இயற்றுவித்ததினாலும் நன்னூற் சிறப்புப்பாயிரம் " குணகடல் குமரி குடகம் வேங்கடம் எனுநான் கெல்லையின் இருந்தமிழ்க் கடலுள் " என்று கூறுவதாலும் மைசூர்நாட்டின் வேங்கட நேர் எல்லை வரை பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரையுமாவது தமிழ் தவிர வேறு ஒரு மொழியும் வழங்கவில்லை என்பது இதனால் அறியப்படும். தெலுங்கிற்கு வடுகு, ஆந்திரம் என்னும் பெயர்கள் உண்டு. தெலுங்கு என்பது தெலுங்கராலேயே இடப்பட்டது. வடுகு என்பது தமிழராலும் ஆந்திரம் என்பது ஆரியராலும் இடப்பட்டன. தெலுங்கு தமிழ்நாட்டிற்கு வடக்கே வழங்குவதால் வடுகு எனப்பட்டது. தொல்காப்பியர் காலத்தில் வேங்கடத்திற்கு வடக்கே கொடுந்தமிழ் வழங்கிற்று என்றும் , அது பின்பு திரிந்து வடுகு எனும் கிளைமொழியாயிற்று என்றும் அறியலாம். கலிங்கத்திற்கு வடக்கில் ஆந்திரம் என ஒரு தெலுங்கு நாடு இருந்ததென்றும் ஓர் ஆந்திர அரச மரபினர் வட இந்தியாவையும் ஆண்டு வந்தனரென்றும் வட மொழி இருக்குவேத ஐந்திரேய பிரமாணத்தாலும் இதிகாசப் புராணங்களாலும் அறிய வருகிறது. சேரன் செங்கூட்டுவனுக்கு வடநாட்டுச் செலவில் துணைவரான நூற்றுவர் கன்ணர் ஆந்திர மன்னராயிருக்கலாம். கலிங்கம் (ஒரிசா மாகாணமும், கஞ்சங் கோட்டகமும்) என ஒரு தெலுங்குநாடிருந்ததாலும், பண்டை தெலுங்கு நாட்டின் ஒரு பாகம் கலிங்கம் என்னும் பொதுப் பெயர் கொண்ட முப்பகுதியாக இருந்ததென்றும், அதனால் அது திரிகலிங்கம் எனப்பட்டது என்றும் அறியலாம். திரிகலிங்கம் என்பது முறையே திரிலிங்கம் - தெலுங்கம் - தெலுங்கு என மருவிற்று. ஆந்திரர் நெடுங்காலமாக ஒரு தனி மண்பதையராக இருந்து வந்திருக்கின்றனர், எனினும் அவரது மொழி கடைக்கழகக்காலம் வரையில் கொடுந்தமிழாகவும் கிளைமொழியாகவுமிருந்து அதன்பின்னரே வடமொழிகலப்பால் இனமொழியாகப் பிரிந்துவிட்டது. கடைக்கழகக் காலத்தில் வேங்கட எல்லையில் தெலுங்கு இருந்ததில்லை. அன்று வேங்கட மலை புல்லி என்னும் தமிழ் வள்ளளுக்குரியதாய் இருந்தது. வேங்கட மலை தொண்டை நாட்டின் பெரும்பிரிவாகிய 24 கோட்டங்களில் ஒன்றாக இருந்தது. நம்பியாரூராரிடம் (சுந்தர மூர்த்தி அடிகளிடம்) சில வடுகர்கள் (அல்லது வடுகு வடிவில் வந்த சிவ பூதங்கள்) வழிப்பறித்ததால், ஒன்பதாம் நூற்றாண்டிலேயே வடுகர் கொங்கு நாட்டில் குடியேறி விட்டனர் எனலாம். யாழ்பாண அகராதியில் வடுகன் எனும் பெயருக்கு மூடன் என்றும் பொருள் கூறியிருப்பதாலும் முதன்முதலாகத் தமிழ்நாட்டிற்கு வந்த வடுகர் (கம்பளத்தார்) முரடனாய் இருந்தனரென்றும் தமிழர் அவரோடு உறவாடவில்லை என்றும் அறிகிறோம். 15 ஆம் நூற்றாண்டில் வீரசேகர பாண்டியனுக்கும், சந்திரசேகர சோழனுக்கும் பகைமை நேர்ந்த போது, முந்தியவன் வேண்டுகோட்கிணங்கி விசய நகர அரசனாகிய கிருட்டிண தேவராயர் தம் படைத் தலைவனாகிய நாகமநாயக்கரை அனுப்பி சோழனை வென்றார், அதிலிருந்து சோழ, பாண்டி நாடுகள் நாயக்கமன்னர் கைப்பட்டது. தெலுங்கர் பலர் தமிழ்நாட்டில் குடியேறினர். அவருள் நாயக்கர் (நாயுடு), இரெட்டியார் என்பவர் தலைமையானவர் கம்பளத்தாரும் சக்கிலியருமாகிய தெலுங்கர் ஒன்பதாம் நூற்றாண்டிற்கு முன்பே தமிழ்நாட்டில் குடியேறி விட்டனர். அவரே முதன்முதல் வடுகர் எனப்பட்டனர். 15 ஆம் நூற்றாண்டிற்கு பின் பாண்டியர் வலிமை குன்றியதாலும், தெலுங்கர் பலர் தமிழ்நாட்டில் குடியேறி விட்டதாலும், பாண்டி நாட்டில் பல தெலுங்கு வேளிரும், குறுநில மன்னரும் தோன்றினர். அவற்றில் எட்டயாபுரமும்,பாஞ்சாலங்குறிச்சியும் தலைமையானவை. தெலுங்கர் தமிழ்நாட்டில் குடியேறவே, தனித் தமிழ் நிலையங்களாயிருந்த திருவேங்கடம், திருக்காளத்தி, திருத்தணிகை முதலிய வடபாற் சிவநகரங்கள் இருமொழி நிலையங்களாக மாறிவிட்டன. தெலுங்கு நாட்டையடுத்த தமிழரும் தெலுங்கை கற்று தெலுங்கராகவே மாறி வருகின்றனர். குடகுக்கு மிகநெருங்கி, கன்னடத்தினின்று சிறிதும், மலையாளத்தினின்று பெரிதும் வேறுபட்டுத் திருந்திய திராவிட மொழிகளுள் ஒன்றாய் தெலுங்கு, கன்னடம், மலையாளம் இவற்றிற்கு அடுத்தாற் போல் சொல்லத்தக்கது துளு மொழியாகும். துளுவிற்குத் தனியெழுத்தும், தனி அல்லது பழைய இலக்கியமும் இல்லை. மங்களூர் பேசெல் விடைத்தொண்டரால் கன்னடவெழுத்திலும், துளுவப் பார்ப்பனரால் மலையாளவெழுத்திலும் துளு எழுதப்பட்டு வருகின்றது. மேல்கரைநாட்டில் கன்னடத்திற்கு தெற்கில், சந்திரகிரி, கல்யாணபுரி ஆறுகட்கிடையில் பெரும்பாலும் தாய் மொழியாக பேசப்படுவது துளு ஆகும். துளுவ நாட்டு கொடுந்தமிழ் கிளைமொழியாய் பிரிந்தது 16 ஆம் நூற்றாண்டிற்கு பின்னரே என்பதை அறியவும். துளுவ நாட்டிலிருந்த பல நூற்றாண்டிற்கு முன்னரே வேளாளர் பலர் தொண்டை மண்டலத்திற்கு குடிவந்தனர். அவரே தொண்டை மண்டல துளுவ வேளாளராவார், அவர்தம் மொழி தொன்று தொட்டுத் தமிழே ஆகும். தமிழே தூய்மையான தென்மொழி என்றும், ஆரியங்கலந்த கொடுந்தமிழே திராவிட மொழிகளாய் (தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு) திரிந்ததென்று அறியவும். வடமொழிக் கலந்து ஆரிய மயமாகிப் போன திராவிடம் மீண்டும் தமிழாகாது. திராவிடரும் மீண்டும் தமிழராக மாட்டார். அரை ஆரியமும், முக்காப் ஆரியமுமான திராவிடத்தோடு தமிழை இணைத்தால், அழுகளோடு சேர்ந்த நற்கனியும் கெடுவதுபோல் தமிழும் கெடும். தமிழனும் கெடுவான். தமிழ் வேறு திராவிடம் வேறு என்பதுடன் ஆரியமும் திராவிடமும் ஒன்றேயென அறிக. இதுகாறும் கூறியவற்றால் உண்மைநிலையை உள்ளவாறு உணர்ந்து நடைமுறைக்கொவ்வாத வீண்கொள்கைகளையும், வீரப்புகளையும் (திராவிடத்தையும்) விட்டு விட்டு எடுத்த முயற்சி இடையூறின்றி வெற்றி பெறும் பொருட்டு தமிழ் - தமிழர் - தமிழ்நாட்டை முன்வைத்து தமிழர்கள் - ஒற்றுமையாகப் போராடி முன்னேற்றப் பாதையில் முனைந்து செல்க. தமிழ், தமிழர், தமிழ்நாடு வெல்க! தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், தமிழ்நாடு. செந்தமிழ் ஞாயிறு - தமிழர் தந்தை தேவநேயப் பாவாணர்


32

தமிழர் என்று சொல்லவேண்டுமா? திராவிடர் என்று சொல்ல வேண்டுமா?
தமிழரெல்லாம் தமிழர் என்றே சொல்லுங்கள் என்றார் தேவநேயப் பாவாணர்.
"இந்தியா விடுதலையடைந்தவுடன் தமிழ்நாடு தமிழ் மாகாணம் எனத் தனியாய்ப் பிரிந்து தமிழுக்கு ஆக்கம் பிறக்கும் என எண்ணியிருந்தோம். ஆயின், இன்றுள்ள நிலைமையை நோக்கும்போது, நாம் இலவு காத்த கிளியானோமோ என்று ஐயுற இடந்தருகின்றது. மொழிவாரி மாகாணப்பிரிவு தேசீயப் பேரவைத் திட்டக் கூறுகளில் ஒன்றாயிருந்தது அனைவர்க்குந் தெரிந்ததே. அது ஏனோ இன்று முற்றும் கை நெகிழவிடப்பட்டுள்ளது. பிறநாட்டாரால் மட்டுமன்றித் தமிழ் நாட்டாராலும், தமிழுக்கு மாறான கருத்துக்கள் தமிழ் நாட்டில் பரப்பப்பட்டு வருகின்றன. அவற்றுள், தமிழ் நாட்டைத் திராவிட நாடு ( அல்லது தமிழனைத் திராவிடன் ) என்பதும் ஒன்று.
புதிதாய்க் கறந்த பாலுக்கும் புளித்துப் புழுப்புழுத்தத் தயிருக்கும் எத்துணை வேறுபாடுண்டோம் அத்துணை வேறுபாடு தமிழுக்கும் திராவிடத்திற்கும் உண்டு. புதிதாய்க் கறந்த பாலின்றே புளித்துப் புழுபுழுப்புழுத்த தயிரும் தோன்றியதாயினும் அவ்விரண்டையுங் கலக்க முடியாதவாஉ, அவற்றுட் பின்னது அத்துணை திரிந்துள்ளது. அவ்விரண்டையும் வேண்டுமென்று கலப்பின், முன்னது தன்னிலை கெட்டுப் பின்னதின் நிலையை அடையும். அங்கனமே தமிழும் திராவிடத்தோடு சேரின் திராவிட நிலையடைந்துவிடும். திஎஇந்து வந்த திராவிடம் என்ற பெயரும், எத்தனை வேறுபட்ட மொழிகளைக் குறிக்குமோ , அத்துணையே, தமிழர் என்னும் பெயரும் அதனின்று திரிந்த திராவிடர் என்னும் பெயரும் வேறுபட்ட இனத்தாரைக் குறிக்கும்.
தமிழ் ஒன்றே தூயது. வடமொழித் துணையன்றித் தனித்தியங்க வல்லது. ஏனைத் திராவிட மொழிகளோ தமிழ்த் துணையை விட்டு வடமொழித் துணையை வரையிறந்து பற்றி ஆரியமாயமாய்ப் போனவை. வடசொல் குறையக் குறையத் தமிழ் தூய்மையடைந்து உயரும் ஆனால், பிற திராவிட மொழிகளோ, வடசொல் கூகக் கூட எழில் பெற்று உயர்வனவாகக் கருதப்படும். தமிழர் தம்மை ஆரியக் கலப்பில்லாத தனியினமாகக் கருதுவதில் பெருமை கொள்கின்றனர். ஆனால், ஏனைத் திராவிடர் தம்மை ஆரியராகக் கூறுவதிலேயே பெருமை கொள்கின்றனர்.
இங்ஙனம் வேறுபட்டிருப்பதால், திராவிடத்திற்குள்ளேயே தமிழல்லாத பிற திராவிட மொழிகளைத் திராவிடகம் என்றும், தமிழரல்லாத பிற திராவிட இனத்தாரைத் திராவிடகர் என்றும் அழைக்கலாம்.
எந்த நாட்டிலும் ஒரு மொழியின் பெயராலேயே ஓர் இனத்தின் பெயர் அமைந்துள்ளது. எடுத்துக்காட்டு : ஆங்கிலம் - ஆங்கிலேயர்
செருமன் - செருமானியர், சீனம் - சீனர், சப்பான் - சப்பானியர்,. ஒரே மொழி பேசுபவர் பல்வேறு நாட்டிலும், பல்வேறு மொழி பேசுபவர் ஒரே நாட்டிலும் வாழின் அவர் அவ்வந் நாட்டுப் பெயரால் அழைக்கப் பெறலாம். ஆனால், மொழியைப் பொறுத்தவரையில் அவருள் ஒவ்வொரு வகுப்பாரும் ஒவ்வொரு தனி மொழியார் பெயர் பெறுபவரேயன்றி ஒரு மொழித் தொகுதியாற் பெறுபவரல்லர். தமிழ் என்பது ஓர் தனி மொழித் தொகுதி. அது 13 மொழிகளை உட்கொண்டது. திராவிட நாடு என்பது பல நிலப் பகுதிகளாகத் தமிழ் நாட்டிலிருந்து பெலுச்சிஸ்தானம் வரை தொடர்பின்றிப் பரவியுள்ளது. அந்நிலப் பகுதிகளெல்லாம் சேர்ந்து ஒரு நாடாக ஆகப்போவதுமில்லை.
வட இந்தியத் திராவிட நாடுகள்தான் தொடற்பற்றவை. தென்னிந்தியத் திராவிட நாடுகள் தொடர்புற்று ஒரு பெரு நிலப்பகுதியாய் உள்ளன. அதனால், அப்பகுதியைத் திராவிட நாடாக்கலாம். என்னின், தென்னிந்தியத் திராவிடநாடுகள் இன்னும் ஒன்று சேரவில்லை. இனிமேல் சேரப் போவதாக ஒரு குறியும் இல்லை.
இதுபோது பிற தென்னிந்திய திராவிட நாடுகள் சேராவிடினும் எதிர்காலத்தில் அவை சேருமாறு தமிழ்நாட்டில் இன்று அடிகோலுவோர் எனின்; அதுவும் பொருந்தாது. ஏனெனில் , அங்ஙனம் அடிகோலுவதற்கும் ஆந்திரம், கன்னடம், மலையாளம் ஆகிய ஏனை முப்பெருந் திராவிட நாடுகளில் உள்ள மக்கள் நூற்றுக்கு ஐந்து வீதமாவது திராவிட நாட்டியக்கத்தில் சேர்ந்து உறுப்பினர்களாகத் தம் பெயரைப் பதிவு செய்திருத்தல் வேண்டும். அல்லது அவ்வியக்கம் பரப்புரைக்காவது அங்குள்ள மக்கள் இடந்தரல் வேண்டும். இவ்விரண்டுமில்லை; ஆகையால் திராவிட நாட்டுத் துவக்கத்திற்கும் வழியில்லை. யாரோ ஒருவர் எங்கோ ஓரிடத்திலிருந்து இவ்வியக்கத்தைப் பாராட்டி எழுதின், அது வலியுறாது.
இனி, பல திராவிட இனத்தார் தமிழ் நாட்டிலிருத்தலின், தமிழ் நாட்டையே திராவிட நாடாகத் துவக்கலாமெனின் , அது தமிழுக்கு உலை வைப்பதாகும். ஏற்கனவே, தமிழ் நாட்டில் தமிழுணர்ச்சியும், தமிழனுணர்ச்சியும் குன்றியுள்ளன. நீதிக்கட்சி ஆட்சியிலாவது காங்கிரஸ் ஆட்சியிலாவது பார்ப்பனத் தமிழனும் எத்துறையிலும் தலைமைப் பதவிக்கு வந்ததில்லை. தமிழ் நாடு தமிழ் நாடாயிருக்கும்போதே இந்நிலைமை எனின், திராவிடநாடாகிவிடின், தெலுங்கரும், கன்னடரும், மலையாளியரும் வரம்பின்றித் தமிழ் நாடு புகுந்து தமிழரெல்லாம் வாழ்வுக்கே இடமின்றித் தவிக்க வேண்டியதுதான்.
தமிழ்நாட்டிலுள்ள பல திராவிட இனத்தாரையும் தமிழர் என்னும் சொல் தழுவாமையால், அவரை எல்லாம் திராவிடர் என்றே அழைத்தல் தகுதி எனின், எந்நாட்டிலும் பல இனத்தார் இருக்கத்தான் செய்கின்றனர். ஆயின், பெரும்பான்மை பற்றியுமே பழங்குடி மக்கள் பற்றியுமே ஒரு நாடு பெயர் பெறும். இங்கிலாந்தில் ஏனை நாட்டு மக்கள் இல்லாமலில்லை. ஆயின், அது பற்றி அது ஆங்கில நாடு என்னும் பெயரை இழந்து விடாது. ஆதலால் தமிழ்நாடு பல திராவிட இனத்தார் வாழ்வதாயினும் தமிழ் நாடே.
அற்றேல் திராவிடர் அல்லோரோவெனில், தமிழர் திராவிடர்தான். ஆயின் என்றும் திராவிடரென்று அழைக்கப்பெறுபவரல்லர். தொகுதியினத்தைக் குறிக்கும்போது திராவிடரென்றும், தமிழ் இனத்தைக் குறிக்கும்போது தமிழர் என்றும், அவர்
அழைக்கப் பெறுவர். இயல்பாகத் தமிழினங் குறிக்கப்படுமேயன்றித் தொகுதியினங் குறிக்கப்படாது. இனி, தொகுதியினத்தினும் விரிவுபட்ட தேச இனம் கண்ட இனம் முதலியவுண்டு. அவையுங் குறிக்கப் பெறும்போது, தமிழர் முறையே, இந்தியர் என்றும் ஆசியர் என்னும் பெயர் போன்றதே திராவிடர் என்னும் பெயரும் என்க.
ஒரு நாட்டில் பிறநாட்டு மக்களுமிருப்பின், வெளிநாட்டார் உள்நாட்டாரை எல்லா வகையிலும் பின் பற்ற வேண்டுமேயன்றி, உள்நாட்டார் வெளிநாட்டாரைப் பின்பற்ற வேண்டியதில்ல. வெளிநாட்டார் நாகரிகத்திற் சிறந்தவராயிருப்பின், உள்நாட்டார் அவரைப் பின்பற்றலாம். தமிழரல்லாத திராவிடர் அத்தகையரல்லர். மேலும் வெளிநாட்டார் நாகரிகத்திற் சிறந்தவராயிருந்தவிடத்தும் உள்நாட்டாரின் இனப்பெயர் மாறிவிடாது. ஆதலால், எவ்வகையிலும் தமிழ் நாட்டிலுள்ள பிற திராவிடர் தம்மைத் தமிழர் என்று கொள்ளுதல் வேண்டுமேயன்றி, தமிழைத் திராவிடன் என்று அழைத்தல் கூடாது. .
ஆரியன் என்னும் பெயருக்கு எதிரானது திராவிடம் என்பதுதான் என்னின், அதுவும் பொருந்தாது. ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய் ர்ன்று திருஞானசம்பந்தர் கூறியிருத்தல் காண்க. ஆரியத்தை எதிர்ப்பது தமிழ் ஒன்றே. அவ்வெதிர்ப்புணர்ச்சி இருப்பதும் தமிழ் நாடொன்றே.
தமிழர் ஒரு சிற்றினத்தாராதலானும், பிற திராவிடரோடு சேரினல்லாது அவர்க்குப் பாதுகாப்பு இல்லாமையாலும், திராவிடர் என்று தம்மை அழைத்துக் கொள்வதே அவர்களுக்கு நலமெனின், இது பேதைமையர்க்குக் கூறும் ஏமாற்றுரையேயன்றி வேறன்று. பிற திராவிடர் தமிழரோடு சேருவதில்லையென்று முன்னரே கண்டோம். மேலும் இக்காலத்தில் ஒரு நாட்டினற்குப் பாதுகாப்பாயிருப்பது உலக அரசுகளிடை வளர்ந்து வரும் அமைதி விருப்ப அறவுணர்ச்சியேயன்றி, அந்நாட்டின் பருமை அல்லது வன்மையன்று. ஆதலால், தமிழரை அவர் பாதுகாப்பிற்காகத் திராவிடநாடு சேர அல்லது திராவிடரென்று கூறச் சொல்வதெல்லாம், கொக்கு மீன்களின் பாதுகாப்பிற்காகக் கூறியது போன்றதே
தமிழர் என்னும் பெயர் பார்ப்பனரையும் தழுவுவதால், இனவுணர்ச்சி ஊட்டுதவதற்குத் திராவிடர் என்னும் பெயரே ஏற்றதெனில், வடசொல்லின்றிப் பிற திராவிட மொழிகட்குநிலையும் உயர்வுமின்மையானும், இலக்கண இலக்கிய ஆசிரியருட் பெரும்பாலார் பிராமணராயிருந்திருத்தலானும், பிற திராவிடர் தம்மை ஆரிய வழியினராகக் கூறிக் கொள்ளுதலானும், தமிழையும் தமிழரையும் புறக்கணித்து வருதலானும், திராவிடர் என்னும் பெயர் தமிழர் என்னும் பெயரினும் தகுதியற்றதாகும்..
மேலும் ஒரு நாட்டில் அயலாரையெல்லாம் அறவே வெறுத்தொதுக்கிவிட முடியாது. பன்னீராண்டு வாழ்க்கையில் ஒருவனுக்கு, ஒரு நாட்டில் குடியுரிமையுண்டாகி விடுகின்றது. பார்ப்பவர் கி.மு. 2000-ம் முதல் பல்வேறு காலத்திற் கூட்டங் கூட்டமாய் வந்து ர்ஹென்னாட்டிற் குடிபுகுந்து குடி நிலைத்து விட்டனர். தமிழ்நாட்டு நிலையான வாழ்நரெல்லாம் தமிழரென்றே கருதப்படத் தக்கார். இனத்தூய்மை கொண்ட நாடு இப்போது உலகத்தில் எதுவுமில்லை. உலக ஒற்றுமையும் உலகப் பொது ஆட்சியும் பேசப்படும் இக்காலத்தில் மொழி, பழக்கவழக்கம், பண்பாடு முதலியவற்றில் மட்டும் தமிழர்தம் தூய்மையைக் காத்துக் கொள்ள முடியுமேயன்றி, இனத்தில் முடியாது. ஆகையால், தமிழன் - தமிழ்ப் பகைவன் என்ற பாகுபாடே இக்காலைக்கேற்கும். பார்ப்பனராயினும் தமிழன்பர் தமிழரே. பார்ப்பனரல்லாதாராயினும் தமிழ்ப் பகைவர் தமிழரல்லாதோரே. இக்கொள்கையை இறுகக் கடைப்பிடிப்பின், தமிழுக்கும் தமிழருக்கும் என்றுங் கேடில்லை; ஆக்கமே உண்டாகும்.
ஆங்கிலேயர் ஒரு கலவை இனத்தாராயிருப்பினும், தம்மை ஆங்கிலேயர் என்று தம் மொழிப் பெயரால் அழைக்கின்றனரேயன்றி, அவருக்கும் தெல்லாந்தருக்கும், செருமானியருக்கும் பொதுவான தியூத்தானியர் என்னும் தொகுதியினப் பெயரால் அழைப்பதில்லை. அதுபோன்றே, தமிழரும் தம்மைத் தமிழ் மொழிப் பெயரால் தமிழர் என்றே அழைக்க வேண்டுமேயன்றித் திராவிடர் என்னும் தொகுதியினப் பெயரால் அழைக்கக் கூடா து.
தமிழ், வடமொழித் துணை வேண்டாத தனி மொழி எனக் கொள்ளுதலும், வட சொற் கலப்பின்றித் தமிழைத் தூய்மையாக வழங்குதலும், இந்திய நாகரீகம் தமிழ் நாகரீகம் என்று த்ளிதலும், பிறப்பால் சிறப்பில்லை என்பதைக் கடைப்பிடித்தலும், கல்வியையும் அலுவற்பேற்றையும் எல்லார்க்கும் பொதுவாக்குதலும், இவ்விலக்கணங்களைக் கொண்டவரெல்லாம் தமிழரென்றே துணிந்து, தமிழுக்கும் தமிழருக்கும் கேடாக அரசியற் கட்சியார் கூறும் வீண் வம்பு வெற்றுரைகளையெல்லாம் செவிக்கொள்ளாது விடுத்துத் தமிழர் கடைதேறுவாராக.."33
பாரதிதாசன் சொன்ன தமிழ்த்தேசியம்,,,
“தமிழர்க்குத் தமிழே தாய்மொழி என்றோம்
தமிழகம் தமிழர்க்குத் தாயகம் என்றோம்
தமிழ்நாட்டில் அயலார்க் இனி என்ன வேலை
தாவும் புலிக்கொரு நாய் எந்த மூலை
அவனவன் நாட்டில் அவனவன் வாழ்க - மற்
றயல் நாட்டைச் சுரண்டுதல் அடியோடு வீழ்க
துவளாத வாழ்க்கை உலகமெலாம் சூழ்க!
தூக்கிய கைகள் அறம் நோக்கித் தாழ்க!”


34

இறைநம்பிக்கை தேவையா தேவையில்லையா?
இறைவழிபாடு உளவியல் சார்ந்த மருந்துவம் போன்றது. வாழ்க்கையில்
சிக்கல்கள், துன்பங்கள் நேரும்போது மனிதர்களை மனநோய்க்கு ஆளாக விடாமல் நம்பிக்கையின் அடிப்படையில் காப்பாற்றுவது.
இறைவழிபாட்டைக் குறை சொல்ல முடியாது.
அதனை வைத்து செய்யப்படும் மூடநம்பிக்கைகள், அதீத மதப்பற்றின் காரணமாக மற்ற மதத்தவர் மீது எழும் வெறுப்புணர்வு போன்றவைதான் களையப்பட வேண்டியவை.
இறைநம்பிக்கையை களைந்துவிட்டால் மனிதன் மிருகமாகத்தான் இருப்பான்.
அறிவியல் நம்பிக்கையால் இறைநம்பிக்கை அற்றுப்போன அமெரிக்காவில் ஒரு தனிமனிதன் நூற்றுக்கணக்கான மக்களை சுட்டுத் தள்ளுகிறான்.
அந்த மனநோய் வரக்காரணம் இறைநம்பிக்கை அற்றுப் போவதே.
இப்போது அறிவியல் கல்வியால் எல்லோரிடமும் பகுத்தறியும் மனப்பான்மை வந்துவிட்டது.
இருந்தாலும் இறைநம்பிக்கை தேவைப்படுகிறது.
இறைநம்பிக்கையை அழிக்கவேண்டியதில்லை.
அதை பகுத்தறிவோடு ஒன்றிய இறைநம்பிக்கையாக மாற்றவேண்டும்.
எல்லாவற்றையும் குற்றம் மூடநம்பிக்கை என்றால் மனிதன் அம்மணமாகத்தான் சுற்றுவான்.
மனிதாபிமானம் வளராது.
இறைநம்பிக்கை அன்புணர்வை உண்டாக்குவது.
உண்மையான இறைநம்பிக்கை வன்முறையைத் தடுப்பது.
கடவுள் என்ற பெயரில்தான் மதக்கலவரங்கள் நடக்கின்றன என்று நீங்கள் வாதிடலாம்.
அவர்கள் உண்மையான இறைநம்பிக்கையாளர்கள் அல்ல.
சுயநலவாதிகள்.


35

*ஊருக்குதான் உபதேசம்.*
(படிக்கிற வயதில்)
சாதிமாறி கலப்பு காதல் செய்யச்சொல்லி கலகம் மூட்டுவது திராவிடிஸ்ட்டுகளின் வேலை.
நல்லா இருக்குதில்ல.
தமிழரைத் தமிழராக ஒன்றுபடவிடாமல்
"சாதி இந்துக்கள்- தாழ்த்தப்பட்ட சாதிகள்" என்றும்,
"ஆதிக்க சாதிகள்- தலித் சாதிகள்" என்றும்,
"சேரித்தமிழர்- ஊர்த்தமிழர்" என்றும் பிரித்துப் பேசி தமிழர்களிடம் பிரித்தாளும் சூழ்ச்சியை நன்றாகவே கையாளுகிறார்கள் இந்த திராவிடிஸ்ட்டுகள்.
எஸ்.வி.சேகர்
சு.ப.வீரபாண்டியனுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது
👇👇👇👇
......
உங்கள் குடும்பத் திருமணத்திற்கு சாதீய பெயருடன்தானே அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டுள்ளது?. அதில் உங்கள் பெயரும் இருக்கிறதே நண்பரே…!
........
சுப.வீ தீவிர சாதி மறுப்பாளர். எதிர்பாராத விதமாக அவர் தன் சாதியிலேயே திருமணம் செய்துகொள்ள வேண்டியதாயிற்று.
எதிர்பாராத விதமாக அவரது மூத்த மகனுக்கு தன் சொந்த சாதியிலேயே பெண் எடுக்க வேண்டியதாயிற்று.
எதிர்பாராத விதமாக அவரது இரண்டாம் மகனுக்கு தன் சொந்த சாதியிலேயே பெண் எடுக்க வேண்டியதாயிற்று
எதிர்பாராத விதமாக வாணியச் செட்டியார் அறக்கட்டளையில் உறுப்பினராக இருக்க வேண்டியதாயிற்று.. மற்றபடி சுப.வீ தீவிர சாதி மறுப்பாளர்.” என்பதுதான் அந்த வாட்ஸ் அப் பதிவு.
ஊருக்கு மட்டுமே உபதேசமோ?
இதுதான் தங்களின் சாதி மறுப்பு கொள்கையென்றால் நானும் சாதி மறுப்பாளன்தான். வாழ்க சாதீய மறுப்பு...ஹிஹிஹி. ===============


36

நான் திராவிடன் என்று சொல்லிக்கொண்டு எந்த தமிழனும் ஆந்திராவிலோ, கர்நாடகாவிலோ, கேரளாவிலோ , பாக்கிஸ்த்தானில் உள்ள பலுச்சிஸ்தான் மாகாணத்திலோ முதலமைச்சர் ஆகமுடியாது.
ஆனால் தமிழகத்தில் மட்டும் தெலுங்கரும், கன்னடரும், மலையாளியும் திராவிடர் என்று சொல்லிக்கொண்டு முதலமைச்சர் ஆகிவிட்டனர்.
பாக்கிஸ்த்தான் பிரிந்து செல்லாமல் இருந்திருந்தால் அங்குள்ள பலுச்சிஸ்த்தான் மாகாண பிராகூய் மொழிக்காரரும் திராவிடர் என்று சொல்லிக்கொண்டு தமிழக முதலமைச்சராக வந்திருப்பர்.
தமிழ்நாடு தமிழர்களின் தாய்நாடா
திராவிடர்களின் தாய்நாடா?


37

மொழிவாரி மாநிலப்பிரிவினையின் போது தமிழர் பகுதிகளை தமிழகத்தோடு சேர்க்கப் போராடாமல் திராவிட இயக்கங்கள் தமிழ்நாட்டிற்குத் துரோகம் செய்தன.
தமிழரசுக் கழகம் நடத்திய ம.பொ.சி யும், நேசமணியும் இல்லாதிருந்திருந்தால் திருத்தணியும் கன்னியாகுமரி மாவட்டமும், நெல்லை மாவட்டத்தின் செங்கோட்டை வட்டமும் கூட தமிழகத்தோடு இணைந்திருக்காது.
மொழிவாரி மாநிலப் பிரிவினையின் போது பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் "கன்னடனும், ஆந்திரனும், மலையாளியும் தனிமாநிலம் கேட்டு பிரிந்து செல்கிறார்கள். நாலு ஊர்களையாவது நமக்கு விட்டுவிடாமலா போகப்போகிறார்கள்" என்று கேணத்தனமாக பேசியவர் பெரியார்.
திராவிட இயக்கம் நடத்தியவர்கள் யாரும் தமிழரில்லை அதனால்தான் தெலுங்க, கன்னட இனப்பாசத்தால் திராவிட இயக்கங்களை நடத்திய தெலுங்கரும் கன்னடரும் தமிழர் பகுதிகளை ஆந்திராவுக்கும், கர்நாடகாவுக்கும், கேரளாவுக்கும் விட்டுக்கொடுத்தனர்.
தமிழர்களைத் திராவிடர் என்று சொல்லி ஏமாற்றுவதில் திராவிட இயக்கத்தார் வஞ்சகர்களே.
ஆந்திரக்காரனிடம் தமிழன் இழந்த நிலம்:
*சித்தூர் வட்டம்
*சந்திரகிரி (திருப்பதி) வட்டம்
*திருக்காளத்தி வட்டம்
*பாமனேறு வட்டம்
*குப்பம் ஜமீன் பகுதி
*நெல்லூர் பகுதி
கேரளத்திடம் தமிழன் இழந்த நிலம்:
*தேவிக்குளம் வட்டம்
*பீர்மேடு வட்டம்
*செங்கோட்டை வனப்பகுதி
*நெய்யாற்றங்கரை வட்டம்
*நெடுமாங்காடு கிழக்குப் பகுதி
*கொச்சின் சித்தூர் வட்டம்
*பாலக்காடு வட்டம்
மூணாறு
கர்நாடகாவிடம் தமிழன் இழந்த மண்:
*பாலக்காடு வட்டம்
*கொல்லங்கோடு வனப்பகுதி
*கொள்ளே காலம் வட்டம்
*கோலார் தங்கவயல்
*பெங்களூர் தண்டுப்பகுதி
ஸ்ரீலங்காவிடம் தமிழன் இழந்த மண்:
*கச்சத்தீவு
பசல் அலி ஆணைய அறிக்கை 10.10.1955 அன்று வெளிவந்தது. அன்றே பெரி யாரிடம் தினத்தந்திச் செய்தி யாளர் இது குறித்து நேர் காணல் நடத்தினார். தேவிகுளம் பீரிமேடு தொடர்பான செய்தி யாளர் கேள்வியும் பெரியார் அளித்த விடையும் வருமாறு:
நிருபர்: தமிழ் தாலுகாக்கள் (1).தேவிகுளம், (2).பீர்மேடு, (3).நெய்யாத்தங்கரை, (4). கொச்சின் சித்தூர் ஆகிய தாலுக்காக்கள் மலையா ளத்துடன் சேர்ந்து விட்டதே! இது பற்றி உங்கள் கருத் தென்ன?
ஈ.வெ.ரா: இது பற்றி எனக்குக் கவலை இல்லை. மலையாளத் துடன் அவைகளைச் சேர்க்க வேண்டியது தான்.
நிருபர்: கவலையில்லை என்கிறீர் கள். அவைகள் தமிழ் தாலுகாக்கள் தானே!
ஈ.வெ.ரா: ஆமாம். சமீபத்தில் சென்னைக்கு சர்தார் பணிக்கர் (மொழி வாரி மாகாணக் கமிட்டி மெம்பர்) வந்திருந்தார். அவரை நான் சந்தித்துப் பேசினேன்.
‘தொழிலுக்காக தமிழர்கள் அங்கு வந்தார்களே தவிர நிலம் மலையாளத்தைத்தான் சேர்ந்தது’ என்று பணிக்கர் சொன்னார். நானும் ’சரி’ என்று சொல்லிவிட்டேன்.
இவ்வாறு ஈ.வெ.ரா. கூறி முடித்தார். திருச்சியிலுள்ள பெரியார் மாளிகையில் இந்தப் பேட்டி நடந்தது. (தினத்தந்தி 11.10.1955)
பசல் அலி அறிக்கை வெளி யானவுடன் தி.மு.க குறிப்பிடும் படி எந்த எதிர்ப்பும் காட்ட வில்லை.
–எவ்வளவு இழந்தாலும் ஒருமைபாடென்றும் திராவிடனென்றுமே முழங்குவோம்.
ஏன் என்றால் தாங்கள் தமிழர்கள் அல்ல திராவிடர்கள்.
தமிழ்த்தேசிய அரசியல் தமிழர் நலம், தமிழக நலம் பேண தவிர்க்கமுடியாதது என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.


38

ஈ.வெ. ராமசாமி என்ற பெரியார் தனது 70 ஆம் வயதில் 26 வயதுடைய தனது வளர்ப்பு மகள் மணியம்மையைத் திருமணம் செய்து கொண்டார்.
பெரியார் கடைபிடித்த பகுத்தறிவுக் கொள்கை என்ன?
நல்லா புரிஞ்சிக்கோங்க மக்களே!
உங்ககிட்ட சொத்து இருக்குதா அது அடுத்தவனுக்கு போகக்கூடாது.
மகளையோ, வளர்ப்பு மகளையோ திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர் பெரியார்.
அவரின் வழியைக் கடைபிடித்த அவரது சீடர்கள் மூன்று, நான்கு மனைவிகளைக் கட்டிக்கொண்டு திராவிட கொள்கை இதுதான் என்று வாழ்ந்துகாட்டினர்.
பெரியார் எங்கள் தந்தை என்று சொல்கிறார்கள். குருவும் சீடர்களும் மக்களுக்குக் காட்டிய கொள்கை திராவிடக் கொள்கை.
நல்ல கொள்கைதான்.
தலைவர் என்பவர் மக்களுக்கு பண்பாட்டைக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
இப்படித்தான் வாழவேண்டும் என்று வாழ்ந்து காட்டவேண்டும்.
செய்த தவறுக்கு நியாயம் கற்பிக்க கூடாது.
70 வயசுக்கு 26 வயசு சரியா?
பெண்விடுதலை பேசினாராம் பகுத்தறிவில்லாத பெரியார்.
ஊருக்குத்தான் உபதேசம்.
தனக்கு இல்லை போலும்.


39

மீண்டும் திராவிட நாடு என்று சொல்லி தமிழகத்தில் வாழும் தெலுங்கர்கள் தமிழர்களை மடைமாற்றப் பார்க்கிறார்கள். தமிழ் மொழி உணர்வை மழுங்கடிக்கப் பார்க்கிறார்கள்.
தமிழரின் இன ஒற்றுமையைச் சீர்குலைக்கப் பார்க்கிறார்கள்.
1952 லேயே தெலுங்கர்கள் திராவிட நாடு வேண்டாம் விசால ஆந்திராதான் வேண்டுமென்று சொல்லி தெலுங்குநாட்டைப் பிரித்துக்கொண்டனர்.
1956 ல் கன்னடனும் மலையாளியும் திராவிட நாடு வேண்டாம் என்று சொல்லி கன்னட நாட்டையும் மலையாள நாட்டையும் பிரித்துக்கொண்டு சென்றுவிட்டனர்.
தமிழர்களே நாம் திராவிடரல்ல. நாம் தமிழர்.
தமிழர்க்குத் தேவை திராவிட நாடு அல்ல.
தமிழ்நாடு.
திராவிடர் என்று சொல்லிக்கொண்டு திராவிடநாடு பெற்று தெலுங்கனுக்கு கொத்தடிமையாக இருப்பதைக்காட்டிலும் இந்தியாவின் காலனி மாநிலமாக தமிழ்நாடு இருப்பது எவ்வளவோ சிறப்பு.
ஆந்திராவின் தெலுங்கர்களோ, கர்நாடகாவின் கன்னடர்களோ, கேரளாவின் மலையாளிகளோ, பலுச்சிஸ்த்தானின் பிராகூயர்களோ தங்களைத் திராவிடர் என்று சொல்லிக்கொள்வதில்லை.
நாம் மட்டும் எதற்கு திராவிடர் என்று சொல்லிக்கொள்ள வேண்டும்.
நாம் திராவிடர் அல்ல.
நாம் தமிழர்.


40

தமிழ்நாட்டைத் தமிழரே ஆளவேண்டும் என்று சொன்னால் "ஆளுக்கொரு கட்சிவைத்து
தமிழ்நாட்டை
ஆளப்போறான் தமிழன்" என்று சாதிக்கட்சிகளை நினைத்து கவலை தெரிவிக்கிறார் ஒரு தமிழார்வலர்.
தமிழர் என்ற ஓர்மை முதலில் உருவாகவேண்டும்.
"தமிழர் ஐக்கிய முன்னணி" அல்லது "தமிழர் தேசிய கூட்டணி" என்ற கூட்டணி அமைப்பை உருவாக்கி தமிழ்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது எளிது.
தமிழராட்சி அமைவது எளிது.
அதற்கு முதற்படி சாதிவெறி, சாதி உணர்வை அகற்றி தமிழர் என்ற எண்ணத்தை தமிழரிடம் உண்டாக்குவது.
தமிழர் கட்சிகள் இப்போது தங்களுக்குள் சாதிச்சண்டை செய்வதை நிறுத்தத் தொடங்கியுள்ளன.
சீமான், அன்புமணி, தினகரன், திருமாவளவன், வேல்முருகன், எடப்பாடி, பன்னீர், புதியதமிழகம் கிருஷ்ணசாமி ஆகியோர் தலைமைதாங்கும் கட்சிகள் ஒருவரை ஒருவர் தாக்கிப்பேசிக்கொள்ளாமல் இருக்க வேண்டும்.
தமிழர்கள் தலைமைதாங்கும் கட்சிகளை தமிழர் தேசிய கூட்டணிக்குள் கொண்டுவருவது எளிது.
பாமக வையும் விசிக வையும் மோதவிட திராவிடம் குறுக்குவழியைக் கையாளும்.
தமிழர்கள் தமிழராய் ஒற்றுமையாய் இருந்தால் திராவிடத்தின் பிரித்தாளும் சூழ்ச்சி எடுபடாமல் போகும்.
தமிழர் கட்சிகள் தங்களுக்குள் ஒருவரையொருவர் தாக்கிப்பேசிக்கொள்வதை நிறுத்திக்கொண்டாலே போதும்.
தமிழர் தேசிய கூட்டணி அமைவது உறுதி.
தமிழர் கட்சிகள் சாதிவேற்றுமை பார்க்காமல் கூட்டணி அமைத்தால் வெற்றி உறுதி.
ஆளப்போரான் தமிழன்.


41

பெரியார் உண்மையில் சாதி ஒழிப்பு செய்தாரா?
பெரியார் செய்தது சாதி ஒற்றுமை அல்ல.
சாதிகளுக்குள் வெறுப்புணர்வைத்தான் உண்டாக்கினார்.
சாதிகளை மூன்றாகப் பிரித்தார்.
பார்ப்பனர், சாதி இந்துக்கள், தாழ்த்தப்பட்டோர் என்று பிரித்து பார்ப்பனரல்லாத மற்ற சாதியினரோடு தாழ்த்தப்பட்ட சாதியினரை மோதவிடுவதற்கான வன்முறைச் சிந்தனைகளைத்தான் விதைத்தார்.
அதன் விளைவாக சாதிவெறிதான் தமிழ்நாட்டில் உண்டானது.
ஆணவப்படுகொலைகள் நடந்தது பெரியார் விதைத்த நச்சுவிதையால்தான்.
பெரியாரால் சாதிகள் ஒற்றுமை அடையவில்லை.
வெறுப்புணர்வை வளர்த்துக்கொண்டன.
பெரியாராலும் அவரின் வழிவந்த திராவிடர்களாலும் தமிழர்கள் தமிழராய் ஒற்றுமை அடையாமல் இருபெரும் சாதிப்பிரிவுகளாய் பிரிந்து அடித்துக் கொள்கின்றனர்.
தமிழர்க்குள் பிரிவினையே வளர்ந்திருக்கிறது.
திராவிட தெலுங்கர் தமிழ்நாட்டை ஆளுவது எளிதாகிவிட்டது.
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதைப் போல தமிழர்கள் சாதிகளாய் பிரிந்து அடித்துக்கொள்வது திராவிடர்களுக்குக் கொண்டாட்டம்.


42கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக